Published:Updated:

`எல்லோரும் உயிருடன் உள்ளோம்; பத்திரமாக இருக்கிறோம்!'- மசூத் அசார் அறிவிப்பு

`எல்லோரும் உயிருடன் உள்ளோம்; பத்திரமாக இருக்கிறோம்!'- மசூத் அசார் அறிவிப்பு
`எல்லோரும் உயிருடன் உள்ளோம்; பத்திரமாக இருக்கிறோம்!'- மசூத் அசார் அறிவிப்பு

ந்திய விமானப்படை தாக்குதலில் எந்த சேதமும் இல்லை. அனைவரும் பத்திரமாகவும் நலமாகவும் இருப்பதாக ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.  

புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் உள்ள பால்கோட் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயிற்சி மையத்தின் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தின. தாக்குதலில் 300 தீவிரவாதிகள் இறந்ததாகச் சொல்லப்பட்டது. இந்திய விமானங்கள் தாக்கிய இடத்துக்கு இதுவரை எந்தப் பத்திரிகையாளர்களையும் பாகிஸ்தான் ராணுவம் அழைத்துச் செல்லவில்லை. ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசாரின் சகோதரர் மற்றும் உறவினர்கள் இந்தியத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில், ஜெய்ஷ் இ முகமது  அமைப்பின் வாரப்பத்திரிகையான அல்- குலாமில் மசூத் அசார் கட்டுரை  ஒன்று  எழுதியுள்ளார். அதில், இந்திய தாக்குதலில் எந்த சேதமும் இல்லை. அனைவரும் பத்திரமாக நலமாக உள்ளதாகக் கூறியுள்ளார். 

மேலும், தன் உடல்நிலை குறித்து எழுதியுள்ள மசூத் அசார், `17 வருடங்களாக எந்த மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காகச் சென்றதில்லை. எனது கிட்னி மற்றும் கல்லீரல் நல்லபடியாக இயங்குகின்றன. நலமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளான். `குரானில் கூறப்பட்டுள்ள உணவு முறைகளைப் பின்பற்றி சர்க்கரை வியாதி மற்றும் ஹைபர்டென்ஷனில் இருந்து விடுபட்டுள்ளேன். இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விட நான் ஃபிட்டாக உள்ளேன். என்னுடன் துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை போன்ற விளையாட்டில் நரேந்திர மோடி போட்டியிட்டால் என்னால் அவரைத் தோற்கடிக்க முடியும்' என்றும் ஆணவத்துடன் குறிப்பிட்டுள்ளான். காஷ்மீரில் நடப்பது விடுதலைப் போராட்டம் என்றும் அது அணையாமல் பரவ வேண்டும் என்றும் ஆப்கானிஸ்தான் போல உலகத்தின் கவனம் காஷ்மீர் மீது திரும்ப வேண்டும் என்றும் மசூத் அசார் தன் கட்டுரையில் எழுதியுள்ளார். 

இந்தச் செய்தியை டெல்லியிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கிலப்பத்திரிகை வெளியிட்டுள்ளது. மசூத் அசார் எழுதிய கட்டுரையின் நகல் கிடைக்கவில்லை எனவும் அந்தப் பத்திரிகை  தெரிவித்துள்ளது.