Published:Updated:

சுயமரியாதையை இழந்து அரசியலில் இருக்க விரும்பவில்லை!

சுயமரியாதையை இழந்து அரசியலில் இருக்க விரும்பவில்லை!
பிரீமியம் ஸ்டோரி
சுயமரியாதையை இழந்து அரசியலில் இருக்க விரும்பவில்லை!

முல்லைவேந்தன் ரிட்டையர்மென்ட் பேட்டி

சுயமரியாதையை இழந்து அரசியலில் இருக்க விரும்பவில்லை!

முல்லைவேந்தன் ரிட்டையர்மென்ட் பேட்டி

Published:Updated:
சுயமரியாதையை இழந்து அரசியலில் இருக்க விரும்பவில்லை!
பிரீமியம் ஸ்டோரி
சுயமரியாதையை இழந்து அரசியலில் இருக்க விரும்பவில்லை!

“மற்றவர்கள் எல்லாம் நான் சொன்னதைத்தான் செய்வார்கள்... தம்பி முல்லைவேந்தன், நான் மனதில் நினைக்கும்போதே அதை செய்து முடித்துவிடுவார்... அதனால்தான் அவருக்கு ‘செயல் மாமணி’ என்கிற பட்டத்தையே கொடுத்தேன்” - முல்லைவேந்தனைப் பற்றி இப்படிச் சொல்வார் மறைந்த தி.மு.க தலைவர் மு.கருணாநிதி. தி.மு.க-வின் குறிப்பிடத்தக்க சீனியர்களில் ஒருவர் முல்லைவேந்தன்.

தர்மபுரியில் கட்சியை வளர்த்தெடுத்ததிலும் முக்கியமான பங்கு முல்லை வேந்தனுக்கு உண்டு. தற்போது தி.மு.க தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிபட்டி, அரூர் ஆகிய இரு தொகுதிகளின் இடைத்தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது என்றால், அதிலும் முல்லைவேந்தனுக்குப் பங்கு இருக்கிறது. கடைசி நேரத்தில் கட்சித் தலைமையுடன் மனக்கசப்பு ஏற்பட்டு, முல்லைவேந்தன் தேர்தல் களத்தைவிட்டே ஒதுங்கிக்கொண்டதால்தான் அங்கு தி.மு.க தோல்வியடைந்தது என்று வெளிப் படையாகவே பேசுகிறார்கள் உடன்பிறப்புகள். கிட்டத்தட்ட தீவிர அரசியலிலிருந்து ரிட்டையர்மென்ட் வாங்கிவிட்டார் முல்லைவேந்தன். இந்த நிலையில்தான் முல்லைவேந்தனைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்! 

சுயமரியாதையை இழந்து அரசியலில் இருக்க விரும்பவில்லை!

“கால் நூற்றாண்டுக்கும் மேலாக அரசியல் செய்துவந்த நீங்கள், கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் களத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டது ஏன்?

“1980 முதல் தலைவர் கலைஞர் தலைமையில் தி.மு.க-வின் முழு நேரத் தொண்டனாகச் செயலாற்றியவன் நான். கழக உறுப்பினர் தொடங்கி அமைச்சர் பதவி வரை உழைப்பால் மட்டுமே உயர்ந்தேன். கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’யில் பல்வேறு பகுதிகளில் சுட்டிக்காட்டி எழுதப் பட்டவன் நான். புதிய தலைமைச் செயலகத்தில் எனது முதல் உரை முடிந்ததும், கலைஞர் அவர்கள் பொன்முடியிடம் துண்டுச் சீட்டு கொடுத்து அனுப்பினார். அதில், ‘முல்லை, நல்ல உரை’ என்று வாழ்த்தியிருந்தார். அப்படிப்பட்ட என்னை 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போதே ஒதுக்கி வைத்தார்கள். பின்னர் கட்சியைவிட்டே நீக்கினார்கள். இதன் பின்னால் எ.வ.வேலு போன்றவர்களின் சதி இருந்தது. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தளபதி அழைப்பின் பெயரில் கழகத்தில் சேர்க்கப்பட்டேன். ஆனால், கட்சிப் பணியாற்று வதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆனாலும், கலைஞர் மறைவையொட்டி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கம், விவசாயச் சங்க அமைப்புகள், அறக்கட்டளைகள், ஓசூர் தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகள் நடத்திய கலைஞர் புகழாஞ்சலி கூட்டங்களில் பங்கேற்றுப் பேசினேன். இதைக்கூட விரும்பாத மாவட்ட, மாநிலத் தலைமைகள் என்னை மேலும் ஓரம் கட்ட ஆரம்பித்தன. பேச்சாளர்கள் பட்டியலில்கூட என் பெயர் இடம்பெறவில்லை. முழுமையாக ஒதுக்கப்பட்டேன். சுயமரியாதையை இழந்து அரசியலில் இருக்க விரும்பவில்லை. எனவே, வேறுவழி இல்லாமல் கழகத்துக்கு களங்கம் செய்யாமல் ஒதுங்கிவிட்டேன்.”

“ஆனால், ‘இடைத்தேர்தல் சீட் தரவில்லை என்பதால் முல்லைவேந்தன் ஒதுங்கிக்கொண்டார்’ என்கிறார்களே?”

“நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்பவில்லை. மாவட்டக் கழகத்திடமோ, மாநிலத் தலைமையிடமோ சீட்டும் கேட்கவில்லை. சீட்டுக்காகவும் நோட்டுக்காகவும் செயல்பட்டவன் அல்ல நான். கலைஞர் கற்றுக் கொடுத்த சுயமரியாதைக்காகச் செயல்பட்டவன்.”

“தேர்தல் சமயத்தில் அன்புமணி உள்ளிட்ட மாற்றுக் கட்சி வேட்பாளர்கள் எல்லாம் உங்களைச் சந்தித்தப் படங்கள் வெளியானது. எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து தி.மு.க-வுக்கு எதிராகச் செயல்பட்டீர்களா?”

நான் ஒரு வாக்காளன். அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் என்னைச் சந்தித்து வாக்குக் கேட்டார்கள். இதில் எந்தத் தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. அன்புமணி ஒரு கட்சியின் தலைவர். அந்த வகையில் ‘ஆதரவு கொடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார். அதிலும் தவறு இருப்பதாக நான் கருதவில்லை. எல்லாவற்றையும் விட முக்கியமான காரணம்... தி.மு.க-வில் என்னை ஒதுக்கிவிட்டார்கள் என்று தெரிந்ததால்தான் அவர்களெல்லாம் என்னைச் சந்திக்க வந்தார்கள்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுயமரியாதையை இழந்து அரசியலில் இருக்க விரும்பவில்லை!

“நேரடியாகப் பதில் சொல்லுங்கள்... அரூர், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தி.மு.க தோல்விக்கு நீங்கள்தான் காரணமா?”

“முல்லைவேந்தன் தனி மனிதன் அல்ல. கால் நூற்றாண்டுக்கும் மேலாகக் கழகத்தைப் பட்டிதொட்டி எங்கும் கிளைகள் பரப்பியவன். மூன்று முறை அமைச்சராக இருந்து இந்த மாவட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றித் தந்தவன். அந்தப் பாசத்தால், அன்பால் என்னைச் சார்ந்துள்ள கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் கட்சிக்கு எதிராக முடிவு எடுத்திருக்கலாம். மேலும், தொகுதிக்கே சம்பந்தம் இல்லாதவர்களை வலிய திணித்தால் எப்படி ஓட்டுப் போடுவார்கள்? அதேசமயம், அந்தத் தொகுதிகளில் தி.மு.க தோல்வி அடைந்ததில் என் பங்கு எதுவும் இல்லை.”

“உங்களின் அடுத்த கட்ட அரசியல் எதை நோக்கி இருக்கும்?”

“தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞரின் கொள்கை வழி நிற்கும் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படாத வகையில் இருக்கும்.”

“அ.தி.மு.க-வில் இணையப்போவதாகத் தகவல் பரவி வருகிறதே?”

“ஓ... தகவலா, வதந்தியா, ஆழம் பார்க்கும் செயலா? எதுவாக இருப்பினும் நாளை நடப்பதை யார் அறிவார்!”

- எம்.வடிவேல், படங்கள்: கே.தனசேகரன்