Published:Updated:

வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்

வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் வந்து கொண்டிருக்கும் நிலையில், கட்சியில் உள்ள புல்லுருவிகளை களையெடுக்க நேர்காணல் கூட்டம் நடத்த தயாராகி வருகிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா!

அம்மா நேர்காணல் கூட்டுகிறார் என்றாலே அ.தி.மு.க பொறுப்பாளர்களுக்கு கிலி பிடித்துவிடும். மிக விரைவில் அந்த கிலி சுழற்றியடிக்கப் போகிறது. ஆம், மிகவிரைவில் கட்சியினரிடம் நேர்காணல் கூட்டம் நடத்த தயாராகி வருகிறார் ஜெயலலிதா.  பெரும்பாலும், எதிர்க்கட்சியாக இருக்கும் போது தான் சாட்டையை சுழற்றுவார் ஜெயலலிதா. இந்த முறை அதிகாரத்தில் இருந்து கொண்டு நேர்காணல் நடத்துகிறார்.

இதுக்கு காரணம் அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் மாவட்ட பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைத்து மட்டத்திலும் அ.தி.மு.க.வினர் மீது படர்ந்து கிடக்கும் அதிருப்தி அலை. இது தொடர்பாக உளவுத் துறை மூலம் எடுக்கப்பட்ட சர்வேயில், 'உள்ளாட்சி தேர்தலில் எம்.ஜி.ஆர். காலத்தில் கூட பெற முடியாத வெற்றியை இந்த முறை அ.தி.மு.க. பெற்றது. ஆனால், அடுத்த தேர்தலில் முடிவுகள் இதற்கு நேர் மாறாய் இருக்கும். அந்தளவுக்கு அ.தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் அள்ளித் தட்டி அதிருப்தியை சம்பாதித்து வைத்திருக்கிறார்கள்" என்று ரிப்போர்ட் கொடுத்தார்களாம். இதேபோல் அமைச்சர்கள் சிலரது செயல்பாடுகள் குறித்து தரப்பட்ட ரிப்போர்ட்டில், அமைச்சர்கள் சிலருக்கும் தி.மு.க. புள்ளிகளுக்கும் உள்ள தொடர்புகள் ஆதாரப்பூர்வமாக சிக்கி இருக்கிறதாம்.

குறிப்பாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இருவர், தங்கள் இலாகா சம்பந்தப்பட்ட முக்கிய காண்ட்ராக்ட்டுகளை எல்லாம் தி.மு.க. புள்ளிகளுக்கே கொடுத்திருக்கிறார்களாம். அமைச்சர்களை இப்படி திசை திருப்பி விட்டதில் அவர்களின் உதவியாளர்களின் கைங்கர்யம் இருக்கிறதாம். ''மு.க.அழகிரியை விட, கொலை செய்யப்பட்ட பொட்டு சுரேஷ் மீது தான் அம்மாவுக்கு கடும் கோபம். அதனால் தான், அவரை துணை முதல்வர் என்று விமர்சனம் செய்தார்.

ஆனால், தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுக்க காண்ட்ராக்ட் பணிகளை எடுத்துச் செய்துவந்த பொட்டு சுரேஷ் , அ.தி.மு.க. ஆட்சியிலும் முக்கிய காண்ட்ராட்டுகளை எடுத்திருக்கிறார். நேரடியாக அவரது யோகா கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் கம்பெனிக்கு கொடுக்காமல் அவரது பினாமி கம்பெனிகளுக்கு காண்ராக்ட்டுகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். ''அண்மையில் கூட போட்டுவின் பினாமி ஒருவருக்கு நெடுஞ்சாலை துறையில் ஏ கிரேடு காண்ட்ராக்ட் ஒன்றை கொடுத்திருக்கிறார்கள். பொட்டுவின் பினாமிகளான எம்.ஏ.கே. என்பவரும் இன்னொரு முஸ்லிம் புள்ளியும் அமைச் சர்களிடம் நெருக்கமாக இருந்து காரியம் சாதித்துக் கொள்கிறார்கள். இதனால் எங்களைப் போன்ற அ.தி.மு.க. காண்ட்ராக்டர்களுக்கு எந்த வேலையும் கொடுக்க மறுக்கிறார்கள்" என்கிறார்கள் அ.தி.மு.க வின் லீடிங் காண்ட்ராக்டர்கள். இதேபோல், அ.தி.மு.க. உள்ளாட்சி பிரநிதிகள் பெரும்பாலானவர்கள், 'எனக்கு நீ உனக்கு நான்' ஸ்டைலில் தி.மு.க. வைச் சேர்ந்த முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஊழல் விவகாரங்களை வெளிக் கொண்டு வராமல் உறவாடிக் கொண்டு இருக்கிறார்களாம்.


முன் எப்போதும் இல்லாத வகையில் வித்தியாசமான முறையில் இந்த நேர்காணலை நடத்த முடிவெடுத்திருக்கிறாராம் ஜெயலலிதா. ஒரு நாளைக்கு இரண்டு மாவட்டங்கள் வீதம் மொத்தம் 45 நாட்கள் நடக்கிறதாம் நேர்காணல். இடையில் நான்கு நாட்கள் மட்டும் இடைவெளி. நேர்காணலுக்கு வருகின்றவர்கள் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது கூறும் புகார்களுக்கு தகுந்த ஆதாரங்களை கொடுக்க வேண்டும். ஆதாரங்கள் சரியாக இருந்தால், சம்பந்தப்பட்டவர் மீது அந்த நிமிடமே நடவடிக்கை பாயுமாம். அதேபோல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினால் அவர்களது தலையும் தப்பாதாம்.

இதற்கு முந்தைய நேர்காணல் கூட்டங்கள் அ.தி.மு.க. வில் பல பேருக்கு ஏற்றம் தந்திருக்கிறது பலபேரை படுகுழியில் தள்ளி இருக்கிறது. இந்த நேர்காணல் யாரை தூக்கி எங்கே வைக்கப் போகிறதோ அம்மாவுக்கே வெளிச்சம்!

குளஸ்

##~~##