Published:Updated:

மிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்!” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.

மிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்!” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்!” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.

மிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்!” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.

மிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்!” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.

மிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்!” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.

Published:Updated:
மிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்!” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்!” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.
மிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்!” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.

ழுகார் உள்ளே நுழைந்தபோது, காமெடி சேனல் ஓடிக்கொண்டிருந்தது. அதில் பஞ்சாயத்தைக் கலைத்துவிட்ட சூனாபானா வடிவேலு, ‘‘அதான் சொல்லியாச்சு இல்லை... போ போ’’ என்று எல்லோரையும் துண்டால் விரட்டிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்த கழுகார், ‘‘சிச்சுவேஷன் சீன் பார்த்துக்கொண்டிருக்கிறீர்... இப்படித்தான் அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தையும் எந்தப் பஞ்சாயத்தும் இல்லாமல் முடிப்பதற்குள் படாதபாடு பட்டுவிட்டார்களாம்!’’ என்றார்.

‘‘கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்காமலே, ‘ஊடகத்தில் யாரும் பேசக் கூடாது’ என்று கட்டளை போட்டிருக்கிறார்களே... எதற்கு?’’

‘‘அதுவும் வடிவேலு காமெடி போலத்தான்... விஷயம் எதையுமே சொல்லாமல், ‘அடிச்சுக்கூடக் கேப்பாங்க. அப்பவும் சொல்லிடாதீங்க’ என்று ‘போண்டா’ மணி சொல்வதைப்போல, கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்காமலேயே ‘வெளியில் எதையும் சொல்ல வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்கள். நிர்வாகிகள் ஒருவகையில் குழம்பிப்போனாலும் புகைச்சல் அடங்கியதில் எல்லோருக்குமே கொஞ்சம் நிம்மதிதான்!’’

‘‘இந்தக் கூட்டம் நடப்பதற்கு முன்னால் அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் அவசரமாக டெல்லி போனார்களே... அதற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?’’

‘‘தமிழகத்தில் பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைப்பதை அ.தி.மு.க-வினரும் அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் தொடர்வதை பி.ஜே.பி-யினரும் விரும்பவில்லை என்ற சூழல் உருவாகியிருக்கிறது. ‘உங்களால்தான் நாங்கள் தோற்றோம்’ என்று பரஸ்பரம் இருதரப்பும் மாறிமாறிக் குற்றம்சாட்டத் தொடங்கிவிட்டார்கள். அதனால் எந்த நேரத்திலும் கூட்டணி முறியுமோ என்கிற நிலையில்தான் இரண்டு அமைச்சர்களும் டெல்லிக்குச் சென்றார்கள்.’’

மிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்!” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.

‘‘தெரிந்த கதைதானே!’’

“தெரியாத கதைகளும் இருக்கின்றன கேளும்... கிட்டத்தட்ட அவர்கள் டெல்லிக்குச் சென்ற காரியம் ‘சக்சஸ்’ என்கிறார்கள். அவர்கள் டெல்லிக்குச் சென்றதே கட்சியில் மீண்டும் தலையெடுத்துவரும் ஓ.பன்னீர்செல்வத்தை ஆஃப் செய்யத்தானாம். இதன் மூலம் அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள ‘ஒற்றைத் தலைமை’ சர்ச்சை... அமைச்சர் பதவிச் சண்டை ஆகியவற்றுக்கு முடிவுகட்டலாம் என்று நினைத்தார்கள். மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை ஆஃப் செய்ய அமித் ஷா மனது வைத்தால்தான் முடியும் என்பதையும் அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள். ஆனால், டெல்லியில் அமித் ஷாவின் அப்பாயின்ட்மென்ட் அவ்வளவு சீக்கிரம் கிடைத்துவிடவில்லை. சொல்லப்போனால் முதலில் அவரைச் சந்திக்கவே அனுமதி கிடைக்கவில்லையாம்!”

“அப்புறம்...”

“அழாத குறையாக... பியூஸ் கோயலைப் பிடித்துப் பேசி ஒருவழியாக அப்பாயின்ட்மென்ட் வாங்கிவிட்டார்கள். அமித் ஷா வழக்கமாகவே கறார் பேர்வழி... மோடியிடம் பேசும்போது மட்டும்தான் அவரது வாய்ஸ் இறங்கும். மற்றபடி சொந்தக்கட்சியினர் வந்தாலே மிரட்டும் தொனியில்தான் பேசுவார். இப்படியான சூழலில், இவர்களிடம் காட்டிய ரியாக்‌ஷனை சொல்லவும் வேண்டுமா... அமித் ஷா அறைக்குள் சென்ற இருவரும் அம்மாவுக்கு காட்டியதைவிட பலமடங்கு அதிகமான பவ்யம் காட்டியுள்ளனர். சந்திப்பு நடந்த கால்மணி நேரமும் சீட் நுனியை விட்டு இருவரும் நகரவே இல்லையாம்!’’

‘‘இனி ‘அம்மாவின் ஆசியோடு’ என்பதைக்கூட ‘அமித் ஷா ஆசியோடு’ என்று சொல்வார்களோ?’’

‘‘நக்கல்தான், கேளும்... அமித் ஷா ஆங்கிலத்தில் பேசுவதைவிட இந்தியில் பேசுவதே அதிகம். ஆனால், போன இருவருக்கும் இந்தி தெரியாது. மொழிபெயர்ப்பாளர் உதவியுடன்தான் பேசியிருக்கிறார்கள். அப்போது அ.தி.மு.க-வில் நடந்துவரும் குழப்பங்கள் குறித்து சுருக்கமாகச் சொன்னார்களாம். குறிப்பாக, பி.ஜே.பி தரப்புடன் ஓ.பன்னீர்செல்வம் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியதால் ஏற்பட்ட பிரச்னையை விளக்கி, ‘ஆட்சி நீடிக்க பி.ஜே.பி-யின் தயவு தேவை. அதற்கு ஓ.பன்னீர் செல்வமும் ஒத்துழைக்க வேண்டும். நீங்கள் சொன்னால்தான் அவர் கேட்பார்’ என்று ஒருவழியாகச் சொல்லி முடித்தார்களாம்!”

‘‘அமித் ஷா என்ன சொன்னாராம்?’’

‘‘அவர் எதையும் வெளிப்படையாகப் பேச மாட்டார்... விஷயத்தை உள்வாங்கிக்கொள்வார். இவர்கள் சொன்ன சில விஷயங்களைக் கேட்ட பின்பு, அமித் ஷா தரப்பிலிருந்து அ.தி.மு.க முகாமில் சிலரிடம் பேசப்பட்டிருக்கிறது. சிலரைக் கூப்பிட்டு ‘கீப் கொய்ட்’ என்கிறரீதியில் சவுண்ட் விட்டிருக்கிறார்கள். அதன் எதிரொலி யாகத்தான் அ.தி.மு.க கூட்டம் சைலன்ட் ஆக முடிந்திருக்கிறது!’’

‘‘அமித் ஷா விட்ட சவுண்டில் ‘சங்க’த்தைக் கலைத்துவிட்டார்கள் என்று சொல்லும்... சரி, எடப்பாடி என்ன நினைக்கிறாராம்?”

‘‘அமித் ஷா திட்டம் தவிர்த்து, அதிருப்தி நிர்வாகிகளைச் சமாளிக்க எடப்பாடி தரப்பு இன்னொரு திட்டத்தையும் தயாராக வைத்திருந்தது. கூட்டத்தில் ஒருவர் சத்தம்போட்டாலும் அதைத் தொடர்ந்து ஆளுக்கு ஆள் சத்தம்போட... பிரச்னையாகிவிடும் என்று நினைத்த எடப்பாடி, ‘ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அவைத் தலைவர் மதுசூதனன் ஆகியோர் மட்டுமே பேசுவார்கள்’ என்று கூட்டம் ஆரம்பித்தபோதே அறிவித்துவிட்டார். அப்போதே கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு ‘கூட்டம் புஸ்’ என்று தெரிந்துவிட்டது.’’

‘‘ஹைய்யோ... ஹைய்யோ!’’

‘‘கட்சிக்குள் உள்ள குழப்பங்கள் பற்றி எடப்பாடி பழனிசாமியாவது ஏதாவது பேசுவார் என்று நினைத்தார்கள்... ஆனால், தி.மு.க-வினர் குறித்துப்பேசியே சாமர்த்தியமாகக் கூட்டத்தை முடித்துவிட்டார் எடப்பாடி. ‘நாம் 17,000 கோடி ரூபாய் விவசாயக் கடன் கொடுத்தோம். ஆனால் தி.மு.க-வினர் விவசாயக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி என்கிற ஒற்றை அறிவிப்பில் வாக்குகளை வாங்கிவிட்டார்கள். இந்த அறிவிப்பினால் நமது கட்சியினர்கூட கடன் தள்ளுபடியாகும் என்கிற ஆசையில் வலியச் சென்று கூட்டுறவு வங்கியில் நகைகளை அடமானம் வைத்திருக்கிறார்கள். நம்முடன் பி.ஜே.பி நல்ல உறவில் இருக்கிறது. எனவே, பி.ஜே.பி-க்கு எதிராக யாரும் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம். நமது எம்.எல்.ஏ-க்களை தி.மு.க வளைப்பது எல்லாம் நடக்காத காரியம். தி.மு.க-வை விரைவில் சட்டப்படி சந்திப்போம்’ என்று பேசி கூட்டத்தில் டென்ஷனைக் குறைத்துள்ளார் எடப்பாடி.’’

‘‘ஓ.பன்னீர்செல்வம் என்ன பேசினாராம்?’’

‘‘அவர்தான், ‘அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்புக்குழு விரைவில் அமைக்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பால் ‘ஒற்றைத் தலைமை’ விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். புதியதாக நியமிக்கப்படும் இந்த 11 பேர்களில் தன் ஆதரவாளர்களையும் அனுப்பி கட்சியைக் கட்டுப்படுத்தலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் நினைக்கிறார்.”

‘‘இரண்டு அமைச்சர்களும் ஒரு எம்.எல்.ஏ-வும் கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை?’’

“சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் மகன் விபத்தில் அடிபட்டு தீவிர சிகிச்சையில் இருக்கிறார். அதனால் சி.வி.சண்முகம் வரவில்லை. ஓ.எஸ்.மணியன் சொந்தக் காரணத்தால் வரவில்லையாம். சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த, குன்னம் எம்.எல்.ஏ-வான ராஜேந்திரன், வைத்தியலிங்கத்தின் ஆதரவாளர். அவர் வராமல் போனதில் எடப்பாடிக்கு ஆரம்பத்தில் ஒரு ஜெர்க் இருந்தது. ஆனால், அவர் கேரளத்தில் சிகிச்சையில் இருப்பது உறுதியானதால் நிம்மதியானார்.”

மிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்!” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.

‘‘வேறு ஏதேனும் டெல்லி விஷயங்கள் இருக்கின்றனவா?”

‘‘இல்லாமலா... கேரள கவர்னர் சதாசிவத்தின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைகிறது. மத்திய அரசுக்கும் எடப்பாடி தரப்புக்கும் பாலமாக இருக்கும் இவர், மீண்டும் பதவியில் தொடர வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். குருவாயூர் கோயிலுக்கு மோடி வந்தபோது, அடுத்து ஆந்திர கவர்னராக நியமிக்கும்படி சதாசிவம் தரப்பு கோரிக்கை வைத்திருக்கிறதாம். ‘வெயிட்’ என்று மட்டும் மோடி தரப்பில் சொல்லப்பட்டதாம்.”

‘‘அமைதியாகிவிட்டதே அ.ம.மு.க?’’

‘‘அ.ம.மு.க-வில் நிர்வாகிகள் மாற்றம் விரைவில் இருக்கும் என்கிறார்கள். மண்டலப் பொறுப்பாளர் பதவியை எடுத்துவிட்டு, இரண்டு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்புகளை உருவாக்கப்போகிறார்கள். மாவட்ட வாரியாகத் தூக்க வேண்டிய மாவட்டச் செயலாளர்கள், அணி நிர்வாகிகள் பட்டியலும் தயாராகிவருகிறது. பட்டியலை தினகரனே நேரடியாகத் தயார் செய்கிறாராம்.’’

‘‘தி.மு.க-வினருக்கு என்ன ஆயிற்று... இவ்வளவு அமைதியாக இருக்கிறார்களே?’’

‘‘அவர்கள் அமைதியாக உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிவருகிறார்கள். கட்சித் தலைவர் ஸ்டாலின் தரப்பு, ‘தி.மு.க-வின் ஆட்சியைக் கைப்பற்றும் ஆபரேஷன்’ தகவல்கள் வெளிவருவதை விரும்பவில்லையாம். அதனால், ‘எதையும் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள வேண்டாம். விரைவில் நல்லது நடக்கும்’ என்று சொல்லப்பட்டுள்ளதாம். அதனால்தான் இந்த அமைதி என்கிறார்கள்.”

“ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலர் மாற்றப்பட்டிருக்கிறார்களே?”

“ஆமாம்... மூன்று ஐ.பி.எஸ், ஒரு ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் மத்திய அயல் பணியாக சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். அவர்களில் தூத்துக்குடி எஸ்.பி-யாக இருக்கும் முரளி ரம்பாவும் ஒருவர். கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவத்தின்போது நீலகிரி எஸ்.பி-யாக இருந்த இவர்தான் முதலில் அந்தச் சம்பவத்தை விசாரித்தார். இப்போது மத்திய அரசுப் பணிக்கு இவரை அனுப்பியதே முக்கிய அமைச்சர் ஒருவர்தானாம். ‘எல்லாவற்றுக்கும் காரணம் இருக்கிறது’ என்று ஐ.பி.எஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் கண்சிமிட்டு கிறார்கள். ஆனால், எந்தளவுக்கு அது உறுதியான தகவல் என்று சொல்வதற்கில்லை. இதுதான் இப்போது ஐ.பி.எஸ் அதிகாரிகள் மத்தியில் ‘டாக்’காக இருக்கிறது.’’

‘‘இது டெல்லிக்குத் தெரியுமா?’’

‘‘அது தெரியவில்லை... மற்றொரு டெல்லி தகவல்... பி.ஜே.பி மாநிலத் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடந்தது. அமித் ஷாவின் தலைவர் பதவிக்காலம் முடிவதால் அடுத்த தலைவர் யார் என்று கேள்வி எழுந்திருக்கிறது. அதற்கு, ‘இன்னும் சில காலத்துக்கு அமித் ஷாவே தொடரட்டும்’ என்று சொல்லியிருக்கிறார்கள்!’’ என்ற கழுகார் சிறகு விரித்தார்.

படம்: வி.ஸ்ரீனிவாசுலு
அட்டை ஓவியம்: ஹாசிப்கான்

ஆபீஸ் போட்டு வசூல்!

மிழகத்தில் ‘ஜூடிஷியல்’ பலத்தைப் பின்னணியாகக்கொண்ட நபர் ஒருவர் இருக்கிறார். அவர், ‘பி.ஜே.பி-யின் பெரியவர்கள் இருவரும் என் பேச்சைத் தட்டவே மாட்டார்கள்!’ என்று சொல்லி முக்கிய நபர்கள் பலரிடமும் ஆபீஸ் போட்டு வசூல் செய்துவருகிறாராம். தவிர, ‘இப்போது தலைமையில் இருக்கும் பவர்ஃபுல் நபரை பிரபல கலவர வழக்கிலிருந்து மீட்டது நான்தான்’ என்றெல்லாம் ஜம்பம் அடித்திருக்கிறார். இந்தநிலையில், இந்த ‘ஜூடிஷியல் நபர் ராஜகுருவுடன் சேர்ந்து பல விவகாரங்களில் தலையிட்டிருக்கிறார்’ என்று பி.ஜே.பி தலைமைக்குச் சிலர் ஆதாரங்களுடன் கொளுத்தி போட்டிருக்கிறார்கள். இதையடுத்து இருவர் மீதும் கடும்  கோபத்தில் இருக்கிறதாம் பி.ஜே.பி தலைமை. விரைவில் ஒரு விவகாரம் வெடிக்கும் என்கிறார்கள்!