“அப்னே மானே குஷி தோ?’’

தனக்காகப் பல மணி நேரம் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் அவர் கேட்கும் முதல் கேள்வி இதுதான்... ‘‘நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?’’ என்பதுதான் அதன் அர்த்தம்.

அவர்கள் “அமே குஷி’’ (நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்) என்று உற்சாகமாகக் கூறுகிறார்கள். அந்த கோஷத்திலேயே அவர்களின் சந்தோஷம் எட்டுத்திக்கும் எதிரொலிக்கிறது. அவர்களுக்கு அவரும் பதில் தருகிறார்... ``மு பி குஷி !’’ (அப்படியானால், நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்). அதற்குப் பின் ஓரிரு வார்த்தைகளோடு விடைபெறுகிறார். பெருந்திரள் பெருமகிழ்வோடு வீடு திரும்புகிறது.

மக்களை மகிழ்ச்சிப்படுத்தி அதில் மகிழ்பவனே உண்மைத்தலைவன். அப்படியொரு தலைவனாக ஒடிசா மக்களால் போற்றப்படுகிறார் நவீன் பட்நாயக். ‘குஷி தோ?’ என்ற அந்த ஒற்றைக்கேள்வியே, ஒடிசா தேர்தல் பிரசாரத்தில் நவீன் பட்நாயக் பயன்படுத்திய ஒரே ஆயுதம். அதில்தான் அவரின் எதிரிகள் அனைவரும் தோற்றுப்போயிருக்கிறார்கள். நடந்து முடிந்த ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் 147 தொகுதிகளில் 112 தொகுதிகளிலும், நாடாளுமன்றத் தேர்தலில் 21 தொகுதிகளில் 12 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடி, தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒடிசாவின் முதலமைச்சராகியிருக்கிறார் நவீன் பட்நாயக்.

“நவீன், உங்கள் கதை முடிந்தது” என்று, பிரசாரத்தில் சவால் விட்ட மோடிக்கு, தன் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழை அனுப்பிவிட்டு, சத்தமின்றித் தன் அலுவல்களைத் தொடங்கிவிட்டார் நவீன்.

தேர்தல் அறிக்கைகள் வெற்றுக்காகிதங்களாகவும், சம்பிரதாயச் சடங்குகளாகவும் மாறிப்போயிருக்கிற ஒரு தேசத்தில் பிஜு ஜனதா தளத்தின் தேர்தல் அறிக்கையையே, அரசின் கொள்கையாக அறிவித்து, அதில் சொன்னவற்றை எல்லாம் செய்து முடித்திருக்கிறார் இந்த மாமனிதர். பதவியேற்பு நாளில் தான் செய்வதாகச் சொன்னது என்ன, அதில் எத்தனை வேலைகளைச் செய்திருக்கிறார், எத்தனை வேலைகள் மீதமிருக்கின்றன என்பதைக் கணக்கிட்டு, தன் ஆட்சிக்கு ஆண்டுதோறும் மதிப்பெண் பட்டியலை வெளியிடும் ஒரே மாநில முதல்வரும் நவீன் மட்டுமே.

ஐந்தாண்டு ஆளும்கட்சியாக இருந்துவிட்டால் ஆயிரமாயிரம் அதிருப்திகள் அணிவகுப்பதுதான் இந்திய அரசியலில் வாடிக்கை. ஆனால், ஒடிசாவில் ஒவ்வொரு தேர்தலிலும் பிஜு ஜனதா தளத்தின் வாக்கு சதவிகிதம் அதிகமாகிக்கொண்டேயிருக்கிறது. ஒடிசாவின் வளர்ச்சி விகிதம் உயர்ந்துவருவதே அதற்குக் காரணம் என்கிறார்கள் விவரமறிந்தோர்.

எப்படி வந்தார் அரசியலுக்கு?

ஒடிசாவின் மாபெரும் மக்கள் தலைவராக இருந்த பிஜு பட்நாயக்கின் கடைசி மகன்தான் நவீன். தன்னுடைய ஐம்பதாவது வயது வரை, அரசியல்வாடையே இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர். நவீன உலகத்தின் எல்லா சுகங்களையும் ஏகமாக அனுபவித்தவர். ஒரு ஃபேஷன் டிசைனராக இருந்து முதலமைச்சராக மாறிய அவருடைய எழுபது ஆண்டு வாழ்க்கையை அலசிப்பார்த்தால் ஒரு துருவத்திலிருந்து மறு துருவத்துக்கு அவர் நகர்ந்திருக்கிற அதிசய நிகழ்வுகளை அறியமுடியும்.

அரசியல் தொடர்பற்றவராக இருந்த ஒருவர், தந்தையின் மறைவிற்குப் பிறகு தன் வாழ்க்கையையே மக்களுக்கு என்று அர்ப்பணித்துவிட்டார். இந்த மாற்றத்திற்கான காரணமாக அவருக்கு நெருக்கமானவர்கள் ஒரு சம்பவத்தைச் சொல்கிறார்கள்.

தந்தையின் மறைவையொட்டி ஒடிசா வந்தார் நவீன் பட்நாயக். தந்தைக்காகக் கூடிய பல லட்சம் மக்களின் திரள் பல சிந்தனைகளை அவருள்ளே எழுப்பியிருக்கிறது. ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து வந்திருந்த சிறு குழந்தைகள், ‘‘இனி எங்களுக்கென்று யார் இருக்கிறார்கள்?’’ என்று கண்ணீர் விட்டுக் கதறி அழுவதைப் பார்த்த தருணம் அவருள்ளே மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தன் தந்தையின் இடத்தில், இனி ஒடிசாவின் மக்களுக்காகத் தான் இருப்பது என்று அந்தக் கணமே முடிவெடுத்திருக்கிறார். அதன் பின்னர் ஒடிசாவை விட்டு அவர் எங்கும் செல்லவில்லை.

தந்தை பிஜு பட்நாயக்கின் மறைவுக்குப் பின்... உண்மையிலேயே ஒரு விபத்தைப்போல அரசியலுக்கு வந்தவர்தான் நவீன். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் அவர் நிகழ்த்திய சாதனைகளால், கடந்த 19 ஆண்டுகளாக பெருவாரியான ஒடிய மக்களின் ஒற்றை நம்பிக்கையாக மாறியிருக்கிறார்.

தங்களுக்கான உணவு, உடை, பாதுகாப்பு மற்றும் அத்தியாவசியத் தேவைகளை மட்டுமல்ல, தங்களுக்கென்றே ஒரு தனி அடை யாளத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார் என்று ஒடிசாவின் மகளிர் அவரைக் கொண்டாடுகிறார்கள். பூரி ஜெகன்னாதரை வணங்குவது போலவே அவரையும் வணங்குகிறார்கள். இந்திய ஊடகங்கள் அவரை மர்மமான மனிதர் என்கின்றன. உண்மையில் அவர் மக்களின் மனிதராக மிளிர்கிறார்.

நவீனின் வெற்றி ஜனநாயகத்தின் மீது மீண்டும் நம்பிக்கை கொள்ளச் செய்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். எப்படிச் சாத்தியமாகிறது இப்படியோர் ஆட்சியும், ஈடு இணையற்ற வெற்றியும்...முக்கியமான கேள்விகளுடன் ஒடிசாவிற்குச் சென்று நவீன் நிவாஸ் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்தோம்.

ஒடிசா, இந்தியா, அரசியல், ஆட்சி, மோடி, பிரதமர் பதவி எனப் பலவிதமான கேள்விகளுக்கும் சிறு பதற்றமோ பயமோ இன்றி வந்து விழுந்தன பதில்கள். அவற்றில் சம்பிரதாய பதில்கள் என்று ஏதுமில்லை. இதயத்தில் உள்ள விஷயங்களை உதட்டிற்குக் கொண்டு வந்து மெல்லிய புன்னகையோடு பதிலாய் உதிர்க்கிறார் நவீன். அரசியலின் மிஸ்டர் கூல் என்று அவரைச் சொல்லத் தோன்றுகிறது. இப்படியொரு தலைவர் நம் மண்ணுக்கு எப்போது கிடைப்பார் என்ற ஏக்கமும் உருவாகிறது.

ஒரு மாநில முதல்வரைப் பேட்டி எடுத்தோம் என்பதைவிட, மக்களின் மனதை வென்ற தலைவனாக இருக்கிற ஒரு மாமனிதருடனான சந்திப்பாகவே அதை நினைவுகூர வேண்டியிருக்கிறது.

நாம் கேட்டதும் அவர் சொன்னதும்...

‘‘தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி என்பதே இன்றைய காலகட்டத்தின் பெரும் சாதனை. இதற்கு வித்திட்டது எது, உங்களின் தனித்துவமாக எதைக் கருதுகிறீர்கள்?’’

‘‘இதில் என்னுடைய தனித்துவம் என்பது எதுவும் இல்லை, மக்களுக்கு வெளிப்படையான ஒரு ஆட்சியை வழங்குகிறோம். தவறிழைப்பவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக தண்டனை வழங்குகிறோம். மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொள்வதுதான் மக்கள் எங்களுக்கு ஆதரவு வழங்குவதற்குக் காரணம்.”

‘‘கடந்த 19 ஆண்டுகளில் ஒடிசா பல்வேறு மாற்றங்களைக் கண்டிருக்கிறது, பசியையும் பட்டினியையும் அடையாளமாகக்கொண்ட ஒரு மாநிலம் அதிலிருந்து முற்றிலுமாக மீண்டிருக்கிறது... எப்படி இது சாத்தியமானது?’’

‘‘என் தந்தை பிஜு பட்நாயக், அவரது காலத்திலேயே உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கினார். இப்பொழுதும் நாங்கள் 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குகிறோம். ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது, அந்த நாட்டின் பாதி மக்கள் தொகையாக இருக்கும், பெண்களின் முன்னேற்றத்தில்தான் இருக்கிறது என்பதே எங்கள் நம்பிக்கை!’’

‘‘ஒடிசாவில் நான்கு முறை தொடர்ந்த தங்களது ஆட்சிக்காலத்தின் மிகப்பெரும் சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்?’’

‘‘பெருவாரியான மக்களின் வறுமையைத் துரத்தி உணவுப் பஞ்சத்தை ஒழித்ததுதான். பேரிடர் மேலாண்மையில் சிறந்து விளங்குவது, பெண்களின் முன்னேற்றம் ஆகியவையும் மிக முக்கியமானவை.’’

‘‘ஒடிசாவின் விவசாய வளர்ச்சிக்கு நீங்கள் வகுத்த திட்டங்கள் என்ன?’’

‘‘பஞ்சத்தில் வறண்டிருந்த காளஹண்டி மாவட்டம் முதற்கொண்டு ஒடிசா முழுவதிலும் வறுமையை ஒழித்திருக்கிறோம். இன்று இந்தியாவில் பொது விநியோகத்திட்டத்திற்கு உணவு வழங்கும் மூன்றாவது பெரிய மாநிலமாக ஒடிசா வளர்ந்திருக்கிறது. சிறப்பான நீர்ப்பாசன முறைகளைக் கையாண்டதே அதற்கு முக்கிய காரணம்!’’

‘‘பேரிடர் மேலாண்மையில் மிகச்சிறப்பாகச் செயல்படுகிறீர்கள், இதில் மற்றவர்கள் உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியதாக எதைச் சொல்வீர்கள்?’’

‘‘பேரிடர் மேலாண்மையில், எங்கள் மாநிலம் பெரும்வளர்ச்சி கண்டிருக்கிறது. இம்முறை ஃபானி புயல் தாக்கியபோது ஒரே நாளில் 12 லட்சம் மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றினோம். ஆபத்துக்காலங்களில் எப்படிச் செயல்படுவது என்பது குறித்து முன்னதாகவே மக்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம். அதுமட்டுமன்றி, புயலை, வெள்ளத்தைச் சமாளிப்பதற்கான உறுதியான வீடுகள் அமைக்கிறோம். நான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் நடந்த பெரும் புயலில் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் மாண்டனர். ஆனால் தற்போது உயிர்சேதமற்ற பேரிடர் மேலாண்மையை எங்கள் கொள்கையாகக் கொண்டிருக்கிறோம்.’’

‘‘ஒடிசா பெண்களின் ஆதரவு உங்களின் மிகப்பெரும் சக்தியாக இருக்கிறது, அவர்களின் முன்னேற்றத்திற்கு எவ்வகையான முயற்சிகளை முன்னெடுக்கிறீர்கள்?’’

‘‘ஒடிசாவில், 70 லட்சம் பெண்களை சுய உதவிக் குழுக்கள் மூலமாக இணைத்து, அவர்களின் வளர்ச்சிக்காகவும், தன்னிறைவிற்காகவும் பணியாற்றுகிறோம். முக்கியமாக பெண்கள் சுய உதவிக் குழுக்களிடமிருந்து 5000 கோடி ரூபாய் அளவிற்கான பொருள்களை அரசே கொள்முதல் செய்வதற்கான பணிகளையும் தொடங்கியிருக்கிறோம், அரசிலும், அரசியலிலும் பெண்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டையும் வழங்கியுள்ளோம்!’’

‘‘ஒடிசா மக்கள் உங்களை இவ்வளவு நேசிப்பதற்கான காரணம்..?’’

‘‘நான் பேசுவதைவிட என் செயல் அதிகம் பேசுகிறது. நான் என்ன சொல்கிறேனோ அதைச் செய்துவிடுகிறேன் அதுவே மக்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் அன்புக்குமான ஒரே காரணம்.’’

‘‘மக்கள் உங்களை நேசிக்கிறார்கள், நீங்கள் அவர்களுக்காகவே வாழ்கிறீர்கள் என்பதெல்லாம் சரி... உங்களுக்கான தனிப்பட்ட நேரத்தில் என்ன செய்வீர்கள்... நீங்கள் சோர்வடைவதில்லையா?’’

‘‘நிறைய வாசிப்பேன், தொலைக்காட்சி பார்ப்பது பிடிக்கும். மற்றபடி வேலை நிறைய இருக்கிறது, சோர்வடைவதற்கு எனக்கு நேரமில்லை.’’

‘‘நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளரும்கூட...இப்பொழுது எழுத முடிவதில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?’’

‘‘எழுதுவது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. ஆனால், தற்போது பொழுதுபோக்க எனக்கு நேரமில்லை. நிறைய மக்கள் பணி செய்யவேண்டியிருக்கிறது. நேரம் கிடைத்தால் எழுதுவேன்.’’

‘‘இது தவிர, உங்களுக்குப் பிடித்தவை...?’’

‘‘வரலாறு, இயற்கை வளங்கள், கைவினைப் பொருள்கள், ஆடை வடிவமைப்பு, ஓவியங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. ஒரு மண்ணின் கலைகளை வளர்ப்பது, பாதுகாப்பது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன். அதனால்தான் ஒடிசாவில் கலைகளுக்கும், திறன் வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, ஒடிசாவின் கலாசாரச் சின்னங்களாக அருங்காட்சியகங்கள் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.’’

‘‘உலகம் அதிவேகமாகப் பயணித்துக்கொண்டிருக்கும்போது, சற்று நிதானித்துத் தன்னுடைய தொன்மத்தையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது... அந்த சமநிலையை ஒடிசா மாநிலம் அடைந்திருப்பதாகத் தெரிகிறது. இதை எப்படி சாத்தியப்படுத்தினீர்கள்?’’

‘‘உண்மையில், நான் ஒருவனாக இதைச் செய்யவில்லை. மக்கள் இயல்பாகவே அத்தகைய சமநிலையை உருவாக்கிக்கொள்வார்கள், அதற்கான அறிவை அவர்களுக்கு வழங்குவதே எங்கள் கடமை. கலாசார நிகழ்ச்சிகள் நடத்துவது, பயிற்சிகள் வழங்குவது எனப் பல வழிகளில் இதற்காக நாங்கள் முயற்சி செய்கிறோம்!’’

‘‘ஒடிசாவில், ஊழல் மிகவும் கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. இது எப்படி சாத்தியமானது?’’

“அனைவரின் செயல்பாடுகளையும் மிகக்கூர்மையாகக் கவனிக்கிறோம். ஊழல் புகாருக்கு உள்ளானால் அவருக்கு மன்னிப்பே கிடையாது. உடனடியாக அவர்களின் பதவியைப் பறிக்கிறோம். இன்றைய சூழலில், ஊழல் ஒழிப்பு என்பது இந்தியாவின் அதிமுக்கியமான தேவை. நேரடியாகப் பல விஷயங்களைக் களத்திலிறங்கிக் கையாள்வதும், தொடர்ந்து கண்காணிப்பதும் ஊழலைத் தடுக்க உதவும்.’’

-ஜெனிஃபர் ம.ஆ, படங்கள்: கே.ராஜசேகரன்

‘‘ஒடிசாவின் மக்கள் தொகையில் பெருவாரியான மக்கள் பழங்குடியின மக்கள், அவர்களின் வாழ்வாதாரம் எப்படிப் பாதுகாக்கப்படுகிறது?’’

‘‘இந்தியா முழுவதுமான பி.ஜே.பி அலை, ஒடிசாவை பாதித்திருக்கிறதா?’’

‘‘இந்திய அளவில் உங்கள் தலைமையில் மூன்றாவது அணி உருவாகுமா?’’

‘‘இன்றைய அரசியல்சூழலில், தமிழகத்தில் யாருடைய தலைமை சரியானதாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்?’’

‘‘ஒடிசாவில் சுரங்கத்துறை பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில் என்ன?’’

‘‘ஒடிசா இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம், உங்களுக்கான மிகப்பெரிய சவால், அதைச் சரி செய்ய என்ன முயற்சி எடுத்திருக்கிறீர்கள்?’’

அடுத்த இதழில்...