Published:Updated:

அமித்ஷா... சமகால சாணக்யன்!

அமித்ஷா... சமகால சாணக்யன்!
பிரீமியம் ஸ்டோரி
அமித்ஷா... சமகால சாணக்யன்!

அமித்ஷா... சமகால சாணக்யன்!

அமித்ஷா... சமகால சாணக்யன்!

அமித்ஷா... சமகால சாணக்யன்!

Published:Updated:
அமித்ஷா... சமகால சாணக்யன்!
பிரீமியம் ஸ்டோரி
அமித்ஷா... சமகால சாணக்யன்!

1991- ம் ஆண்டு குஜராத் மாநிலம் காந்திநகர்த் தொகுதியில், அப்போதைய பா.ஜ.க தலைவராக இருந்த அத்வானி போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் பா.ஜ.க-வின் இளைஞர் அணியான யுவ மோர்ச்சாவின் இளைஞர் ஒருவர் அத்வானிக்காக பூத் ஏஜென்ட்டாகச் சுற்றிச் சுழன்று பணியாற்றிவந்தார். அப்போது அத்வானிக்குத் தெரியாது, எதிர்காலத்தில் தனது அரசியல் பிம்பத்தை உடைத்துப் புதிய அரசியல் வரலாற்றை பா.ஜ.க-வில் படைக்கப்போகும் இளைஞர் இவர் என்று . அந்த இளைஞரின் பெயர் அமித்ஷா. அன்று அத்வானிக்காக எந்த காந்திநகர்த் தொகுதியில் தெருத்தெருவாக பிரசாரக் களம் கண்டாரோ, இன்று அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ளார். எப்படி இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டது?

அமித்ஷா... சமகால சாணக்யன்!

குஜராத்தின் டிரேடு மார்க்காக அமித்ஷா அடையாளப்படுத்தப்பட்டாலும், அவர் பிறந்தது என்னவோ மஹாராஷ்டிரா மாநிலத்தில். அவரின் தந்தை தொழில் அதிபர். இளம்வயதிலேயே இந்துத்துவ அரசியலில் நாட்டம் கொண்ட அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் சாகா பயிற்சிக்குச் சென்றார். கல்லூரியில் படிக்கும்போது பா.ஜ.க-வின் அகில பாரதிய வித்யா பரிஷத் அமைப்பில் இணைந்த அமித்ஷா அந்த அமைப்பில் திறம்படச் செயலாற்றினார். அதனால் குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க தலைவர்கள் அனைவருக்கும் அறிமுகமானார். அப்போது குஜராத் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் மற்றொரு இளைஞரும் துடிப்புடன் செயலாற்றிவந்தார். அவர் பெயர் நரேந்திர மோடி. தன் செயல்பாடுகளால் ஏ.பி.வி.பி அமைப்பின் மாநிலத் தலைவராக அமித்ஷா உயர்ந்தார். அங்கிருந்து பா.ஜ.க-வுக்குச் சென்று தீவிரமாகப் பணியாற்றினார்.

பா.ஜ.க-வின் குஜராத் மாநில இளைஞரணித் தலைவராக மோடி செயல்பட்டபோதுதான் அதே இளைஞர் அணியில் அமித்ஷா இணைந்தார். இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட் ஆனது. குஜராத்தில் படேல் சமூகத்தின் ஆதிக்கம் அதிகம். அவர்களைத் தாண்டி எந்த அரசியல் இயக்கமும் பெரிதாக சாதிக்க முடியாது. ஆனால், அதை உடைத்துக்காட்டினார் அமித்ஷா.

காலம் காலமாக படேல் சமூகத்தினர் கைவசம் வைத்திருந்த அகமதாபாத் கூட்டுறவு வங்கியின் தலைவர் பதவியைக் கைப்பற்றினார் அமித்ஷா.  அமித்ஷாவின் வளர்ச்சி எவ்வளவு வேகமானதோ, அவர்மீதான சர்ச்சைகளும் அவ்வளவு வேகமாகக் கிளம்பின.

1995-ம் ஆண்டு முதல் முறையாக குஜராத் மாநிலத்தில் கேசுபாய் பட்டேல் தலைமையில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. அப்போதே எதிர்காலத்தில் பா.ஜ.க-வின் கோட்டையாக குஜராத் திகழ வேண்டும் என்கிற முடிவுக்கு வந்த அமித்ஷா, அதற்குத் தேர்ந்தெடுத்த களம் குஜராத் மாநில கிராமங்கள். அப்போது குஜராத் மாநிலத்தில் கிராமப்புறங்களில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக செல்வாக்கு இருந்தது.
அதைக் கொஞ்சம் கொஞ்சமாக உடைக்க ஆரம்பித்தார். 1997-ம் ஆண்டு சர்கெஜ் என்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். பா.ஜ.க-வின் பொதுச்செயலாளராக இருந்த மோடி குஜராத் மாநில முதல்வராகப் பதவியேற்கும் நிலை ஏற்பட்டது.

அது அமித்ஷாவுக்கு ஒருவகையில் ஜாக்பாட் என்றே சொல்லலாம். மோடியின் நிழலாக அமித்ஷா மாறியது கட்சிக்குள் இருந்த சீனியர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால், கட்சியின் சில முக்கிய நிர்வாகிகள் பா.ஜ.க-வை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதுவே இந்த இரட்டையர்களுக்கு சாதகமாகவும் மாறியது. 2002-ம் ஆண்டு குஜராத் சட்டசபைப் பொதுத்தேர்தலில் இரண்டாவது முறையாக மீண்டும் அரியணை ஏறினார் மோடி. இந்த முறை அமித்ஷாவிற்கு அமைச்சர் பதவியும் கிடைத்தது. அமித்ஷா வசம் உள்துறை உட்பட பத்துத் துறைகளை ஒப்படைத்து அழகு பார்த்தார் மோடி. இந்தக் காலகட்டத்தில்தான் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமும், அதன் தொடர்ச்சியாக குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரமும் கரும்புள்ளியாக மாறியது.

குறிப்பாக இஸ்லாமியர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலைத்  துாண்டிவிட்டதே அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாதான் என்ற குற்றச்சாட்டு பலமாக அடிபட்டது.அமைச்சராக இருந்த அமித்ஷா கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அரசியலில் அதிரடிகள்தான் அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் என்று நம்பும் அமித்ஷாவின் கணக்கு தப்பவில்லை. அதுவரை குஜராத்  மட்டுமே அறிந்த  அமித்ஷாவின் பெயரை நாடு முழுவதும் அறியவைத்தது அந்தக் கலவரமே. அதோடு அமைதியாகி விடுவார் என்று எதிர்க்கட்சிகள் கணக்கு போட்டன.ஆனால், அடுத்த அதிரடி அடுத்த சில ஆண்டுகளில் நடைபெற்றது. குறிப்பாக சொராபுதீன் சேக், அவர் மனைவி கவுசர் பீ ஆகியோர் 2005-ம் வருடம் கடத்தப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டனர்.இதற்குப் பின்னணியாக இருந்தவர் அமித்ஷா என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்தக் கொலை நடந்த அடுத்த ஆண்டே இந்த வழக்கின் முக்கிய சாட்சியான துளசிராம் பிரஜாபதி கொலை செய்யப்பட்டார்.போலி என்கவுன்டர் வழக்காக இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டு மஹாராஷ்டிரா மாநிலத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது.ஆனால், இந்த இரண்டு வழக்கிலிருந்தும் அமித்ஷா விடுவிக்கப்பட்டது நாடு முழுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி லோயாவும் மர்மமாக மரணமடைய  எதிர்க்கட்சிகள் பல கேள்விக்கணைகளை எழுப்பி னாலும் அமித்ஷாவின் வளர்ச்சியை அது தடுக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமித்ஷா... சமகால சாணக்யன்!

குஜராத் மாநிலத்தில் ஆளுமை செய்துவந்த அமித்ஷா அகில இந்தியத் தலைவராக வந்ததற்கு சுவாரஸ்யமான காரணமும் உண்டு. மோடி முதல்வராக இருந்தபோது குஜராத் காவல்துறைக்குள் மோதல் வெடித்தது. இந்த மோதல் விவகாரத்திலும் அமித்ஷாவின் தலை உருண்டதால், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமித்ஷா குஜராத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருந்த நேரம்.மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற பேச்சு அப்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பலமாக அடிபட்டு வந்தது. ஒருவேளை தான் பிரதமர்  வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் தனக்கு நம்பிக்கையானவர் களத்தில் இருக்க வேண்டும் என்று திட்டமிட்ட மோடிக்கு நீதிமன்றமே வாய்ப்பை வழங்கியது. இந்தியாவிலேயே அதிக நாடாளுமன்றத் தொகுதியைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு பா.ஜ.க தலைமையின் அனுமதியோடு பிரசாரக் குழுத் தலைவர் என்ற அந்தஸ்தோடு அமித்ஷா அனுப்பப்பட்டார். அதில் அமித்ஷாவின் செயல்பாடுகளால் பா.ஜ.க மகத்தான வெற்றிபெற்றது.

இந்தியத் தேர்தல் வரலாற்றில் புதிய யுக்தியை மோடி-அமித்ஷா கூட்டணி கையில் எடுத்தது. வளர்ச்சி என்ற மந்திரச்சொல்லை நாடு முழுவதும் பரப்பினார்கள். இவர்களின் பிரசார யுக்தியும் நன்றாகக் கைகொடுத்தது. தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க அரியணையில் ஏறியது. அமித்ஷாவின் பொறுப்பில் இருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தில், 80 தொகுதிகளில் 71 தொகுதிகள் பா.ஜ.க வசம் வந்தன. அதுவரை சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய மாநிலத்தில் அந்தக் கட்சிகள் ஒற்றை இலக்கத்தைத் தாண்ட முடியாமல் செய்த அமித்ஷாவின் அசாத்திய வியூகத்தை பா.ஜ.கவே ஆச்சர்யத்தோடு பார்த்தது. மோடி பிரதமர் பதவிக்கு வந்ததும், தன் நண்பருக்குச் செய்யும் கடமையாக அகில இந்திய பா.ஜ.க-வின் தலைவர் என்ற அதிகாரமிக்க பொறுப்பில் அமித்ஷாவை அமர வைத்து அழகு பார்த்தார்.

ஆட்சிக்கு மோடி, கட்சிக்கு அமித்ஷா என்று பா.ஜ.க-வின் கிராஃப் ரேட் அசுர வேகத்தில் ஏறியது. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு  இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு மாநில சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணியின் தந்திரங்களாலும் செயல்பாடுகளாலும் 17 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. கிறிஸ்தவர்கள் அதிகம் நிரம்பிய வடகிழக்கு மாநிலங்களிலும் வெற்றிக்கொடி நாட்டியது பா.ஜ.க.

காங்கிரஸ் கையில் எடுக்காத ஒரு விஷயத்தை அமித்ஷா கையில் எடுத்தார். அது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு  அணுகுமுறை ஆயுதம், பாலிசி என்று தனிதனியாக யுக்தியைக் கையாண்டார். இதுதான் உ.பி முதல் மஹாராஷ்டிரா வரை பா.ஜ.க உச்சத்திற்குச் செல்ல பிரதான காரணம். பா.ஜ.க-வின் பிரசார முகமாக மோடி இப்போது தெரிந்தாலும், அவருக்குப் பின்னால் இருக்கும் சாணக்கியன் இந்த அமித்ஷாதான்.

- அ.சையது அபுதாஹிர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism