பி.சாந்தா, மதுரை-14.
‘நீரவ் மோடியை, இந்தியாவுக்கு நாடு கடத்தினால் எந்தச் சிறையில் அடைப்பீர்கள்’ என்று லண்டன் நீதிமன்றம் கேட்கிறதே?

பின்னே... அவர் என்ன நூறு ரூபாய், இருநூறு ரூபாய் என்று பிக்பாக்கெட் அடித்தவரா, சாதாரண சிறையில் அடைக்க? கோடி கோடியாக வங்கிப் பணத்தை ஸ்வாஹா செய்துவிட்டு நாட்டை விட்டே ஓடியவர். ‘சொகுசு’ வசதி களுடன் கூடிய சிறையில் அடைத்தால் தானே கோடிகளுக்கு மரியாதை!

கோடத்தூர் எம்.ஜி.ஆர் மனோகரன், சின்னதாராபுரம், கரூர்.
எல்லாக் கட்சிகளிலும் கோஷ்டிப்பூசல் அதிகரிக்கக் காரணம், தலைவரா... தொண்டரா?

‘குண்டர்’!

எம்.டி.உமாபார்வதி, சென்னை.
‘கருக்கலைப்பு செய்வது கூலிப்படை மூலம் கொலை செய்வதற்குச் சமம்’ என்று கிறிஸ்தவ மதகுரு போப் கூறியிருப்பது?

மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த காலகட்டம் வரையில் இப்படியொரு பேச்சே இல்லை. நாகரிகம், முன்னேற்றம், வளர்ச்சி என்று வெகுதூரம் விலகி வந்துவிட்டோம். எதையும் பணம் கொடுத்தே வாங்க வேண்டிய சூழலை உருவாக்கிவிட்டோம். ஒவ்வொருவரும் தனித்து நிற்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்படுத்தப்பட்டுவிட்டது. அதிலும் மேற்கத்திய நாடுகளில் எல்லாமே ‘ஜஸ்ட் லைக் தட்’ என்றாகிவிட்டது. இத்தகையச் சூழலில், போப் கண்டிப்ப தெல்லாம் எடுபடாது. சுமப்பவர்கள்தான் தீர்மானிக்க முடியும் என்கிற கருத்து வலுப்பட்டு வருகிறது. ஆனால், ‘கலைப்பதில்’ ஒரு நியாயம் இருப்பதைக் கண்டிப்பாக உறுதிப்படுத்த வேண்டும். இல்லை எனில், ‘பிராய்லர் கோழிக்குஞ்சு பொரிப்பகம்’ போல, ‘மனிதக் குட்டி பிறப்பகம்’ சீக்கிரமே உருவாகிவிடும்.

மல்லிகா அன்பழகன், சென்னை-78.
நடிகர், நடிகைகள் மட்டும் புற்றுநோய்க்கு ஆளானாலும் அதிலிருந்து மன தைரியத்தோடு மீண்டு வருவது எப்படி?

உங்கள் தெருவில்கூட ஒருவர் இப்படி மீண்டிருக்கத்தான் செய்வார். அதெல்லாம் மீடியாவில் வந்திருக்காது அவ்வளவுதான்.

எம்.ராகவ்மணி, வெள்ளக்கோவில், திருப்பூர்.
‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்பது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் உதிர்க்கும் வாசகம். அதிகாரம் மிக்கவர்களைச் சட்டம் ஏதாவது செய்திருக்கிறதா?

‘முறைகேடாகத் தேர்தலில் வெற்றிபெற்றார்’ என்று பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு எதிராகவே 1977-ல் தீர்ப்பு எழுதப்பட்டது. நிகழ்கால உதாரணமாக, பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனைபெற்று சிறையில் இருக்கிறார். ஆனால், இதெல்லாம் விரல்விட்டு எண்ணும் அளவுக்குக்கூட இல்லை. அதேசமயம், அதிகாரம் மிக்கவர்களால் சட்டம் தோற்கடிக்கப்பட்டதைச் சொல்ல ஆரம்பித்தால், ஆயிர மாயிரம் பக்கங்கள்கொண்ட, ஆயிரமாயிரம் புத்தகங்களாகத் தொகுத்துக்கொண்டே இருக்கலாம்.

@காஞ்சி எஸ்.ஃபைசுதீன், காஞ்சிபுரம்-1.
உடையுமா, மடியுமா, படியுமா?

உடைந்ததுதான்... மடிந்ததுதான்... படிந்ததுதான்!

@பல்லவ மன்னன், நெல்லை.
ஆந்திரத்தில், ‘ஐந்து சமூகங்களிலிருந்து தலா ஒருவர் வீதம் ஐந்து துணை முதலமைச்சர்கள்’ என்று புதிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி காட்டுகிறாரே?

நல்ல முயற்சி. அனைத்துச் சமூகத்தினருக்கும் ஜனநாயகத்தில் உரிமை இருக்கிறது என்பதை ஊருக்கு உணர்த்துவதற்கான முதல்படி இது. ஆனால், அது அதிகாரமற்ற அலங்காரப் பதவியாக மட்டுமே இருந்துவிடக் கூடாது.

@கோவி, தஞ்சாவூர்.
அரசியல் ‘வெற்றிடம்’ என்னாச்சு?

அடுத்த தேர்தல் வரை ‘ஹவுஸ்ஃபுல்’!

@க. துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம்.
நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதற்குக் காரணம் மக்களின் வாழ்க்கை முறையா, சட்டத்தில் உள்ள குறைபாடுகளா, நீதிபதிகள் பற்றாக்குறையா?

நீதி வழங்குவதற்காக வகுத்து வைக்கப் பட்டிருக்கும் நடைமுறைகள்தான் முக்கிய காரணம். ஆங்கிலேயேர்கள் தங்களின் தேவைக்கேற்ப நீதி பரிபாலனம் செய்வதற்காக உருவாக்கிய சட்டதிட்டங்கள்தான் இன்றளவிலும் நடைமுறையில் இருக்கின்றன. தேவைப்பட்டால், ஒரு வழக்கை எடுத்து விசாரித்து ஓரிரு நாள் களிலேயேகூட தண்டனை கொடுக்கலாம். தேவையில்லை என்றால், 76 ஆண்டுகளுக்குக்கூட விசாரிக்காமலே போட்டு வைக்கலாம் என்பதுதான் நடைமுறையாக இருக்கிறது. கடந்த சிலபல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் இழுஇழுவென்று இழுபட்ட ஜெயலலிதா தொடர்பான வழக்குகள்தான் இதற்குச் சரியான உதாரணம். தீர்ப்பு வழங்கப்பட்ட அடுத்தநாளேகூட அவருடைய மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதிரடியாக ஜாமீன் தரப்பட்டு, கடைசியில் அவர் குற்றவாளியா... இல்லையா என்று தீர்ப்பு எழுதப்படாமலே புதைந்துபோனது வழக்கு.

@ஜி.ஆர்.மாதேஸ்வரன், புளியம்பட்டி, ஓமலூர்.
தமிழக பி.ஜே.பி-க்கு ஒரு நல்ல தலைவர் சொல்லுங்க?

இனி அமித் ஷா வந்து ஓவர் டைம் டூட்டி பார்த்தால்தான் உண்டு!

@கு.ப.ரகுநாதன், பூவிருந்தவல்லி.
வரும் ஆகஸ்ட் மாதத்திலாவது உள்ளாட்சி மன்றத்தேர்தல் நடைபெறுமா?

வரும் ஆகஸ்ட் மாதம் நாள், நட்சத்திரமெல்லாம் சரியாக இருப்பதுபோல தோன்றவில்லையே!

@ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.
‘மும்மொழித் திட்டம் என்பது நெருப்பில் கை வைப்பது போல... அதை ஏற்க முடியாது’ எனக் கூறியுள்ளாரே அமைச்சர் ஜெயகுமார்?

ம்... புள்ளைப்பூச்சிகளுக்கும் கொடுக்கு முளைக்கிறதே!

ஆர்.ராமசாமி, பொள்ளாச்சி.
‘மத்திய மந்திரி பதவிக்கு ஆசையில்லை’ என்கிறாரே அ.தி.மு.க எம்.பி-யும் துணை முதலமைச்சரின் மகனுமான ரவீந்திரநாத் குமார்?

‘திராட்சை’ அதிகமாக விளையும் தேனிக்காரராயிற்றே!

ஆர்.சுப்ரமணியன், பெருங்குடி, சென்னை-96.
ஓமந்தூரார், ராஜாஜி, காமராஜர் மற்றும் பக்தவத்சலம் என்று காங்கிரஸ் ஆட்சியாளர்கள் காலத்தில் தமிழகத்தில் தண்ணீர்ப் பஞ்சம் இருந்ததா?

‘பஞ்சம்’ என்று சொல்வதைவிட, ‘தேவை’ என்பது பொருத்தமான சொல்லாக இருக்கும். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சத்தியமூர்த்தி சென்னை மேயராக இருந்தபோது, தண்ணீர்த் தேவையை நிறைவு செய்வதற்காக, கொசஸ்தலை ஆற்றில் பூண்டி நீர்த்தேக்கத்தை உருவாக்கினார். அன்று சென்னையின் மக்கள் தொகை சுமார் 14 லட்சம். இன்று, ஒரு கோடியே ஏழு லட்சம். மக்கள் தொகை, ஆறு மடங்குக்கும் மேலாக உயர்ந்திருக்கும் நிலையில், தண்ணீர்த் தேவையும் தாறுமாறாக உயரத்தானே செய்யும்?

மா.உலகநாதன், திருநீலக்குடி.
இன்றைய இளைஞர்கள் தமிழில் எழுதவும் பேசவும் தடுமாறுகிறார்களே?

தெருவுக்குத் தெரு மெட்ரிக்குலேஷன் பள்ளியைத் திறந்துவிட்டு, ‘எம்புள்ள, டாடி... மம்மினுதான் கூப்பிடும்’ என்று டீக்கடை பெஞ்சில் பெருமைப்பட்டுக் கொண்டுவிட்டு, இப்படி ஒரு கேள்வியையும் கேட்டால்?

வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்-6.
‘இந்தியை எதிர்க்கும் தமிழக அரசியல்வாதிகள், இந்தி படிக்கும் தங்கள் வாரிசுகளின் பள்ளிகளுக்குச் சென்று டி.சி-யை வாங்கவேண்டும்’ என்கிறாரே பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா?

அதில் தவறு ஏதும் இல்லை. 2004-ல் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டபோது, ‘அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதற்கு என்ன காரணம்?’ என்று செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குக் கருணாநிதி சொன்ன பதில் - ‘அவருக்கு இந்தி தெரியும் என்பதால்தான்’.

@கார்த்தி மொழி.
தற்போது வலதுசாரி இயக்கங்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ந்து, அவர்களின் கை ஓங்க ஆரம்பித்துள்ளது. இத்தகைய சூழலில் பட்டியலின மக்கள் இயக்கங்கள் இணைப்பு/ஒருங்கிணைப்பு, இடதுசாரி இயக்கங்கள் இணைப்பு/ஒருங்கிணைப்பு சாத்தியமற்றதா?

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, வலதுசாரி இயக்கங்களின் இணைப்பு/ஒருங்கிணைப்பு சாத்தியம் என்று யாராவது சொல்லியிருப்பார்களா... நம்பியிருப்பார்களா? சாத்தியப் படுத்துவதற்கான தேவையும் சாத்தியப்படுத்தக்கூடிய தலைமையும் இணைந்தால், எதுவும் சாத்தியமே!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!