Published:Updated:

ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் வலியை பா.ஜ.க வாக்குகளாக்க முயல்கிறது கே.எஸ்.அழகிரி தாக்கு!

ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் வலியை பா.ஜ.க வாக்குகளாக்க முயல்கிறது கே.எஸ்.அழகிரி தாக்கு!
ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் வலியை பா.ஜ.க வாக்குகளாக்க முயல்கிறது கே.எஸ்.அழகிரி தாக்கு!

``மன்மோகன் சிங் ஆட்சியிலும் துல்லிய தாக்குதல்கள் நடந்திருக்கிறன. ராஜதந்திரம் கருதி அதை வெளியே சொல்லவில்லை. ராணுவ வீரர்களின் தியாகத்தை, அவர்கள் குடும்பத்தினரின் வலியை பா.ஜ.க. வாக்குகளாக மாற்ற முயல்கிறது’’ எனக் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் வலியை பா.ஜ.க வாக்குகளாக்க முயல்கிறது கே.எஸ்.அழகிரி தாக்கு!

கன்னியாகுமரியில் வரும் 13-ம் தேதி ராகுல்காந்தி கலந்துகொள்ளும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடக்கிறது. ராகுல்காந்தி நிகழ்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நாகர்கோவிலில் நடந்தது. இதில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ``ராகுல்காந்தி வரும்போது வெறும் கூட்டத்தைக் கூட்டுவது மட்டும் நமது நோக்கம் அல்ல. ராகுல் காந்தி வரும்போது இந்தியாவே திரும்பிப் பார்க்க வேண்டும். ஆகவேதான் கன்னியாகுமரியைத் தேர்ந்தெடுத்தோம். ஆட்சி மாற்றம் மட்டும் நமது குறிக்கோள் அல்ல. ராகுல் பிரதமர் ஆக வேண்டும் என நினைத்திருந்தால் இதற்கு முன்பே ஆகியிருக்கலாம். மன்மோகன் சிங் எப்போது வேண்டுமானாலும் ஆட்சியை ராகுல்காந்தியிடம் கொடுக்கத் தயாராக இருந்தார். ஆனால், ராகுல்காந்தி மக்களைப் பற்றி புரிந்துகொள்கிறேன் என்று கூறி சுற்றுப் பயணம் செய்தவர்.

ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் வலியை பா.ஜ.க வாக்குகளாக்க முயல்கிறது கே.எஸ்.அழகிரி தாக்கு!

மோடியைப் போன்று அல்லாமல் தனது கட்சித் தலைவர்களுக்கு மரியாதை கொடுப்பவர் ராகுல்காந்தி. மேடையில் பேச மட்டுமே தெரிந்தவர் மோடி. காங்கிரஸ் ஆட்சியில் 70,000 கோடி ரூபாய் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தோம். தமிழகத்தில் கலைஞர் ஆட்சியில் 7,000 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்தார். கடன் தள்ளுபடி மட்டும் தீர்வாகாது என்று கூறும் மோடி, அதற்கு மாற்றுத் திட்டத்தை ஏன் கூறவில்லை. விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் கொடுப்பதுதான் மோடியின் மாற்றுத்திட்டமா. மோடி அரசாங்கத்தால் தீர்க்க முடியாத, செயல்படுத்த முடியாத பிரச்னைகள் நிறைய இருக்கின்றன. நம் ராணுவத்துக்கு நன்கு பலம் உண்டு. துல்லியத் தாக்குதல் என்பது பா.ஜ.க ஆட்சியில் மட்டும் நடந்தது அல்ல. மன்மோகன் சிங் ஆட்சியிலும் துல்லியத் தாக்குதல்கள் நடந்திருக்கிறன. ராஜதந்திரம் கருதி அதை வெளியே சொல்லவில்லை.

ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் வலியை பா.ஜ.க வாக்குகளாக்க முயல்கிறது கே.எஸ்.அழகிரி தாக்கு!

தாக்குதல் நடந்தால் அதை ராணுவத் தளபதி சொல்ல வேண்டும். ஆனால், பா.ஜ.க தலைவர் அமித்ஷா சொல்கிறார். ராணுவ வீரர்களின் தியாகத்தை, ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் வலியை பா.ஜ.க வாக்குகளாக மாற்ற முயல்கிறது. இந்திய ஊடகங்கள் இந்த உண்மைகளை வெளியே கொண்டுவந்துவிட்டன. ரஃபேல் விவகாரம் குறித்து எழுதிய `இந்து’ ராம் மீது நடவடிக்கை எடுப்பதாக சர்வாதிகாரத்தோடு மோடி கூறுகிறார். தனது கட்சியினரை அடக்கியதுபோன்று எதிர்க்கட்சிகளையும் அடக்கிவிடலாம் என மோடி நினைக்கிறார். நாம் கொள்கைக் கூட்டணி; பேரம்பேசும் கூட்டணி அல்ல. கன்னியாகுமரியில் ராகுல்காந்தியைத் திணறடிக்கும் விதமாகக் கூட்டத்தைக் கூட்டி வெற்றிபெற வைக்க வேண்டும்’’ என்றார்.