‘மக்கள் செல்வர் அவர்களே...’ எனப் பேச்சைத் தொடங்கியவரிடம் “சும்மா உட்காருப்பா. உங்களைத் துதிபாட இங்க கூப்பிடல” என்று தினகரன் கடுப்படிக்க, இப்படித்தான் தொடங்கியது ஜூன் 1-ம் தேதி சென்னை அசோக் நகர், அ.ம.மு.க தலைமைக் கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

பூத் வாரியாக அ.ம.மு.க பெற்ற வாக்கு எண்ணிக்கையைக் கையில் வைத்தபடி, காலை 11 மணிக்குத் தினகரன் மேடையில் வந்து அமரவும் நிர்வாகிகள் பலருக்கும் வியர்த்துவிட்டது. 22 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை வாங்கி, (5.38 சதவிகிதம்) மூன்றாவது பெரிய கட்சி இடத்தை அ.ம.மு.க பெற்றிருந்தாலும் தினகரன் எதிர்பார்த்த ‘ரிசல்ட்’ இதுவல்ல. கூட்டத்தில் வேட்பாளர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

ஓசூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் புகழேந்தி பேசுகையில், “என் தொகுதியில யாருமே வேலை பார்க்கல. தமிழ்நாட்டுக்குள்ளேயே ஒரு பொறுப்பு கொடுத்தீங்கன்னா, கட்சி வேலையைத் தெம்பா பார்ப்பேன்” என்றாராம். அதற்கு, “உங்க தொகுதியில யார் வேலை பார்த்தது, யாரு சும்மா ஊரு சுத்துனதுனு எனக்கு நல்லாத் தெரியும். வேணும்னா உங்களைக் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளரா அறிவிச்சிடுவோம்” என்று தினகரன் நக்கலாகக் கூற, புகழேந்தி ‘கப்சிப்’.

“சில விஷயங்களை இங்க பேச முடியல. தலைவர் தனித்தனியாக அழைத்துப் பேசினால், மனசுல உள்ளதை வெளிப்படையாகச் சொல்வோம்” என்று சில வேட்பாளர்கள் பேசியிருக்கின்றனர். அதற்கு “இங்க பேச வேண்டியத மட்டும் பேசுங்க. தனியா அப்பறம் பேசிக்கலாம்” என்று சொல்லியிருக்கிறார் தினகரன்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் தாம்பரம் நாராயணன், “ஆளுங்கட்சி என்கிற மனோபாவம்தான் நம் கட்சியினரிடம் இருக்கிறது. அ.தி.மு.க-வுடன் இணைந்துவிடுவோம் என்கிற மிதப்பிலேயே, பலரும் தேர்தல் வேலை பார்க்கவில்லை. ஓர் இடத்துக்குத் தலைவர் வருகிறார் என்றால், 5,000 பேரைக் கூட்டிவருபவர்கள், சுத்துப்பட்டு 50 கிராமங்களில் கிளைக் கழகத்தை வலுப்படுத்தியிருந்தாலே கட்சி ஜெயித்திருக்கும்” என்று பேச, கூட்டத்தில் அமர்ந்திருந்த பல மாவட்டச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் முகம் வெளிறிவிட்டதாம்.

இறுதியாக மைக் பிடித்த தினகரன், “அம்மா இருந்தபோது, ஒவ்வொரு தொகுதிக்கும் தனித் தனியாக ஆள் போட்டுக் கண்காணிப்போம். அந்த ரிப்போர்ட் என்கிட்டதான் இருக்கு. தேர்தல் செலவுக்குக் கொடுத்த பணம் ஒழுங்கா போய்ச் சேரல. மாவட்டச் செயலாளர்கள், கீழ்மட்ட நிர்வாகிகள் பலரிடமும் இணக்கம் இல்லை. ஆளுங்கட்சி மனநிலையோடுதான் செயல்படுறீங்க. அ.தி.மு.க-வுல மீண்டும் போய் இணைவோம் என்கிற நினைப்பு இருந்தால், அடியோடு மாத்திக்கோங்க. நாம ஒருபோதும் அ.தி.மு.க-வுடன் இணைய மாட்டோம்.

1,000 பூத்துல நமக்கு ஒரு ஓட்டுகூட வரவில்லை. நம்ம ஆட்கள் சரிவர வேலை பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. சும்மா பேசிட்டு போயிடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க. அம்மா பாணியில இனி நடவடிக்கை கடுமையாக இருக்கும்” என்று கர்ஜித்துவிட்டுக் கிளம்பியிருக்கிறார்.

அ.ம.மு.க-வுக்குள் நிலவும் பண்ணையார்த்தனம் ஒழிந்தால்தான் கட்சி உருப்படும் எனத் தொண்டர்களே குமுறுகிறார்கள்.

சுதாரிக்காவிட்டால் தினகரன் பாடு திண்டாட்டம்தான்!

- ந.பொன்குமரகுருபரன்