Published:Updated:

ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு!

ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு!
ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு!
ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு!

அரியலூர்: முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சி எம்.எல்.ஏ.வும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு ஆகியோர் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.

அரியலூரில் கடந்த பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதியன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில், இருவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அரியலூர் அமர்வு நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் சண்முகம்.
இதற்கான மனுவை தாக்கல் செய்துளார்.

 


வழக்குப்போடும் அளவுக்கு அவர்கள் பேசிய பேச்சுக்கள் இங்கே...

காடுவெட்டி குரு

ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு!

 ‘‘இந்த அரியலூர் மாவட்டத்தை பெற்றுத் தருவதற்காக கிட்டத்தட்ட 15 ஆண்டு காலமாக போராடி அதில் வெற்றி கண்டவர் எங்கள் அய்யாதான். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு தாழ்த்தப்பட்டவரை முதல்வராக்குவேன் என சொன்னது எங்கள் அய்யா மட்டுமே. தீண்டாமை ஒழிய நடவடிக்கை எடுப்பதும் அய்யாதான்'' என ராமதாஸுக்கு புகழாரம் சூடியவர்,

''அப்படிப்பட்ட அய்யா, மதுரை, கடலூர் மாவட்டங்களில் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக இனியும் தடை விதிக்க நினைத்தால், முதல்வர் ஜெயலலிதா வீதியில் நடக்க முடியாது. தமிழகம் அமைதியாக இருக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை'' என்று ஜெயலலிதாவை நேரடியாக எச்சரித்தார்.

ராமதாஸ்

ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு!

"எரிமலை எப்படி இருக்கும் என்பதை குருவை பார்த்தே உணர்கிறேன். வடமாவட்டங்களில் வன்முறையை குறைப்பதற்காக, இணைந்த கைகள் இனி பிரியாது என திருமாவளவனோடு தம்பி என்கிற முறையில் கைகோர்த்தேன். அதற்கான பலனை நான் அனுபவித்து விட்டேன். இப்போது என்னை தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக சித்தரிக்கிறார்கள். உண்மையில் என்னைவிட தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராடியவர் இந்தியாவிலேயே யாரும் இல்லை.

மதுரை, கடலூர் மாவட்டங்களில் நான் நுழைவதற்கு அரசு தடைவிதித்துள்ளது. நான் போனால் கலவரம் வரும் என்கிறார்கள். கடந்த காலங்களில் நடந்த தென்மாவட்ட கலவரங்களுக்கு நான்தான் காரணமா? என்னை பற்றி கலைஞருக்கு தெரியும்.இந்த ஜெயலலிதாவிற்கு தெரியல!

இனி நான் எந்த மாவட்டத்திற்குள்ளும் நுழையக்கூடாது என  தடைவிதித்தால் தமிழகம் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இதை அரசுக்கு எச்சரிக்கை. தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன் என்னை சீண்டி பார்க்க வேண்டாம் "என்றார்.

இந்த பேச்சுக்காகத்தான் இப்போது பா.ம.க. தலைவர் ராமதாஸ் மீதும், வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டி குரு மீதும் அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக வரும் 13ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருக்கிறார் அரியலூர் நீதிமன்ற நீதிபதி உத்திராபதி.

இந்த வழக்கு பதிவால் அரியலூரில் பதற்றம் கூடியுள்ளது.

-சி.ஆனந்தகுமார்

படங்கள்: எம்.ராமசாமி