Published:Updated:

`ரேபரேலியில் சோனியா; அமேதியில் ராகுல் காந்தி!’ - காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

`ரேபரேலியில் சோனியா; அமேதியில் ராகுல் காந்தி!’ - காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்
`ரேபரேலியில் சோனியா; அமேதியில் ராகுல் காந்தி!’ - காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட  வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. 

மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி ஆகிய கட்சிகள், காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அந்தக் கட்சிகள் இடம்பெறவில்லை. அவை இரண்டும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. தமிழகத்தில், காங்கிரஸ் கட்சி தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி என 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 


மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், 15 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கிறது. குஜராத் மாநிலத்தில் 4 தொகுதிகள் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கிறது. அதன்படி, ரேபரேலி தொகுதியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது ஃபேவரைட் தொகுதியான அமேதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  குஜராத்தின் வதோதரா தொகுதியில், பிரசாந்த் படேல் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ஃபரூக்காபாத் தொகுதியில் சல்மான் குர்ஷித் போட்டியிடுவார் என்றும் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.