Published:Updated:

மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்

மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்
மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்

வாரங்கல்: தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்த வழக்கில் மத்திய அமைச்சர் பலராம் நாயக் மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்டை வாரங்கல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் பலராம் நாயக் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராஜையா கானாபூரில் நடந்த இடைத்தேர்தலின் போது தேர்தல் விதிமுறைகளை மீறி ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் தேர்தல் பிரசாரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

##~~##
இந்த வழக்கில் ஆஜராகும்படி கடந்த ஆண்டு மார்ச் 12ஆம் தேதி நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது. ஆனால் அவர்கள் ஆஜராகாமல் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.