அரசியல்
அலசல்
Published:Updated:

கம்யூனிஸம் தோற்கவில்லை... தோற்றது மக்களே!

கம்யூனிஸம் தோற்கவில்லை... தோற்றது மக்களே!
பிரீமியம் ஸ்டோரி
News
கம்யூனிஸம் தோற்கவில்லை... தோற்றது மக்களே!

பி.ஜே.பி-யை வீழ்த்திய ஒரே தோழர் நடராஜன் அதிரடி...

ந்துத்துவா வாக்குவங்கி கணிசமாக இருப்பதாகக் கருதப்படும் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் சி.பி.எம் வேட்பாளர் பி.ஆர் நடராஜன் 1,79,000 வாக்குகள் வித்தியாசத்தில் பி.ஜே.பி-யின் வி.ஐ.பி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை வீழ்த்தியிருக்கிறார். இந்தியாவில், பி.ஜே.பி-யை நேரடியாக வீழ்த்திய ஒரே ஒரு கம்யூனிஸ்ட் வேட்பாளர் நடராஜன் மட்டுமே! இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்துக்குச் செல்லவிருக்கும் நடராஜனைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

“கருத்துக்கணிப்புகள் பலவும் ‘சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெறப் போகிறார்’ என்றே வெளியாகின. வாக்கு எண்ணிக்கையின்போதும் தொடக்கத்தில் சி.பி.ஆர் முன்னிலையில் இருந்ததாகத் தகவல் வெளியானதே?”

“கருத்துக்கணிப்புகள் பலவாறு வந்தபோதிலும் எங்கள் வெற்றியில் நம்பிக்கைக் கொண்டிருந்தோம். ஏனெனில், தமிழகத்தில் மோடிக்கு எதிராகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தார்கள். அதேசமயம், வாக்கு எண்ணிக்கையின்போது சூலூர் சட்டமன்றத் தொகுதியில், ஒரு பூத்தில் மட்டுமே சி.பி.ராதாகிருஷ் ணன் முன்னிலையில் இருந்தார். மற்ற அனைத்துச் சுற்றுகளிலும் நாங்களே முன்னிலை வகித்தோம்.”

கம்யூனிஸம் தோற்கவில்லை... தோற்றது மக்களே!

“மாபெரும் வரலாற்றைக்கொண்ட கம்யூனிஸ்ட்கள், தற்போது தேசிய அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதே?”

“இது சிறு பின்னடைவுதான். அந்தப் பின்னடைவுக்கும் பல காரணங் கள் இருக்கின்றன. அவற்றைப் பரிசீலனை செய்து தீர்வுகள் பெறப்படும். இந்தச் சூழலையும் கடந்து, மீண்டும் எழுச்சிபெறுவோம். கம்யூனிஸம் என்பது ஒரு சித்தாந்தம்; மக்கள் இயக்கம். அது எங்கு தோற்கிறதோ, அங்கு மக்கள் தோற்கிறார்கள். இப்போதுகூட இங்கே கம்யூனிஸம் தோற்கவில்லை. மக்கள்தான் தோற்றிருக்கிறோம்; மக்களாகிய நாங்கள் மீண்டெழுவோம்.’’

“80-களுக்குப் பின்னர் தேர்தல் அரசியல் களத்துக்கு வந்த பி.ஜே.பி, கடந்த இரண்டு தேர்தல்களிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதே?”

“மக்களை ஒற்றுமைப்படுத்தும் இயக்கங்களுக்கு மத்தியில், மதம், சாதி ரீதியாக மக்களைப் பிளவுபடுத்திக் குரல் கொடுப்பது எளிது. அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள். ‘தேர்தலுக்குப் பிறகு அனைவரும் ஒற்றுமையாக இருக்கலாம்’ என்று சொல்லிய மறுநாளே பசு குண்டர்கள், அப்பாவி மக்கள் மூன்று பேரை அடித்துக் கொன்றுள்ளனர். பி.ஜே.பி-யின் சொல் ஒன்று, செயல் வேறாக இருக்கிறது.”

“கோவை தொகுதியில், ஜி.எஸ்.டி வரியால் பாதிக்கப் பட்டுள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?”

“ஜாப் ஆர்டருக்கு ஜி.எஸ்.டி வரியை முழுமையாக ரத்து செய்ய முயற்சிசெய்வோம். முழுமை செய்யப்பட்ட பொருளுக்குக் குறைந்தபட்ச வரி விதித்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவோம்.”

“பி.ஜே.பி-க்கு வாக்கு அளிக்காமல், மக்கள் தவறு செய்துவிட்டதாகத் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறாரே?”

“அவருக்கு அரசியல் தெரியவில்லை. சிறுபிள்ளைத் தனமாகப் பேசுகிறார். தமிழகத்துக்குத் தேவையான திட்டங் களை எப்படி வாங்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்.”

- ரா.கௌசல்யா
படங்கள்: தி.விஜய்