Published:Updated:

திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையை அறிக்கையாக வரும் 29ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று அம்மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் நுழைய அம்மாவட்ட கலெக்டர் கடந்த 16ஆத் தேதி தடை விதித்திருந்தார்.

இந்த தடை உத்தரவை ரத்து செய்ய கோரி திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவால் எனது சிதம்பரம் தொகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தொகுதியின் எம்.பி. என்ற முறையில் தன்னுடைய பணியை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறி இருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி ராஜேந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அரசு பிளீடர் எஸ்.வி.எஸ்.மூர்த்தி, சிறப்பு பிளீடர் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் ஆஜராகி, விழுப்புரம் மாவட்டத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவை கலெக்டர் பிறப்பித்துள்ளார்.

##~~##
திருமாவளவன் மட்டுமின்றி பிற அரசியல் கட்சி தலைவர்களும் நுழைய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி இந்த உத்தரவை கலெக்டர் பிறப்பித்துள்ளார் என்று வாதிட்டனர்.
இதை ஏற்று கொண்ட நீதிபதி, விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையை அறிக்கையாக வரும் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.