கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும் திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு. அப்போதே அதற்கான பணிகள் தொடங்கின. அடுத்த சில மாதங்களில் தேர்தல் வந்ததையொட்டி அந்தப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தேர்தல் முடிந்து மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்து நரேந்திர மோடி பிரதமராகியுள்ளார். ஏற்கெனவே பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் இரண்டு தவணைகளாக 833 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய வேளாண் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, “பி.எம் கிசான் எனப்படும் பிரதம மந்திரி விவசாயிகள் வெகுமதித் திட்டத்தின்கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு (5 ஏக்கருக்குள்) ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்துடன் தற்போது 5 ஏக்கருக்கு மேல் உள்ள பெரு விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில், பி.எம் கிசான் திட்டத்தை மாற்றி அறிவித்துள்ளது மத்திய அரசு.

இத்திட்டத்தில் பயன்பெற ஜூலை 15-ம் தேதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே, இந்த நிதியாண்டுக்கான முதல் தவணை ரூ.2,000 கிடைக்கும். இத்திட்டத்தில் பதிவு செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. எனவே விவசாயிகள் தங்களுடைய பெயரைப் பதிவு செய்வதுடன், தங்கள் பகுதியிலுள்ள மற்ற விவசாயிகளையும் பதிவு செய்து பயன்பெற வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று வேண்டுகோள்விடுத்தார்.

தொடர்ந்து பேசிய வேளாண் துணை இயக்குநர் கணேசன், “இத்திட்டத்தின்கீழ் இதுவரை பதிவு செய்யாமல் விடுபட்ட சிறு குறு விவசாயிகளும் இப்போது பதிவு செய்யலாம். பட்டா மாற்றம் செய்யப்படாமல் அப்பா, தாத்தா பெயரில் பட்டா நிலம் உள்ளவர்களும் முறையான ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். நிலம் வைத்துள்ள அரசு ஊழியர்கள், வருமான வரி கட்டுபவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் (ரூ.10,000த்துக்கு மேல்) உள்ளிட்டோர் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது.

எனவே, அனைத்து மாவட்ட விவசாயிகளும் உடனடியாகத் தங்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க விவரம், பட்டா எண் அல்லது நில உடைமை ஆவணம், அலைபேசி எண் ஆகிய விவரங்களுடன், அந்தந்தப் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலரை அணுகிப் பதிவு செய்யவும். உதவிக்கு வேளாண் துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களை அணுகவும்” என்று வழிகாட்டினார்.