அமேதி, வயநாடு என்று இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, பிரதமர் கனவுடன் வலம்வந்த ராகுல் காந்தியின் கனவு தகர்ந்துவிட்டது. ஆஸ்தான தொகுதியான அமேதியில் தோல்வி, ஒட்டுமொத்தமாக காங்கிரஸின் படுதோல்வி, பி.ஜே.பி-யின் அபார வெற்றி போன்ற காரணங்களால், காங்கிரஸ் தலைவர் பதவி யிலிருந்தே விலக முடிவெடுத்தார் ராகுல் காந்தி. இந்தத் தேர்தலில், ராகுலுக்குக் கிடைத்த ஒரே ஆறுதல், வயநாடு தொகுதி வெற்றி. இந்தச் சூழலில்தான் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வயநாடு தொகுதிக்கு வந்திருந்தார் ராகுல் காந்தி.

மூன்று நாள்கள் பயணம். வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் பயணித்தார் ராகுல். மக்களிடம் எந்த மாற்றமும் இல்லை. தேர்தலுக்கு முன்பிருந்த அதே உற்சாகத்தில், சற்றும் குறைவு இல்லாமல் ராகுலை வரவேற்றார்கள். கொட்டும் மழை, கொளுத்தும் வெயில் என்று எதுவும் வயநாடு மக்களைப் பாதிக்கவில்லை. திருவிழாபோல அவரது வருகையைக் கொண்டாடினார்கள் மக்கள். பலரும், ‘நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’, ‘தேசத்துக்கு நீங்கள் தேவை ராகுல்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வரவேற்றனர்.

வயநாடு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டப் பிறகு, ராகுல் இங்கு வருவது இது மூன்றாம் முறை. வேட்பு மனுத்தாக்கல், பிரசாரம் என்று தேர்தலுக்கு முன் வயநாடு வந்தபோது, ராகுலின் முகமும் உடல் மொழியும் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தன. பழங்குடி மக்களுடன் சந்திப்பு, வெள்ளத்தில் பாதித்த மக்களுடன் சந்திப்பு, காயம் அடைந்த செய்தியாளரைக் காப்பாற்றியது, தன் தந்தையின் அஸ்தியைக் கரைத்த இடத்துக்குச் சென்றது, ஐ.ஏ.எஸ் ஆன முதல் பழங்குடி பெண்ணைச் சந்தித்தது என்று மனிதர் படுசுறுசுறுப்புடன் வலம்வந்தார்.

ஆனால், நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகளில் ராகுலின் மொத்த உற்சாகமும் மிஸ்ஸிங். சம்பிரதாயத்துக்கு நன்றி தெரிவித்தார். வயநாடு தொகுதியில் வெற்றிபெற்றாலும் காங்கிரஸ், ஆட்சியைப் பிடிக்க முடியாமல்போன வருத்தம் அவரது முகத்தில் இருப்பது அப்பட்டமாகவே தெரிந்தது. அவரது பேச்சிலும் புதியதாக ஒன்றும் இல்லை. அனைத்து இடங்களிலும் பெரும் பாலும் ஒரே மாதிரியாகத்தான் பேசினார். “வயநாடு தொகுதி மக்களுக்காக காங்கிரஸின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். யார், எப்போது வேண்டுமானாலும் எங்களிடம் வரலாம். வயநாடு தொகுதிக்காக மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த கேரள மக்களின் பிரச்னைகளுக்காகவும் நாடாளுமன்றத்தில் எங்கள் குரல் ஒலிக்கும். உங்களின் அனைத்து பிரச்னைகளையும் கேட்டறிந்து, தீர்வு காண முயற்சி செய்வேன். மோடி, விஷத்தைப் பயன்படுத்திவருகிறார். தேசிய அளவில் விஷத்துக்கு எதிராக நாம் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறோம். பணபலம், அதிகார பலம் என்று மோடியிடம் அனைத்தும் இருக்கின்றன. ஆனால், அவரிடம் உண்மையும் அன்பும் இல்லை. நான் வலுவான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன். ஆனால், மோடி வெறுப்பு அரசியல் மூலம் மக்களைப் பிளவுபடுத்துகிறார். தேர்தலில் வெற்றிபெறுவதற்காகப் பொய் மூட்டைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளார். அன்பால் மட்டுமே, வெறுப்பு அரசியலைச் சமாளிக்க முடியும். அதுமட்டுமே என் ஆயுதம்” என்றார் ராகுல்.

வயநாடு காங்கிரஸ் பிரமுகர்களோ, “கேரளம், தமிழ கம் ஆகிய மாநிலங்களில் ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்று பிரசாரங்களில் தொடர்ந்து சொன் னோம். ஆனால், மற்ற மாநிலங்களில் அதைச் சொல்ல வில்லை. அதனால்தான், எங்களால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. வயநாடு மக்கள்மீது ராகுல் காந்தி மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்துள்ளார். மாதத்துக்கு ஒரு முறை வயநாடு வந்து மக்களைச் சந்திக்க உள்ளார் ராகுல் காந்தி. இதனால், கேரளத்து காங்கிரஸ் கட்சியினர் மட்டுமன்றி மக்களும் மிகுந்த உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்” என்கிறார்கள்.

“ராகுல்தான் எங்கள் தலைவர். காங்கிரஸ் அரசு கொண்டுவந்த திட்டங்களால்தான் நாங்கள் பயனடைந்துள்ளோம். கேரளத்தில் வன்முறையைத் தூண்டிவிட்டது யார் என எல்லோருக்கும் தெரியும். அடுத்த முறை ராகுல் பிரதமர் ஆவது நிச்சயம். எங்கள் ஆதரவு எப்போதும் அவருக்குத்தான்” என்று பெருமிதத்துடன் கொண்டாடுகின்றனர் வயநாடு மக்கள்.

வயநாடு தொகுதியில் பழங்குடி மக்களின் நிலப் பிரச்னை, போக்குவரத்துப் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, மருத்துவக் கல்லூரி கொண்டுவருவது என்று பல்வேறு விஷயங்களில் வாக்குறுதி கொடுத்திருக்கிறார் ராகுல். அதை எல்லாம் நிறைவேற்றுவதுதான், மக்களின் இந்த அன்புக்கு அவர் செய்யும் கைம்மாறாக இருக்க முடியும்.

- இரா.குருபிரசாத்
படங்கள்: கே.அருண்