Published:Updated:

ஒரேயொரு எம்.பி வருகிறார் பராக்... பராக்! - புதுமுகம் ரவீந்திர நாத் அதகளம்

ஒரேயொரு எம்.பி வருகிறார் பராக்... பராக்! - புதுமுகம் ரவீந்திர நாத் அதகளம்
பிரீமியம் ஸ்டோரி

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற அ.தி.மு.க-வின் ஒரே எம்.பி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார். இவர் பெற்ற வெற்றியை முன்வைத்துத்தான் கழகத்தில், ‘ஒற்றைத் தலைமை’ புகைச்சலே கிளம்பியிருக்கிறது. இப்படியாக அ.தி.மு.க முகாமே இரண்டுபட்டுக்கிடக்க... மனிதர் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல், ‘அவங்களுக்கெல்லாம் என்மேல பொறாமை’ என்கிறரீதியில் தொகுதிக்குள் கூலாக வலம்வருகிறார்! 

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கும் ரவீந்திரநாத் குமார், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிகளுக்குள் வந்துவிட்டால், கட்சி நிர்வாகிகளுக்கு குஷிதான்! மாவட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்கள் தொடங்கி அமைச்சர்கள்வரை மொய்த்துக் கொள்கிறார் கள். மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார்தான் இவரது நன்றி அறிவிப்புக் கூட்டங்களுக்கு ஒருங்கிணைப்பாளர்.

ஒரேயொரு எம்.பி வருகிறார் பராக்... பராக்! - புதுமுகம் ரவீந்திர நாத் அதகளம்

ஜூன் 6-ம் தேதி ரவீந்திரநாத்தின் பயணம் ஆரம்ப மானது. பாலமேடு அருகேயுள்ள மஞ்சமலை அய்யனாருக்கு மாலையைப் போட்டு முதலில் நன்றியைத் தெரிவித்தவர், பின்னர் மக்களுக்கு நன்றி தெரிவிக்கக் கிளம்பினார். பெண்கள் ஆரத்தி எடுக்கவும் வரவேற்பு கொடுக்கவும் ஆர்.பி.உதயகுமார் தனி ‘கவனிப்பு’களைச் செய்திருந்தார். சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம், மேலூர் எம்.எல்.ஏ பெரியபுள்ளான், மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ சரவணன் ஆகியோர் புடைசூழ சிரித்த முகம் மாறாமல் (உபயம்: தந்தை ஓ.பன்னீர்செல்வம்) நன்றியைத் தெரிவித்தார் ரவீந்திரநாத்.

இவர் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் பெரும்பாலும், ‘குடிநீர்ப் பிரச்னை களைத் தீர்க்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர். அதற்குத் தலையாட்டிய ரவீந்திரநாத் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இடையே ஒருநாள் தேனிக்குச் சென்றவர், அங்கு ‘போலந்து நாட்டில் நடைபெற்ற விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான போட்டி’யில் கலந்துகொண்டு, விண்வெளி பயிற்சிக்குத் தேர்வாகியிருந்த மாணவி உதயகீர்த்திகா வீட்டுக்குச் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். கூடவே, ஊக்கத்தொகையாக மூன்று லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் அளித்தார்.

‘‘தேர்தல் பிரசாரத்தின்போது படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதாகக் கூறினேன். நிச்சய மாகத் தமிழகத்திலுள்ள தலைசிறந்த நிறுவனங்கள் பங்கேற்கும்படியான வேலைவாய்ப்பு முகாமை நடத்தி, இந்தப் பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவேன். அவர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்களைச் செயல் படுத்துவேன். ஒரு விவசாயிகூட விடுபடாத வகையில், அரசு அறிவித்துள்ள திட்டங் களைப் பெற்றுத்தருவேன். இங்கு அலுவல கம் அமைத்து மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்ப்பேன். ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கப் போராட்டம் நடத்திய இளைஞர்களை நினைவுகூரும் வகையில், அலங்காநல்லூரில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்’’ என்று பேசினார் ரவீந்திரநாத்.

ஒரேயொரு எம்.பி வருகிறார் பராக்... பராக்! - புதுமுகம் ரவீந்திர நாத் அதகளம்

முன்பு, கட்சி நிகழ்ச்சிகளில் அமைதி யாகத் தன்னைக் காட்டிக்கொள்வார் ரவீந்திரநாத். சத்தமே இருக்காது. தனது வெற்றிக்குப் பிறகு, அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வது மட்டு மல்லாமல், தன் அரசியல் சாம்ராஜ்ஜியத்தை மதுரை மாவட்டத்திலும் விரிவுபடுத்தி வருகிறார் ரவீந்திரநாத். சமீபத்தில் ராஜன் செல்லப்பா தலைமைக்கு எதிராகக் குரல் எழுப்பியதற்கு, இவரது இந்த ‘எல்லை தாண்டிய’ என்ட்ரியும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. தவிர, மதுரை மாவட் டத்தின் உசிலம்பட்டி மற்றும் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிகள் தேனி எம்.பி தொகுதிக்குள் அமைந்துள்ளதும் ரவீந்திர நாத்துக்கு வசதியாகப் போய்விட்டது.

அப்புறமென்ன... வழிவிடுங்கள்... ஒரே யொரு எம்.பி வருகிறார் பராக்... பராக்!

- செ.சல்மான்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்