Published:Updated:

`கையால் மலம் அள்ளும் நிலையை மாற்றாத பா.ஜ.க-வுக்கு ஓட்டு இல்லை!’ - ஆதித்தமிழர் கட்சி

அருண் சின்னதுரை
`கையால் மலம் அள்ளும் நிலையை மாற்றாத பா.ஜ.க-வுக்கு ஓட்டு இல்லை!’ - ஆதித்தமிழர் கட்சி
`கையால் மலம் அள்ளும் நிலையை மாற்றாத பா.ஜ.க-வுக்கு ஓட்டு இல்லை!’ - ஆதித்தமிழர் கட்சி

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதித்தமிழர் கட்சி ஜக்கையன், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கு  தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மதுரையில், ஆதித் தமிழர் கட்சியின் மாநிலத் தலைவர் ஜக்கையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "கையால் மலம் அள்ளும் தடைச் சட்டத்தை பி.ஜே.பி., அரசு  கொண்டுவரவில்லை. மாறாக, வஞ்சிக்க மட்டுமே செய்தது. பக்கத்து மாநிலங்களான கேரளாவில், பாதாள சாக்கடை சுத்தம் செய்ய ரோபோக்கள் பயன்படுத்தபட்டுவருகின்றன. இதனால், பலரின் உயிரும் மானமும் காப்பாற்றப்பட்டுள்ளது. எனவே, கேரளாவைப் போல தமிழகத்தில் பாதாள சாக்கடையை சுத்தம்செய்ய ரோபோக்கள் பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பி.ஜே.பி-க்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை.

ஆதித்தமிழர் கட்சி, நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு முழு ஆதரவு அளிக்கிறது. தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத் தேர்தல்களிலும் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளோம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல திட்டங்களைக் கொண்டுவந்தது தி.மு.க தான். எனவே, பரிசீலனை செய்து இம்முடிவை எடுத்துள்ளோம்" என்றார்.