Published:Updated:

விகடன் எக்ஸ்க்ளூசிவ் - “தமிழகத்தை ஆள சரியான தலைமை யார்?”

விகடன் எக்ஸ்க்ளூசிவ் - “தமிழகத்தை ஆள சரியான தலைமை யார்?”
பிரீமியம் ஸ்டோரி
விகடன் எக்ஸ்க்ளூசிவ் - “தமிழகத்தை ஆள சரியான தலைமை யார்?”

விகடன் எக்ஸ்க்ளூசிவ் - “தமிழகத்தை ஆள சரியான தலைமை யார்?”

விகடன் எக்ஸ்க்ளூசிவ் - “தமிழகத்தை ஆள சரியான தலைமை யார்?”

விகடன் எக்ஸ்க்ளூசிவ் - “தமிழகத்தை ஆள சரியான தலைமை யார்?”

Published:Updated:
விகடன் எக்ஸ்க்ளூசிவ் - “தமிழகத்தை ஆள சரியான தலைமை யார்?”
பிரீமியம் ஸ்டோரி
விகடன் எக்ஸ்க்ளூசிவ் - “தமிழகத்தை ஆள சரியான தலைமை யார்?”

ரசியலில் எவ்வளவு சாதித்தாலும் மகத்தான சாதனை என்பது மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவதுதான். அப்படிப்பட்ட மாபெரும் மக்கள் ஆதரவைப் பெற்று, ஐந்தாவதுமுறை ஒடிசாவின் முதல்வர் ஆகியிருக்கும் நவீன் பட்நாயக்கை ஆனந்த விகடன் சார்பில் சந்தித்தோம். அந்த நேர்காணலின் முதல்பகுதி கடந்தவார இதழில் வெளியானது. அதன் தொடர்ச்சி இந்த வாரம்.

விகடன் எக்ஸ்க்ளூசிவ் - “தமிழகத்தை ஆள சரியான தலைமை யார்?”

‘‘ஒடிசா இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம், உங்களுக்கான மிகப்பெரிய சவால். அதைச் சரி செய்ய என்ன முயற்சி எடுத்திருக்கிறீர்கள்?’’

‘‘ஒடிசா இளைஞர்களுக்கான தொழில்திறன் வளர்ச்சித் திட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம், Skilled In Odisha, அதாவது, ஒருவர் ஒடிசாவில் தொழில்திறன் வளர்ச்சிக்குப் பயிற்றுவிக்கப்பட்டவர் என்பதைத் தனித்துவமான அடையாளமாக உருவாக்குவதே எங்கள் நோக்கம். திறன் வளர்ச்சிக் கல்வியை மிகச்சிறப்பான தரத்தில் தருகிறோம். ஒடிசாவின் கனிமவளத்தினைக் கொண்டு ஒடிய மக்களே பயனடைய வேண்டும் என்பதற்காக, சிறு, குறு தொழில் மேம்பாட்டிற்கும்,  துணைத் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கும் துணை நிற்கிறோம். பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் ‘மிஷன் ஷக்தி’ என்ற திட்டத்தில் ஏராளமான பெண்களை சுய உதவிக் குழுக்களாக இணைத்திருக்கிறோம்.’’

‘‘பி.ஜே.பி-யைச் சேர்ந்த கே.வி.சிங்தேவ் உங்கள் வெள்ள நிவாரண நிதிகளைப் பற்றி விமர்சித்திருந்தார், இந்நிலையில் பேரிடர்க் காலங்களில் மத்திய அரசின் ஆதரவு, உதவி உங்களுக்குச் சரிவரக் கிடைக்கிறதா?”

 ‘‘இந்தியாவிலேயே அதிகமான இயற்கைச் சீற்றங்களுக்கு உள்ளாகும் மாநிலம் ஒடிசா.

விகடன் எக்ஸ்க்ளூசிவ் - “தமிழகத்தை ஆள சரியான தலைமை யார்?”

இது எங்கள் பொரு ளாதாரத்தின் மீது அதிக சுமையை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே ஒடிசாவிற்குச் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்குமாறு நாங்கள் மத்திய அரசிடம் முறையிட்டிருக்கிறோம், இது எங்கள் மாநிலத்தின் மறு சீரமைப்பிற்கும், வேகமான பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.’’

‘‘தேர்தல் பிரசாரத்தின்போது ‘ஒடிசாவில் மத்திய அரசின் பல நல்ல திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் போவதற்கு ஒடிசா மாநில அரசே காரணம்’ என்று மோடி விமர்சித்திருந்தாரே, அதற்கு உங்கள் பதில் என்ன?”

 ‘‘மக்களுக்கு எது நன்மையோ அதையே நாங்கள் செய்கிறோம், உதாரணத்திற்கு, மத்திய அரசின் மருத்துவத் திட்டத்தைவிட ஒடிசா மாநில அரசின் மருத்துவத்திட்டம் ஏறத்தாழ 25 லட்சம் மக்களைக் கூடுதலாகச் சென்றுசேர்கிறது. ஒடிசாவின் பிஜு மருத்துவத் திட்டம் அனைத்து ஒடிய மக்களுக்கும் பயனளிக்கிறது. குறிப்பாக, பெண்களுக்குப் பத்து லட்ச ரூபாய் வரை காப்பீட்டுத்தொகை வழங்குகிறது. இதுவே மத்திய அரசுத் திட்டத்தின் மூலம் ஐந்து லட்ச ரூபாய்தான் வழங்குகிறார்கள். அரசு நலத்திட்டங்களில் எந்த மக்களும் விடுபடக் கூடாது என்பதே எங்கள் நோக்கம்.’’

‘‘பா.ஜ.க அலை வீசியதால்தான் நீங்கள் முதன்முதலாக இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டீர்களா?”

‘‘மேற்கு ஒடிசாவைச் சேர்ந்த மக்கள் அன்போடு கேட்டுக் கொண்டதால் அங்கு போட்டியிட்டேன். பெரும் வெற்றியை எனக்குத் தந்த பீஜப்பூர் மக்களுக்கு என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’’

“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முழுமையாக நம்புகிறீர்களா? அதில் பல முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றனவே...குறிப்பாக, பழங்குடிகள் இருக்கும் பகுதிகளில் அதிக முறைகேடுகள் நடப்பதாக சந்தேகம் கிளம்பியிருக்கிறதே?”

‘‘அதில் உண்மை இல்லை. ஆனால் இந்த சந்தேகங்களைப் பற்றியும், குற்றச்சாட்டு களைப்பற்றியும் முறையான விளக்கங்கள் தருவதும் குழப்பங்கள் தீர்க்கப்படுவதும் அவசியம்!”

“ஒடிசாவில் கார்ப்பரேட் சுரங்க நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்னைகளை எப்படி எதிர்கொண்டீர்கள்?”

‘‘நாங்கள் சுற்றுச்சூழல் கோட்பாடுகளுக்கு உட்பட்டு, சட்டப்படியே சுரங்க அனுமதிகளை வழங்குகிறோம். இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் வனப்பகுதிகள் அதிகரித்திருக்கும் ஒரே மாநிலம் ஒடிசாதான். வனங்கள் பாதுகாப்பிற்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.’’

‘‘ஒடிசா இன்னும் பின்தங்கிய மாநிலமாகவே இருப்பது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”

‘‘கடந்த 1999-ம் ஆண்டு இந்தியா இதுவரை பார்த்திராத ஒரு பெரும்புயல் ஒடிசாவைத் தாக்கியது.  இறப்பு எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் அதிகம். கணக்கிட முடியாத அளவு பொருட்சேதம் ஏற்பட்டிருந்தது, அந்தச் சூழலில் 2000-ம் ஆண்டில் முதன்முதலாக நான் முதல்வராகப் பதவியேற்றேன். அந்தப் பேரழிவிலிருந்து ஒடிசாவை மீட்டெடுத்து, பசி, பட்டினியைப் போக்கியிருக்கிறோம். உணவுப் பற்றாக் குறையிலிருந்து இன்று உணவு உபரி மாநிலமாக ஒடிசாவை மாற்றியிருக்கிறோம். 80 சதவிகித மக்களை வறுமைக்கோட்டிலிருந்து மீட்டெடுத்திருக்கிறோம். இவை எல்லாவற்றையும் ஒரே நாளில் செய்துவிட முடியாது. குறிப்பாக சுயச்சார்பு வளர்ச்சி எனப்படும் நிலையான வளர்ச்சியை முன்னெடுப்பதே எங்களின் குறிக்கோள்.’’ 

விகடன் எக்ஸ்க்ளூசிவ் - “தமிழகத்தை ஆள சரியான தலைமை யார்?”

‘‘ஒடிசாவின் மக்கள் தொகையில் பெருவாரியான மக்கள் பழங்குடியின மக்கள். அவர்களின் வாழ்வாதாரம் எப்படிப் பாதுகாக்கப்படுகிறது?’’

‘‘வன உரிமைகளை வழங்குவதில்  முன்னணி மாநிலமாக நாங்கள் விளங்குகிறோம். எல்லாப் பழங்குடி மாவட்டங்களிலும் பழங்குடியினரின் பண்பாடு மற்றும் மொழியினைப் பேணிப் பாதுகாக்கச் சிறப்பான வளர்ச்சி மையங்களை  அமைத்துள்ளோம்.  இந்நாட்டின் முன்னோடியான முயற்சி இது. நாங்கள் கூட்டு வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டு அதையே சொல்லிலும் செயலிலும் வெளிப்படுத்த முயல்கிறோம்.’’

‘‘இந்தியா முழுவதுமான பி.ஜே.பி அலை ஒடிசாவையும் பாதித்திருக்கிறதா?’’

(மெலிதாகச் சிரிக்கிறார்)  ‘‘2014-ம் ஆண்டோடு ஒப்பிட்டுப்பார்த்தால், இந்த வருடத் தேர்தலில் பிஜு  ஜனதா தளத்தின்  வாக்கு எண்ணிக்கை ஒரு சதவிகிதம் அதிகமாகியுள்ளது, இதுவரை பிஜு ஜனதா தளம் வாங்கியதிலேயே இதுதான் அதிகப்படியான வாக்கு எண்ணிக்கை. இதுதான் 2019-ம் ஆண்டுத் தேர்தலில் நடந்திருக்கிறது. இப்போது சொல்லுங்கள், பி.ஜே.பி அலை ஒடிசாவை பாதித்திருக்கிறதா?”

“2013-ல், ‘மோடியும் ராகுலும் இந்தியாவை ஆள இன்னும் தயாராகவில்லை; தேசத்தை ஆளும் திறமை அவர்களுக்கு இல்லை’ என்று கூறியிருந்தீர்கள்...இன்று வரையிலும் வலுவான மூன்றாவது அணியோ, பலம் மிக்க பிரதமர் வேட்பாளரோ இல்லாத சூழலில் அடுத்த தேர்தலிலாவது, உங்களை அந்த இடத்தில் எதிர்பார்க்கலாமா?”

‘‘இந்தத் தேர்தலில் மோடி ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். மற்றதை எதிர்காலத்தில் பார்ப்போம்.’’

‘‘தமிழக அரசியலைப் பற்றி அறிவீர்கள். இன்றைய சூழலில், தமிழகத்தில் யாருடைய தலைமை சரியானதாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்?’’

‘‘ஒடிசாவில் எனக்குப் பிறகான தலைவரை ஒடிய  மக்களே தேர்ந்தெடுப்பார்கள் என்பதே என் நம்பிக்கை. தமிழ்நாட்டு மக்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்களுக்கேற்ற தலைவரை அவர்களாகவே தேர்ந்தெடுப்பார்கள்.’’

மக்கள்மீதான நம்பிக்கை அழுத்தமாகத் தொனிக்கிறது, மக்கள் ஆதரவு பெற்ற ஒடிசா முதல்வரின் வார்த்தைகளில்!

- ஜெனிஃபர் ம.ஆ