Published:Updated:

`நீடிக்கும் இழுபறி!' - விஜயகாந்த்தைச் சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

`நீடிக்கும் இழுபறி!' - விஜயகாந்த்தைச் சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
`நீடிக்கும் இழுபறி!' - விஜயகாந்த்தைச் சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

நாடாளுமன்றக் கூட்டணிக் கணக்குகளை முடித்து, யாருக்கு எந்தத் தொகுதி என்பது வரை, அறிவித்துவிட்டது தி.மு.க. கூட்டணி கட்சிகளும் தங்கள் தொகுதி வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். `நாளை வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம்' என்று தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். முழுவீச்சில் தேர்தலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது தி.மு.க. ஆனால், தி.மு.கவுக்கு முன்னதாகவே பா.ம.க, பா.ஜ.க கூட்டணியை உறுதி செய்த அ.தி.மு.கவால் தொகுதிப் பட்டியலை இறுதி செய்ய முடியவில்லை.

தே.மு.தி.கவுடன் 4 சீட்டுகள் ஒதுக்கீடு செய்து கூட்டணி கன்ஃபார்ம் செய்த போதிலும், எந்தத் தொகுதிகள் என்பதை இறுதி செய்யாமல் தவித்து வருகின்றனர் அ.தி.மு.கவினர். பா.ம.கவும், தே.மு.தி.கவும் ஒரே தொகுதியைக் கேட்பதுதான் இந்தத் திணறலுக்குக் காரணம். இன்றைக்கு தொகுதிப் பட்டியலை வெளியிட வேண்டும் என்று நினைத்திருந்தார் ஓ.பி.எஸ். ஆனால், அது கைகூடவில்லை. இரண்டு கட்சிகளின் பிடிவாதம் தலைமைக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முடிவுசெய்யவும், அது தொடர்பாகப் பேசவும், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்துக்குச் சென்று, அவரை நேரில் சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்தச் சந்திப்பில் தொகுதி இறுதி செய்யப்பட்டு, நாளையோ, நாளை மறுநாளோ, யாருக்கு எந்தத் தொகுதி என்ற அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.