Published:Updated:

`காசி எம்.பி, காஞ்சிபுரம் வந்திருக்கிறேன்; நமது பிணைப்பு பிரிக்க முடியாதது!’ - பிரதமர் மோடி

`காசி எம்.பி, காஞ்சிபுரம் வந்திருக்கிறேன்; நமது பிணைப்பு பிரிக்க முடியாதது!’ - பிரதமர் மோடி
`காசி எம்.பி, காஞ்சிபுரம் வந்திருக்கிறேன்; நமது பிணைப்பு பிரிக்க முடியாதது!’ - பிரதமர் மோடி

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்குத் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். 

`காசி எம்.பி, காஞ்சிபுரம் வந்திருக்கிறேன்; நமது பிணைப்பு பிரிக்க முடியாதது!’ - பிரதமர் மோடி

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க - பா.ம.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்ற பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் தமிழிசை உள்ளிட்ட பா.ஜ.கவின் மூத்த நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். அதேபோல், அ.தி.மு.க சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரும் கலந்துகொள்கின்றனர். அதேபோல், இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

`காசி எம்.பி, காஞ்சிபுரம் வந்திருக்கிறேன்; நமது பிணைப்பு பிரிக்க முடியாதது!’ - பிரதமர் மோடி

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ``காஞ்சிபுரம் மண்ணுக்கு நான் தலைவணங்குகிறேன். நகரங்களில் சிறந்தது காஞ்சி என காளிதாசர் பாடியிருக்கிறார். காசி எம்.பியான நான் காஞ்சிபுரம் வந்திருக்கிறேன். நமது பிணைப்பு பிரிக்க முடியாதது’’ என்று கூறி தனது பேச்சைத் தொடங்கினார். தமிழகத்துக்கு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்ட பிரதமர் மோடி, உலகின் தொன்மையான செம்மொழிகளுள் ஒன்று தமிழ் என்று குறிப்பிட்டார். இரண்டு விஷயங்களைக் கூறிக்கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்ட மோடி, ``திரையுலகை மட்டுமல்ல தமிழக மக்களின் மனதையும் ஆட்கொண்ட எம்.ஜி.ஆரின் பெயர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குச் சூட்டப்படும். அதேபோல், தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு ஆகிய அறிவிப்புகளைத் தமிழில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார். 

`காசி எம்.பி, காஞ்சிபுரம் வந்திருக்கிறேன்; நமது பிணைப்பு பிரிக்க முடியாதது!’ - பிரதமர் மோடி

மேலும் அவர் பேசுகையில், `கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக எம்.ஜி.ஆர் பிறந்த இடம் உள்ளிட்ட இலங்கையில் உள்ள இடங்களுக்குச் சென்றிருந்தேன். அங்கு வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் நலனுக்காக அங்கு 14,000 வீடுகள் இந்தியா சார்பில் கட்டிக்கொடுக்க முடிவு செய்தோம். அதன்படி முதல் 1,000 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இலங்கையின் யாழ்ப்பாணத்துக்குச் சென்ற முதல் இந்தியப் பெருமை எனக்கு உண்டு. அங்குள்ள தமிழ் சகோதர, சகோதரிகளுடன் நான் கலந்துரையாடினேன். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், இந்தியாவிலோ அல்லது உலகின் எந்த மூலையிலோ ஏதேனும் ஒரு பிரச்னையை எதிர்கொண்டால், அவருக்கு உதவ முதல் ஆளாக நாம் சென்று நிற்போம். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் பிடியில் 8 மாதங்களுக்கு மேலாகச் சிக்கியிருந்த தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் பிரேமை உரிய நடவடிக்கை எடுத்து மீட்டோம். அதேபோல் மத்திய ஆசிய நாடுகளில் சிக்கித் தவித்த தமிழக நண்பர்களை மீட்டோம். பாகிஸ்தான் பிடியில் சிக்கியிருந்த விமானி அபிநந்தன் விவகாரம் குறித்து உலகுக்கே தெரியும். எனவே, அதை நான் திரும்பச் சொல்ல விரும்பவில்லை.

`காசி எம்.பி, காஞ்சிபுரம் வந்திருக்கிறேன்; நமது பிணைப்பு பிரிக்க முடியாதது!’ - பிரதமர் மோடி

அதேபோல், இலங்கையிலிருந்து 1900 மீனவர்களைப் பத்திரமாக தமிழகத்துக்கு மீட்டுக்கொண்டு வந்திருக்கிறோம். அவர்களில் சிலர் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள். இலங்கை அரசின் உதவியோடு அவர்களை நாம் மீட்டுக் கொண்டுவந்தோம். சவுதி இளவரசின் நேரடித் தலையீட்டால் அங்கு சிறையில் வாடிக்கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த 850க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட இருக்கிறார்கள். காஞ்சி நெசவாளர்கள் இந்த நாட்டின் பெருமைக்குரியவர்கள். ஜவுளித் துறையை முன்னேற்ற இந்த அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதுவரை 7,000 கோடி ரூபாய் அளவுக்கு நெசவாளர்களுக்கு மானியங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விசைத்தறிகளை மேம்படுத்துவதற்காக ரூ.2 லட்சம் அளவுக்கு கடனுதவி அளிக்கப்படுகிறது. சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் அரசு அக்கறை கொண்டுள்ளது. அரசின் தொடர் நடவடிக்கைகளால், 2013 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 42 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருக்கிறது’’ இவ்வாறு பல்வேறு துறைகளின் முன்னேற்றத்துக்காக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுப் பேசினார். 

`காசி எம்.பி, காஞ்சிபுரம் வந்திருக்கிறேன்; நமது பிணைப்பு பிரிக்க முடியாதது!’ - பிரதமர் மோடி

எதிர்க்கட்சிகளை விமர்சித்துப் பேசிய மோடி, ``தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அலட்சியமாகப் பேசிவரும் கருத்துகள் குறித்து நீங்கள் அறிவீர்கள். அவர்கள் வலிமையான இந்தியாவையும் விரும்பவில்லை; வலிமையான ராணுவத்தையும் விரும்பவில்லை. இந்தியா பன்முகத்தன்மை கொண்டது. மாநிலங்களின் நலன்களும் முன்னேற்றமும் இல்லாமல் நாடு முன்னேற முடியாது. மாநில உரிமைகளுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி என்றுமே முக்கியத்துவம் கொடுக்கும். டெல்லியில் அமர்ந்துகொண்டு முடிவெடுக்கும் தலைமை நமது தலைமை கிடையாது. மக்களே நமக்கு என்றுமே தலைமை. ஆனால், காங்கிரஸ் கட்சி டெல்லியிலே அமர்ந்துகொண்டு முடிவெடுக்கும் தலைமையைக் கொண்டிருக்கிறது. குடும்ப நலனை மையமாகக் கொண்டு அவர்கள் முடிவெடுக்கிறார்கள். காங்கிரஸை ஆதரிப்பது டெல்லியில் குளிர்சாதன அறையில் அமர்ந்துகொண்டு முடிவெடுப்பதற்குச் சமம். 

மோடி எதிர்ப்பு என்பது எதிர்க்கட்சிகளை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டது. மோடியை அதிகம் அவமதிப்பது யார் என்பது குறித்து அவர்களிடையே போட்டியே நிலவுகிறது. சிலர் என்னையும் என் குடும்பத்தையும் அவமதிக்கிறார்கள். சிலர் எனது ஏழ்மையான பின்னணியை அவமதிக்கிறார்கள். இன்னும் சிலரோ எனது சாதி குறித்து பேசுகிறார்கள். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என்னைக் கொல்வது குறித்து பேசியிருக்கிறார். ஆனால், அதையெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை. நான் இங்கு பணியாற்றவே வந்திருக்கிறேன்’’ என்று மோடி பேசினார்.