Published:Updated:

தேர்தலில் பெண்களுக்கு 41% தொகுதிகளை ஒதுக்கினார் மம்தா பானர்ஜி!

தேர்தலில் பெண்களுக்கு 41% தொகுதிகளை ஒதுக்கினார் மம்தா பானர்ஜி!
தேர்தலில் பெண்களுக்கு 41% தொகுதிகளை ஒதுக்கினார் மம்தா பானர்ஜி!

லகில் 90 கோடி மக்கள் பங்குபெறும் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், இந்த தேர்தலில் போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கையில் பெரிய அளவிலான முன்னேற்றத்தை நாம் அடைந்துவிடவில்லை. இந்தியாவில் உள்ள வாக்காளர்களில் ஏறத்தாழ 41% பெண்கள், ஆனால், நாடாளுமன்றத்தில் பெண்கள் 11% தான் உள்ளனர். கடந்த  இருபது ஆண்டுகளாகத் தேர்தல் களத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவானது நிறைவேறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவித்தாலும், தேர்தல் காலத்தில் அவற்றைக் கைவிட்டு விடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த கூட்டணி சர்ச்சைகள் எல்லாம் முடிவுக்கு வந்து தற்போது கட்சிகள் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் ஆட்சியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலில் 17 தொகுதிகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள தொகுதிகளில் 41 சதவிகிதமாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 34 இடங்களைக்  கைப்பற்றியிருந்தது. அதேபோல் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த தேதி அறிவிக்கப்படும் முன்பே , நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியைச் சேர்த்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பெண்களுக்கான 20 தொகுதிகளை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.