Published:Updated:

பிஜேபி ஆதரவுடன் நிறைவேறியது பென்ஷன் மசோதா!

புதுடெல்லி, மார்ச்.24,2011

நாடாளுமன்றத்தில் பிஜேபியின் ஆதரவுடன் பென்ஷன் திருத்த மசோதா இன்று நிறைவேறியது. ##~~##

மக்களவையில் பென்ஷன் திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதன் மீது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் தலைவர் பாசுதேவ் ஆச்சாரியா வற்புறுத்தினார்.

அப்போது அவையில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் அமைச்சர்கள் உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் பலரும் இல்லை.

இந்தச் சூழலில் ஓட்டெடுப்புக்கு மக்களவைத் தலைவர் உத்தரவிட்டார். 543 பேர் கொண்ட அவையில் 159 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.

இதனால், ஓட்டெடுப்பில் அரசின் மசோதா தோற்கும் நிலை ஏற்பட்டது. இதை உணர்ந்த பாரதிய ஜனதா தலைவர்கள், அவையில் இருந்த தங்களது 30 எம்.பி.க்களையும் மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளிக்கும் படி உத்தரவிட்டனர்.

இதனால் மசோதாவுக்கு ஆதரவாக 115 எம்.பி.க்களின் ஆதரவு கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவையில் மசோதா நிறைவேறியது.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி எம்.பி.க்கள் 43 பேர் வாக்களித்து இருந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு