Published:Updated:

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் அரசு பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம்!

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் அரசு பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம்!
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் அரசு பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம்!
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் அரசு பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம்!

சென்னை: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில்,"செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட நிதி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், மத்திய அரசு தனக்குள்ள பங்குகளில் 5 சதவீதத்தை விற்க முடிவு செய்துள்ளதாக நான் அறிகிறேன்.

தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்று நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்நிறுவனத்தில் அரசுக்கு உள்ள பங்குகளில் ஒரு சிறிய பகுதியை விற்கும் முயற்சி கூட, தங்களை வேலை இழப்புக்கு ஆளாக்கும் என்று இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் கொண்டிருக்கும் அச்சம் நியாயமானது.

தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதை உறுதி செய்வதற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட அமைச்சகமும், கம்பெனி நிர்வாகமும் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட நிதி தேவைகளை காரணம் காட்டி அரசின் பங்குகளை விற்பதை நியாயப்படுத்துவதுபோல் தெரிகிறது.

மேலும் இந்த பங்கு விலக்கலை ஏற்குமாறு தொழிலாளர்கள் சங்கத்தை சமாதானப்படுத்துவதற்காக,  தமிழக அரசின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் எந்த ஒரு பகுதியையும், தனியார் மயமாக்குவதை எனது அரசு கடுமையாக எதிர்ப்பதோடு, பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் தற்போதைய நிலை அப்படியே தொடர வேண்டும்; அதனை கரைக்கக்கூடாது என்பதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

##~~##
இந்நிறுவனத்தின் அரசு பங்குகளில் ஒரு சிறிய பகுதியை விற்றாலும் கூட, அது தொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும்.மேலும் மின் பற்றாக்குறையால் தமிழகம் தற்போது மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திலிருந்து கிடைக்கும் மின்சார விநியோகத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அது மாநிலத்தின் நலனை மிகக்கடுமையாக பாதிக்கும். எனவே பங்குகளை விற்று நிதி திரட்டுவதற்கு பதிலாக மாற்று வாய்ப்புகளை கண்டறியுமாறு நான் உங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.