Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

Published:Updated:
ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

லகக் கோப்பை சீசன் இது! ஒவ்வொரு டீமின் ப்ளஸ் மைனஸை ஆராயும்போதுதான், ‘இது ஏற்கெனவே பார்த்த டிசைன் ஆச்சே’ என்று சட்டென ஜெர்க் ஆகிறது. நம்மூர் கட்சிகளுக்கும் உலகக் கோப்பை ஆடும் அணிகளுக்கும் இடையே பத்து பொருத்தங்களையும் தாண்டி பக்காவாக அமைகின்றன, எல்லாக் கட்டங்களும்! எப்படி?... இந்தா இப்படித்தான்!

இலங்கை: ஒருகாலத்தில் ஓஹோவென இருந்த டீம். ஃபைனல், செமி ஃபைனல் எல்லாம் இவர்களுக்குத் தண்ணி பட்டபாடு. ஆனால், அதன்பின் வழிநடத்த சரியான தலைவர்கள் இல்லாமல் இப்போது நொண்டியடித்துக்கொண்டு இருக்கிறது. இப்போதெல்லாம் இலங்கை ஜெயித்தால், அதை அந்த டீம் ப்ளேயர்களே நம்பமுடியாமல் கிள்ளிப் பார்த்துக்கொள்கிறார்கள். போகிறபோக்கைப் பார்த்தால் நிலைமை இன்னும் மோசமாகும்போல... அ.தி.மு.க-வைப்போலவே!

ஐடியா அய்யனாரு!

இங்கிலாந்து: எல்லாமே இங்கிருந்துதான் ஆரம்பித்தது. அதற்கான பெருமை இருக்கலாம். ஆனால், இவர்களின் பிரச்னையே, ‘நாங்க இல்லாட்டி என்னாகும் தெரியும்ல’ எனப் பக்கம்பக்கமாகப் பேசுவதுதான். அணியில் எல்லாம் இருந்தும் சரியான சமயத்தில் அதைப் பயன்படுத்தி வெற்றிபெறத் தவறுவார்கள். இந்த முறை அப்படி நடக்காது என பயங்கர உறுதியாக மார்தட்டுகிறார்கள். இப்போது இதே இடத்தில் தி.மு.க-வைப் பொருத்திப் பார்க்கவும்.

வெஸ்ட் இண்டீஸ்: மற்றவர்களையெல்லாம் ஓரமாக உட்காரவைத்து ஒன்மேன் ஷோ நடத்திய அணி. மிரட்டு மிரட்டென மிரட்டியவர்கள் இன்று, ‘அந்த கப்பைக் கழுவி வைக்கிறப்போ கொஞ்சம் கொடுத்தீங்கன்னா தொட்டுப் பாத்துக்குவோம்’ என பம்மிப் பதுங்கி நிற்கிறார்கள். ‘டீமுல அவுக இருக்காக, இவுக இருக்காக’ என அறிவிப்பு மட்டும் வரும். தப்பித்தவறிகூட வெற்றி வராது. வாசிக்கிறப்பவே காங்கிரஸ் ஞாபகம் வரல?

பங்களாதேஷ்: யூத்துகள் இணைந்து ஆடும் அணி. நாகக்கன்னி டான்ஸ், வஞ்சிர மீன் டான்ஸ் எனக் கும்பலாக கவுன்ட்டர் கொடுப்பார்கள். கத்துக்குட்டி அணியாகப் பலகாலமிருந்து இப்போது திடீர்திடீர் வெற்றிகளால் பெரிய அணிகளுக்கு ஷாக் கொடுக்கிறார்கள். கிரிக்கெட் தாண்டி பேச்சுப் போட்டி, மிமிக்ரி, ஸ்லெட்ஜிங் எல்லாம் வைத்தால் தம்பிகளுக்கே முதலிடம். அதான் தம்பிகள்னு சொல்லியாச்சே! தெரிஞ்சுருக்குமே!

கென்யா:
‘நாங்களும் ஆட்டைக்கு இருக்கோம்’ என ஒரு தொடர்விடாமல் வந்த அணி. திடீரென ஒரு தொடரில் செமி ஃபைனல்வரை வந்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியது. ‘வாவ், இனி சூப்பரா ஆடப்போறாங்க’ என அனைவரும் எதிர்பார்க்க, ‘சாரி அன்னிக்கு ஏதோ நல்லா ஆடிட்டோம். எப்பவுமே அப்படி ஆடினா அப்புறம் கென்யாவுக்கு என்ன மரியாதை?’ என அவர்களே வாளியில் மண் அள்ளி மேலே கவிழ்த்துக் கொண்டார்கள். யெஸ், அதேதான்! தே.மு.தி.க-வேதான்!