“பதினான்கு மாதங்களே ஆன இந்தக் குழந்தையை மக்கள் வாரியணைத்து, நடக்கவும் ஓடவும் விடுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே எங்களுக்குக் கரிசனம் காட்டியிருக்கிறார்கள் மக்கள்” – நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் நெகிழ்ச்சியுடன் இப்படிச் சொன்னார், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். இந்தக் கட்சி முதல் தேர்தலிலேயே தனித்து களம்கண்டு, பல தொகுதிகளில் மூன்றாம் இடம், நான்காம் இடங்களைப் பிடித்துள்ளது. சில தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்று அரசியல் அரங்கில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறார் கமல்ஹாசன். கோவை தொகுதியில் சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகளைப் பெற்ற, மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவரான மருத்துவர் மகேந்திரனிடம் பேசினோம்.

“நாடாளுமன்றத் தேர்தலில், பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெற்றீர்கள். வரப்போகும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டீர்களா?”

“இதே கேள்வியை கடந்த ஜனவரியில் எங்களிடம் பலர் கேட்டார்கள். நாங்கள் எந்த அளவுக்குத் தயாராக இருந்தோம் என்பதை, தேர்தல் முடிவுகளில் பார்த்தீர்கள். இப்போது நாங்கள், உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறோம். அந்தத் தேர்தல் முடிவுகளிலும் இது எதிரொலிக்கும்.”

“உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை, கிராம அளவில் ஊடுருவி வேலை செய்ய வேண்டியது அவசியம். முக்கியமாக, கட்சியின் தலைமையே தீவிரமாகக் களப்பணியாற்ற வேண்டும். இப்படிப்பட்ட நேரத்தில், உங்கள் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ‘பிக் பாஸ்’ உட்பட நடிப்பிலும் கவனம் செலுத்துகிறாரே?”

“பொழுதுபோக்குவதற்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. அ.தி.மு.க, தி.மு.க-வை எல்லாம் எதிர்த்து வெற்றிபெறத்தான் அரசியலுக்கு வந்துள்ளோம். நான் ஒரு மருத்துவர். அரசியலுக்கு வந்துவிட்டதால், 29 ஆண்டுகளாக நான் பார்த்துவரும் மருத்துவர் பணியை விட்டுவிட வேண்டுமா? கொஞ்சம் நேரத்தைக் குறைத்துக் கொண்டுள்ளேன்... அவ்வளவுதான். மருத்துவர் பணியைப் பார்ப்பதால், அரசியலில் எனக்கு ஈடுபாடு இல்லை என்றோ, அரசியலில் நான் கவனம் செலுத்தவில்லை என்றோ சொல்லிவிட முடியாது. அதேபோல்தான் எங்கள் தலைவரும். முதலில் இருந்த அளவுக்கு பத்து சதவிகிதம்கூட இப்போது அவர் கலைப் பணிக்கு நேரம் ஒதுக்குவதில்லை. 90 சதவிகித நேரத்தைக் கட்சிப் பணிகளுக்குத்தான் செலவிடுகிறார். கலை மூலம் கிடைக்கிற வருமானம் அவருக்குத் தேவையாக இருக்கிறது. எங்கள் கட்சியில் விவசாயிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதி பர்கள் என மூன்று லட்சம் பேர் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் அத்தனை பேரையும் தொழிலை விட்டுவிட்டு வந்துவிடுங்கள் என்று சொல்ல முடியுமா? கட்சியையே நாங்கள் நன்கொடையில்தான் நடத்துகிறோம். அந்த நன்கொடையைக் கொடுப்பதற்கு ஒரு தொழில் வேண்டும் அல்லவா?”

“கமல்ஹாசன், ‘எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே மக்கள் கரிசனம் காட்டியிருக்கிறார்கள்’ என்று கூறியிருக்கிறார். அப்படி எதிர்பார்க்காமல், என்னவெல்லாம் நடந்துள்ளன?”

“எங்கள் தலைவரை ஓர் அரசியல் தலைவராக மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதைத் தேர்தல் முடிவுகள் உறுதிசெய்துள்ளன. அதில் எங்களுக்கு மிகுந்த சந்தோஷம். குறிப்பாக, எங்கள் ரசிகர்கள் வட்டத்தைத் தாண்டி, ஏராளமானோர் எங்கள் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். அவர்களில் பலர், 18 வயதிலிருந்து 40 வயதுக்கு உட்பட்டவர்கள். படித்த தலைமுறையினர். இவர்களிடம், ‘மாற்றம் தேவை’ என்கிற கருத்து நன்றாகப் போய்ச்சேர்ந்துள்ளது. ‘பணம் கொடுக்க வில்லையென்றால் வாக்காளர்கள் உங்களைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள்’ என்று சிலர் பேசினார்கள். ஆனால், மக்கள் எங்களிடம் பணத்தை எதிர்பார்க்க வில்லை. ‘நாங்கள் பணம் தரமாட்டோம்’ என்று சொல்ல வேண்டிய அவசியமும் எங்களுக்கு ஏற்படவில்லை. எங்களை மக்கள் நன்றாகப் புரிந்து வைத்துள்ளார் கள் என்பதைத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.”

“மக்கள் நீதி மய்யத்துக்குக் கிடைத்தவை எந்தக் கட்சியின் வாக்குகள்?”

“பெரும்பாலும் அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வுக்குச் செல்லும் வாக்குகளே எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. இருப்பினும் அ.தி.மு.க வாக்குகள் எங்களுக்கு அதிகமாகக் கிடைத் திருக்கலாம் என்று எண்ணுகிறேன். தவிர, முதல் தலைமுறை வாக்காளர்களும் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள்.”

“நாம் தமிழர் கட்சியும் நீங்களும் கிட்டத்தட்ட சமமான வாக்குகளைப் பெற்றுள்ளீர்கள். நாம் தமிழர் கட்சிதான் உங்களுக்குச் சமமான போட்டியா?”

“நாம் தமிழர் கட்சியை நாங்கள் போட்டியாகக் கருதவில்லை. ஏனென்றால், நாம் தமிழர் கட்சி ஆரம்பித்து ஒன்பது ஆண்டுகளாகின்றன. அவர்கள் ஏற்கெனவே தேர்தலைச் சந்தித்துள்ளார்கள். முந்தைய தேர்தலில் பெற்ற வாக்குகளைக் காட்டிலும், பெரிய அளவில் கூடுதலான வாக்கு களை அவர்கள் பெற்றுவிடவில்லை. இதுவரை நாம் தமிழர் கட்சியை ஒரு மாற்று சக்தியாகப் பார்த்துவந்தவர்கள், இனிமேல் மக்கள் நீதி மய்யத்தை மாற்று சக்தியாகப் பார்ப்பார்கள்.”

- ஆ.பழனியப்பன்
படங்கள்: தி.விஜய்