Published:Updated:

சட்டசபை தேர்தல் வராதா? என்ற ஏக்கம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது: மு.க. ஸ்டாலின்

நாகர்கோவில்: நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் சேர்த்து வராதா? என தமிழக மக்கள் ஏக்கத்துடன் எதிர்பார்ப்பதாக தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தி.மு.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை கட்சியின் தலைவர் அறிவிப்பார். ஜனநாயக முறைப்படி இந்த முடிவு வெளியிடப்படும்.

தமிழக சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தேர்தல் வராதா? என்ற ஏக்கப் பெருமூச்சு தமிழக மக்களிடம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

##~~##
அ.தி.மு.க. அரசின் கடந்த 2 ஆண்டு ஆட்சியில், தமிழக சட்டமன்றத்தின் 110 என்ற விதியின் கீழ் ஏராளமான அறிவிப்புகள் வெளியானது. இவை நிதி ஒதுக்கீடு செய்யாமல் அறிவிக்கப்படுகிறது. ஈழத்தமிழர் பிரச்னையில் அங்கு மிச்சம் இருக்கும் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு. டெசோவின் குறிக்கோளும் தி.மு.க.வின் கொள்கையும் அதுதான்" என்றார்.