சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி பதவிக்கான போட்டி உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. அரசியல் பரபரப்புகளுக்கு நடுவே, ‘ஆடுபுலி ஆட்டத்தில், ஜெயிக்கப்போவது ஜாபர் சேட்டா... திரிபாதியா?’ என்பது தமிழகக் காக்கிகள் மத்தியில் விவாதிக்கப்படும் ஹாட் டாபிக்.

சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யான டி.கே.ராஜேந்திரனின் பதவி நீட்டிப்பு ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த டி.ஜி.பி பதவிக்கு ஜாபர் சேட், திரிபாதி, ஜாங்கிட், காந்திராஜன் உள்ளிட்டோர் பெயர்கள் முணுமுணுக்கப் படுகின்றன. இந்த நிலையில், ஆளும் தரப்புக்கு ஜாபர் சேட் சில விஷயங்களைச் செய்து கொடுத்துள்ளதால் அவரது பெயர் ரேஸில் முதலாவதாக இருப்பதாகக் காவல்துறை வட்டாரத்தில் ஒரு பேச்சு சுழன்று கொண்டிருக் கிறது.

இதுகுறித்து காவல்துறையின் மூத்த அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “சட்டம் ஒழுங்கு டிஜி.பி பதவிக்கான போட்டி யில் கடும்யுத்தமே நடக்கிறது. ஓய்வுபெறுவதற்குக் குறைந்தது ஆறுமாத கால அளவு இருக்கும் ஒருவரைத்தான் டி.ஜி.பி-யாக நியமிக்கமுடியும். ஜாங்கிட் ஆகஸ்ட் மாதத்திலும், காந்திராஜன் அக்டோபர் மாதத்திலும் ஓய்வுபெறுவதால், இந்தப் போட்டியில் இருவருமே இல்லை. 1986-ம் வருட பேட்ச்சை சேர்ந்த ஜாபர் சேட்டுக்கு 2020 டிசம்பர் வரை சர்வீஸ் இருக்கிறது. 1985-ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த திரிபாதிக்கு 2020 மே மாதம் வரை சர்வீஸ் இருக்கிறது. அதனால், எப்படியாவது டி.ஜி.பி பதவியைப் பெற்றுவிட வேண்டும் என்று இருவருமே ஆக்ரோஷமாக மோதுகிறார்கள்.

ஓய்வுபெறவிருக்கும் டி.ஜி.பி-யான டி.கே.ராஜேந்திரனுக்கும் ஜாபர் சேட்டுக்கும் இடையே நல்ல நட்பு உண்டு. ராஜேந்திரனுக்குப் பிறகு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி ஆகும் வாய்ப்பு தனக்கு இருப்பதைக் கணித்த ஜாபர் சேட், அதற்கான காய் நகர்த்தலை மூன்று வருடங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டார். ஜெயலலிதாவின் மறைவு வரையில், மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த ஜாபர் சேட், போலீஸ் அகாடமியின் ஏ.டி.ஜி.பி-யாகச் சென்னைக்குப் பணிமாறுதல் ஆனார்.

சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யாக இருக்கும் ராஜேந்திரனின் ஒத்துழைப்புக் கிடைத்தால், தனக்கு டி.ஜி.பி பதவி எளிதாகக் கிடைத்துவிடும் என நினைத்த ஜாபர் சேட், இதற்காக ராஜேந்திரனின் தயவை நாடினார். போலீஸ் அகாடமியிலிருந்து சி.பி.சி.ஐ.டி ஏ.டி.ஜி.பி-யாக ஜாபர் சேட் அமர்ந்தார். பிறகு, டி.ஜி.பி பதவி உயர்வும் வந்து சேர்ந்தது. அப்போது, ராஜேந்திரனின் பெயரை குட்கா வழக்கிலிருந்து நீக்குவதற்கு ஜாபர் சேட் உதவுவார் என்றும் பேச்சிருந்தது.

அங்கிருந்து சிலபல காய்நகர்த்தல்கள் மூலம் ஆளும்தரப்பை நெருங்கிவிட்டார் ஜாபர் சேட். அதன் பின்பே யு.பி.எஸ்.சி-க்கு அனுப்பப்பட்ட சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பரிந்துரை பட்டியலில், அவரின் பெயரும் இடம்பெற்றது. இதற்கு முன்னதாக, 2011-ம் ஆண்டில் வீட்டு வசதி வாரியம் மூலமாகத் தன் மனைவி பெயரில் முறைகேடாக வீடு வாங்கிய புகாரில் ஜாபர் சேட்டை சஸ்பெண்ட் செய்தார் ஜெயலலிதா. இந்த வழக்கில் அவர் உட்பட ஆறு பேர்மீது குற்றப் பத்திரிகையும் தாக்கலானது.

‘சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக நியமிக்கப்படும் ஒருவர், துறை ரீதியிலான நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கக் கூடாது’ என்பதால், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் வரை சென்று, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்துவிட்டார் ஜாபர் சேட். அதை யடுத்து, தன் மீதான குற்றப் பத்திரிகையை நீக்க உத்தரவிடக்கோரி 2015-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால், அதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை தடையாக இருந்தது.

இந்த நிலையில், கடந்த மே 22-ம் தேதி ‘டி.ஜி.பி பதவிக்கான தேர்வு நடைபெற இருக்கிறது. குற்றப் பத்திரிகை நிலுவையில் இருப்பதால், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவிக்கு வருவதற்குத் தடை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி மீது வழக்கு பதிவதற்கு முன்னர் மத்திய உள்துறையின் அனுமதி கோரப்பட வேண்டும். ஆனால், இந்த விதி இவ்வழக்கில் பின்பற்றப்பட வில்லை. ஏற்கெனவே சஸ்பெண்ட் உத்தரவை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ரத்து செய்துவிட்டது. அதைக் கருத்தில்கொண்டு, குற்றப் பத்திரிகையை நீக்க உத்தரவிட வேண்டும்’ என்று ஜாபர் சேட் தரப்பில் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. கடந்த முறை தடைபோட்ட லஞ்ச ஒழிப்புத் துறை, இந்தத் தடவை பல்டியடித்தது. அதன் சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், ‘ஜாபர் சேட் தரப்பின் வாதம் நியாய மானது. அதற்கு நான் உடன்படுகிறேன்’ என்று பதில் அளித்துள்ளார்.

இதையடுத்து, குற்றப்பத்திரிகையை நீக்குவது தொடர்பாக 2015-ல் போட்ட வழக்கை ஜாபர் சேட் வாபஸ் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். அதற்கு ஒப்புதல் அளித்ததுடன், குற்றப்பத்திரிகையை நீக்கவும் மே 23-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது” என்றவர்கள், இதன் தொடர்ச்சியாக எதிர்த்தரப்பினர் மேற்கொள்ளும் காய்நகர்த்தல்களையும் பகிர்ந்துகொண்டார்கள்.

“ஒரு நீதிபதியின் முன்புள்ள வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்றால், அதே நீதிபதியிடம்தான் செல்லவேண்டுமே தவிர, மற்றொரு நீதிபதி மூலம் வாபஸ் பெறுவதை அனுமதிக்க முடியாது. அந்த அதிகாரம் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குத்தான் உள்ளது என்று வழக்கறிஞர்களை வைத்து உச்ச நீதிமன்றம் வரையில் காய் நகர்த்தியுள்ளனர்” என்றனர்.

“ஜாபர்சேட்டை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாகக் கொண்டு வருவதில் ஆளுந்தரப்புக்கு என்ன லாபம்?” எனக் கேட்டோம். “தி.மு.க. பெருந்தலைகள் பற்றிய புகார்கள் எல்லாம் ஜாபருக்கு அத்துபடி. சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக வந்தமர்ந்தால், வாரத்துக்கு ஒரு வழக்கு போட்டு தி.மு.க-வை திணறடிக்கலாம் என ஜாபர் வழங்கிய ஆலோசனைக்கு ஆளும்தரப்பு அசைந்துவிட்டது. ஜெயலலிதா இருந்தவரையில், ஜாபரால் தலைநகருக்குள் நுழையக்கூட முடியவில்லை. இப்போது அவர் ஆளுந்தரப்புக்கு வழங்கிய ஒரு உத்தரவாதம்தான், அவருக்குச் சாதகமானது” என்றனர்.

இதுகுறித்துப் பேசும் ஜாபர் சேட் ஆதரவாளர்கள், ‘‘வீட்டுவசதி வாரிய ஊழல் தொடர்பான புகாரில், மத்திய உள்துறையின் அனுமதியின்றி வழக்குப் பதிந்தது தவறு. அவர் பக்கம் இருக்கும் நியாயத்தைப் புரிந்துகொண்டுதான் உயர் நீதிமன்றமும் குற்றப்பத்திரிகையை நீக்கியது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், அவரைப்பற்றி தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். யாருக்கும் அவர் உத்தரவாதம் அளித்து டி.ஜி.பி ஆக வேண்டியதில்லை. நியாயம் அவர் பக்கம் இருப்பதால், அவர் டி.ஜி.பி ஆவது நிச்சயம்” என்கிறார்கள்.

எதிர்த்தரப்பினரோ, “தி.மு.க ஆட்சிக்காலத்தில், ஜாபர் சேட் என்னவெல்லாம் செய்தார் என்பது நாட்டுக்கே தெரியும். எனவே, அவர் போன்றவர்கள், டி.ஜி.பி பதவியில் அமர்வது சரியல்ல” என்கிறார்கள். ஜாபரா? திரிபாதியா...? விடை இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

- நமது நிருபர்

ராஜேந்திரனுக்கு தொடர்பில்லை!

டி.ஜி.பி-யான ராஜேந்திரன் இந்த விஷயத்தில் இழுக்கப் படுவது குறித்துப் பேசிய சிலர், “டி.ஜி.பி பதவிக்கான போட்டிக்கும் ராஜேந்திர னுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதற்கான அதிகாரமும் அவருக்கு இல்லை. குட்கா வழக்கை உயர் நீதிமன்றம், எதிர்க் கட்சிகள், மத்திய அரசு என அனைவருமே கண்கொத்திப் பாம்பாக கண்காணிக்கும் நிலையில், அதிலிருந்து தனது பெயரை மட்டும் ராஜேந்திரன் எப்படி நீக்க முடியும்? சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யாக இவர் பணி நீட்டிப்பு பெற்றது அதிகாரிகள் பலருக்கும் பிடிக்கவில்லை. அவர்கள்தான் வயிற்றெரிச் சலில் இப்படியான வதந்தி களைக் கட்டவிழ்த்து விடுகின்றனர்” என்றனர்.