Published:Updated:

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளின் பட்டியல்!

தி.மு.க கூட்டணியில்,  நீண்ட இழுபறிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க கூட்டணிக் கட்சி குழுவுடன், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான குழுவினர் சந்தித்து, தொகுதிகளை இறுதிசெய்யும் பணியில் தீவிரம் காட்டினார்கள். தமிழகத்தில், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் ஒன்பது தொகுதிகளில் ஐந்து தொகுதிகள் ஏற்கெனவே இறுதிசெய்யப்பட்ட நிலையில், நான்கு தொகுதிகளுக்கு மட்டுமே பேச்சுவார்த்தை இழுபறியாகிவந்தது. முடிவுசெய்யப்பட்ட ஐந்து தொகுதிகள் காங்கிரஸ் கட்சி கேட்ட தொகுதிகள் என்பதால், எளிதாக முடிந்துவிட்டது. மேலும் நான்கு தொகுதிகள், தி.மு.க தரப்பு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கும் தொகுதிகள் என்பதால் இழுபறி நீடித்தது. இந்நிலையில், இன்று மாலை அந்த இழுபறிக்கு முடிவுகட்டப்பட்டுவிட்டது.

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளின் பட்டியல்!

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் பத்து தொகுதிகள் என்று காங்கிரஸ் கட்சியினர் குறிப்பிடுவது இவைதான். “கன்னியாகுமரி, தேனி, சிவகங்கை, விருதுநகர், திருச்சி, கரூர், ஆரணி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி” ஆகிய பத்து தொகுதிகளைப் பட்டியலிடுகின்றனர். இந்தத் தொகுதிகள் பட்டியலை நாளை காலை அதிகாரபூர்வமாக அண்ணா அறிவாலயத்தில் அறிவிக்க உள்ளார்கள். ஏற்கெனவே, பிற கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிகள் இறுதிசெய்யப்பட்டுவிட்டதால், நாளை தி.மு.க - கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்குமான தொகுதிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.