Published:Updated:

“ஊடகத்தில் பேசக்கூடாது” எடப்பாடி அதிரடி! - அமைச்சர் ஜெயக்குமார் சரவெடி...

“ஊடகத்தில் பேசக்கூடாது” எடப்பாடி அதிரடி! - அமைச்சர் ஜெயக்குமார் சரவெடி...
பிரீமியம் ஸ்டோரி
“ஊடகத்தில் பேசக்கூடாது” எடப்பாடி அதிரடி! - அமைச்சர் ஜெயக்குமார் சரவெடி...

“ஊடகத்தில் பேசக்கூடாது” எடப்பாடி அதிரடி! - அமைச்சர் ஜெயக்குமார் சரவெடி...

“ஊடகத்தில் பேசக்கூடாது” எடப்பாடி அதிரடி! - அமைச்சர் ஜெயக்குமார் சரவெடி...

“ஊடகத்தில் பேசக்கூடாது” எடப்பாடி அதிரடி! - அமைச்சர் ஜெயக்குமார் சரவெடி...

Published:Updated:
“ஊடகத்தில் பேசக்கூடாது” எடப்பாடி அதிரடி! - அமைச்சர் ஜெயக்குமார் சரவெடி...
பிரீமியம் ஸ்டோரி
“ஊடகத்தில் பேசக்கூடாது” எடப்பாடி அதிரடி! - அமைச்சர் ஜெயக்குமார் சரவெடி...

அ.ம.மு.க ஒரு வெங்காயம்!
போதும், குருமூர்த்தி இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்!
தன்மானத்தை இழந்து அமைச்சர் பதவி அவசியமில்லை!

நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி, ஒற்றைத்தலைமை புகைச்சல், டெல்லி குடைச்சல்... என்று படபடப்பாக இருக்கிறது அ.தி.மு.க முகாம். இதற்கிடையே ஜூன் 12-ம் தேதி நடைபெற்ற அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் ‘ஊடகத்தில் கட்சி நிர்வாகிகள் யாரும் பேசக்கூடாது’ என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்படியான சூழலில் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த ‘தில்’ தெறி பேட்டி இது!

“2014 நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கட்சி, தற்போது அதே அளவுக்குத் தோல்வியைச் சந்தித்திருக்கிறதே?’’

“இது தோல்வி கிடையாது. தற்காலிகப் பின்னடைவு. ஏற்கெனவே இதுபோன்ற தோல்வி களை இந்த இயக்கம் சந்தித்து மீண்டெழுந்திருக்கிறது. அதுபோல மீண்டும் மீண்டெழுவோம். பொய்ப்பிரசாரம் தமிழகத்தில் எடுபட்டிருக்கிறது. கூட்டணியில் இருந்தவர்கள் ஒருமித்தக் கருத்துடன்தான் வேலை செய்தோம். தமிழகத்தில் தி.மு.க வெற்றி பெற்றாலும், ஸ்டாலினுக்கு இது தோல்விதான். தோற்றாலும் நாங்கள்தான் ராஜா!’’

“உள்ளாட்சித் தேர்தலில் இதே கூட்டணி நீடிக்குமா?’’

“நாளை நடப்பதை கணித்துச் சொல்ல முடியாது. எங்கள் கூட்டணி நல்ல முறையில்தான் இருக்கிறது. முடிவுகளை கட்சித் தலைமைதான் எடுக்கும்.’’

“ஊடகத்தில் பேசக்கூடாது” எடப்பாடி அதிரடி! - அமைச்சர் ஜெயக்குமார் சரவெடி...

“ராஜ்ய சபா சீட்டை அன்புமணிக்கு கொடுப்பீர்களா?’’

“கூட்டணியின்போது என்ன ஒப்பந்தம் போடப்பட்டதோ, அதை நிச்சயம் செயல்படுத்துவோம். நாங்கள் சொன்னபடி, அந்த சீட் பா.ம.க-வுக்குத் தான். அது, யாருக்கு என்று பா.ம.க தலைமை தான் முடிவுசெய்ய வேண்டும்.”

“பி.ஜே.பி தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றும், மத்தியில் ஒற்றை அமைச்சர் பதவியைக்கூட அ.தி.மு.க-வால் பெற முடியவில்லையே?’’

“எங்களுக்குப் பதவி ஒரு பொருட்டல்ல. தன்மானத்தை இழந்துதான் பதவியைப் பெறவேண்டும் என்கிற அவசியமும் இல்லை. நாங்களாகக் கேட்கவும் இல்லை. ஒருவேளை அவர்களாக அழைத்தால், அமைச்சரவையில் பங்குபெறுவது குறித்து கட்சித் தலைமை முடிவுசெய்யும்.’’

“அப்படி என்றால் ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி கேட்கப்படவில்லையா?’’

“இல்லை. முதலில் நாங்கள் கட்சிக்குள்ளேயே பேசிக்கொள்ளவில்லை. நாங்களே பேசி முடிவெடுக்காமல், எப்படிப் பதவி கேட்க முடியும்?’’

“அ.ம.மு.க இந்தத் தேர்தலில்...”

(இடைமறிப்பவர்...) “ஒன்றுமில்லாத வெங்காயம்தான் அந்தக் கட்சி. அவர்களுக்கு கொள்கையும் கிடையாது; கோட்பாடும் கிடையாது. வளர்த்துவிட்ட கட்சியையே அழிக்க நினைப்பவர்கள். அங்கிருந்து நிறையப் பேர் மீண்டும் தாய்க்கழகத்துக்கு வருகிறார்கள்; இன்னும் நிறையப்பேர் வருவார்கள். இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு மீதமுள்ள நாள்களைச் செலவழிக்கட்டும். அவர்கள் அரசியல்வாதிகள் கிடையாது, அரசியல் வியாபாரிகள்!’’

“கார்ட்டூன்களால் அ.தி.மு.க-வைக் கேலி செய்கிறாரே, குருமூர்த்தி?’’

“அதற்கு எங்கள் கண்டனத்தைத் தெரிவித் திருக்கிறோம். ஆனால் ஒருவிஷயம்.... போதும், குருமூர்த்தி இத்துடன் எல்லாவற்றையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். குருமூர்த்தியை பி.ஜே.பி தலைவர் என்று பிம்பப்படுத்த வேண்டாம். அவர், அந்தக் கட்சியிலேயே இல்லை. ஒருவேளை, அவர் அந்தக் கட்சியில் இருந்துகொண்டு அந்த கார்ட்டூனை வெளியிட்டிருந்தால், எங்கள் பதிலடி வேறுமாதிரியாக இருந்திருக்கும்.’’

“உங்கள் கட்சியில் ‘ஒற்றைத் தலைமை’ கோஷம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறதே?’’

“கோடிக்கணக்கான தொண்டர்கள் உள்ள மிகப்பெரிய இயக்கம் அ.தி.மு.க. இதில், சில கருத்து வேறுபாடுகள் வரலாம். அம்மா காலத்திலும் கோஷ்டிப்பூசல் இருந்தது; இப்போதும் இருக்கிறது. ஆனால், கட்சிக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. அம்மா இல்லாத சூழ்நிலையிலும் இவ்வளவு தூரம் கட்சியைக் கட்டுக்கோப்பாக நடத்திவருகிறோம். கட்சியின் முடிவுக்கு எல்லோரும் கட்டுப்படுவோம்.’’

“சரி, ‘ஒற்றைத்தலைமை’ குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் ஏன் விவாதிக்கப்படவில்லை?’’

“கட்சித் தலைமை தீர்க்கமாக இருக்கிறது. அதனால் நிர்வாகிகள் கூட்டத்தில் எதுவும் பேசவில்லை. கட்சிக்கு எது தேவையோ, அதுதான் நடக்கும்.’’

“ஏற்கெனவே நான்கு பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு இருக்கும்போது, அதை ஏன் விரிவுபடுத்த வேண்டும்?”

“கட்சியைப் பலப்படுத்த கட்சியே எடுத்த முடிவு இது.’’

- இ.லோகேஷ்வரி
படம்: சு.குமரேசன்