Published:Updated:

வி.சி.க-வுக்குப் போட்டியாக களமிறங்கும் பா.ம.க - 2 தொகுதிகளில் யார் வேட்பாளர்கள்

வி.சி.க-வுக்குப் போட்டியாக களமிறங்கும் பா.ம.க - 2 தொகுதிகளில் யார் வேட்பாளர்கள்
வி.சி.க-வுக்குப் போட்டியாக களமிறங்கும் பா.ம.க - 2 தொகுதிகளில் யார் வேட்பாளர்கள்

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தெரிவித்தார். நாம் முன்பே குறிப்பிட்டது போல விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இவையிரண்டும் தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட தனித்தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சிகள் நிற்கக்கூடிய தொகுதிகள்தான் முடிவு ஆகி இருக்கிறது எனினும் அந்தந்த தொகுதிகளில் யார் யார் நிற்கிறார்கள் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்தச் சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இரண்டு தொகுதியில் யார் யார் நிற்கிறார்கள் என நமக்குக் கிடைத்த தகவலின்படி சிதம்பரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் விழுப்புரம் தொகுதியில் வி.சி.க.வின் பொதுச்செயலாளர் து.ரவிக்குமாரும் வேட்பாளர்களாக நிற்கிறார்கள் எனத் தெரிய வந்திருக்கிறது. 

இந்த இரண்டு தொகுதிகளிலும் இவர்களுக்கு எதிராக அ.தி.மு.க கூட்டணியிலுள்ள பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் நிற்க வைக்கப்படுவதாகவும் ஒரு செய்தி நமக்குக் கிடைத்திருக்கிறது.