Published:Updated:

சோனியா மாதிரி மென்மையாக நடந்து கொள்ள மாட்டேன்: கட்சியினருக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை

புதுடெல்லி: கட்சியில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வோரை ஒருபோதும் நான் சகித்துக் கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ள காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி,  இது விஷயத்தில் சோனியா காந்தி போன்று மென்மையான நடந்துகொள்ள மாட்டேன் என்றும் எச்சரித்துள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு எம்.எல்.ஏக்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்களுடன் கலந்துரையாடிவரும் ராகுல் காந்தி, டெல்லி பகுதியைச் சேர்ந்த சட்டப் சஐ உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசுகையில் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்த அவர்," கட்சியில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

##~~##
ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி-க்களிடம் பொதுத் தேர்தலுக்குத் தயாராகுமாறும் அவர் வலியுறுத்தியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.