Published:Updated:

`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க!

`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க!
பிரீமியம் ஸ்டோரி
`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க!

`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க!

`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க!

`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க!

Published:Updated:
`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க!
பிரீமியம் ஸ்டோரி
`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க!

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அடைந்த தோல்வியைத் தொடர்ந்து, அ.தி.மு.க தலைவர்களைப் பிரித்துமேய்கிறார்கள் நெட்டிசன்கள். அதிலும் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்குப் பின்பு பலரும் அந்தக் கட்சியைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் துக்ளக் ஆசிரியர் ‘ஆடிட்டர்’ குருமூர்த்தி!

‘Impotent leaders’ என்று கடுமையான வார்த்தைகளில் ஆரம்பித்து கார்ட்டூன்களில் கையேந்தவைத்தது வரை... அ.தி.மு.க-வைத் துவைத்துத் தொங்கப்போட்டுக் கொண்டிருந்தவர், கடைசியில் தலையங்கத்திலும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அதில், அ.தி.மு.க-வின் தோல்விக்கு நான்கு காரணங்களைக் குறிப்பிட்டிருக்கிறார் குருமூர்த்தி.

`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க!

‘வெளிப்படையான ஊழல் ஆட்சி, நவக்கிரகங்கள் போன்று ஒருவரை ஒருவர் பார்க்காத திசையற்றத் தலைமை, பிரிந்த தலைவர்களால் தேர்தல் பணியில் குழம்பிய தொண்டர்கள், பணத்தின் மூலம் வெற்றி பெற்று விடலாம் என்று புற்றுநோய் போன்று புரையோடி யுள்ள தவறான நம்பிக்கை’ என்று தோல்விக்கான காரணங்களைப் பட்டிய லிட்டு, ‘பழனிசாமி அண்ட் கோ’வைப் பதறவிட்டிருக்கிறார் குருமூர்த்தி.

‘வெற்றி என்பது எப்படி ஒரு கட்சிக்கு மக்கள் அளிக்கும் பொறுப்போ, அதுபோல் தோல்வி என்பதும் ஒரு கட்சி திருந்துவதற்கு மக்கள் அளிக்கும் ஒரு வாய்ப்புதான். அந்த வாய்ப்பை அ.தி.மு.க-வினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றும் அதில் குறிப்பிட்டிருந் தார் குருமூர்த்தி. ஜெயலலிதா இருந்த போது, அ.தி.மு.க-வை இப்படிப் பகிரங்க மாக விமர்சித்ததில்லை குருமூர்த்தி. ஆனால், இப்போது விமர்சனம் என்பதையும் தாண்டி, மிகவும் மோசமாக அவர் கிண்டலடிப்பதாகக் கட்சியின் சீனியர்கள் குமுறுகின்றனர். ஆனால், குருமூர்த்தியின் விமர்சனத்தில், அ.தி.மு.க மீதான அவரின் பாசம் பகிரங்கமாக வெளிப் படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். அதற்கேற்ப, ‘தேர்தலில் தோல்வி அடையாத கட்சிபோல, அ.தி.மு.க நடந்து கொள்வது பெரும் ஆச்சர்யமாக உள்ளது. இது அ.தி.மு.க-வுக்கோ... தமிழக அரசியலுக்கோ நல்லதல்ல’ என்று வருத்தப்படுகிறது அவரின் கட்டுரை.

‘எம்.ஜி.ஆர் பிரதிபலித்த அ.தி.மு.க-வின் ஆன்மாவை ஜெயலலிதா கட்டிக் காத்தார். தி.மு.க இருக்கும்வரை அ.தி.மு.க போன்ற எதிர்சக்தி அவசியம் இருக்கும். அ.தி.மு.க சிதறினால் தி.மு.க-வை எதிர்கொள்ள எந்த உறுதியான தலைவர் முன்வருகிறாரோ, அவரின் கீழ் அ.தி.மு.க மறுஅவதாரம் எடுக்குமே தவிர, அது மறையாது என்பது நம் கணிப்பு. இதை நாம் அ.தி.மு.க. தலைமைக்கு முன்அறிவுரையாகவும் எச்சரிக்கை யாகவும் வைக்கிறோம்’ என்றும் அ.தி.மு.க-வை எச்சரித்து முடித்திருக்கிறார் குருமூர்த்தி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க!

அவர் விடுத்துள்ள எச்சரிக்கையைப் பற்றி, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டோம். ‘‘ஆடிட்டர் வேலையை விட்டுவிட்டு ஆய்வு மாணவராக குருமூர்த்தி சேரலாம். அ.தி.மு.க குறித்து அவதூறாகத் தொடர்ந்து பேசுவதற்குப் பதில், ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யலாம். அவருக்கு எப்போதெல்லாம் விளம்பரம் தேவைப்படுகிறதோ, அப்போது எல்லாம் எங்கள் கட்சியைப் பற்றிப் பேசி, விளம்பரத்தைத் தேடிக்கொள்கிறார். இதுபோலத்தான் ஏற்கெனவே பி.ஜே.பி குறித்தும் பேசியிருக்கிறார். இதற்கெல்லாம், பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியுமா... காய்த்த மரம்தான் கல்லடிபடும். அப்படித்தான் அ.தி.மு.க-வின் புகழ் அவர் கண்களை உறுத்துகிறது. அதனால் தான் எங்கள் கட்சியையே பிடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு இதற்குமேல் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது’’ என்று முடித்துக்கொண்டார்.

இவர்களின் மோதல் ஒருபுறமிருக்க, ‘வெளிப்படையான ஊழல்கள் நிற்க வேண்டும். வெட்கமற்ற சுயநலத்தைத் தவிர்க்க வேண்டும்’ என்று தலையங்கத்தில் குருமூர்த்தி கூறியிருப்பதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ‘அப்படி எனில் யாருக்கும் தெரியாமல் ஊழல் செய்யலாம் என்று சொல்கிறாரா குருமூர்த்தி...’ என்று தி.மு.க-வினர் சமூக ஊடகத்தில் சாடியுள்ளனர்.

`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க!

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, ‘‘அ.தி.மு.க-வை சாதாரணமாக விமர்சிக்கும் மற்றப் பத்திரிகைகளின்மீது அவதூறு வழக்குத் தொடுத்து, மிரட்டல் விடுக்கும் அ.தி.மு.க தலைமை, துக்ளக் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இந்து தீவிரவாதம் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியபோது, ‘விஷத்தைக் கக்கிவரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும்’ என்று வார்த்தைகளில் வன்முறையைக் கக்கினார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. ஆனால், குருமூர்த்தி என்று வந்துவிட்டால், இவர்களின் தொனியே மாறிவிடுகிறது’’ என்று சாடியுள்ளார்.

இதுகுறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியிடம் பேசியபோது, “என் பத்திரிகையில் எழுதுவதோடு சரி, அதுகுறித்துப் பேச விரும்பவில்லை. மேலும், அ.தி.மு.க தோல்வி குறித்து வெளிப்படையாக எழுதியதற்கு எனக்கு எந்த எதிர்வினையும் வரவில்லை” என்றார்.

சிறுத்தைகள் சீறுகிறார்கள்... ரத்தத்தின் ரத்தங்கள் எப்போது கொதிக்குமோ?

- இ.லோகேஷ்வரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism