Published:Updated:

அமித் ஷாவைச் சிறைக்கு அனுப்பியவர்... - பழிவாங்கப்படும் நீதிபதி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அமித் ஷாவைச் சிறைக்கு அனுப்பியவர்... - பழிவாங்கப்படும் நீதிபதி?
அமித் ஷாவைச் சிறைக்கு அனுப்பியவர்... - பழிவாங்கப்படும் நீதிபதி?

அமித் ஷாவைச் சிறைக்கு அனுப்பியவர்... - பழிவாங்கப்படும் நீதிபதி?

பிரீமியம் ஸ்டோரி

குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவைச் சிறைக்கு அனுப்பிய நீதிபதி அகில் அப்துல்ஹமீது குரேஷி, தற்போது மத்திய பி.ஜே.பி அரசால் பழிவாங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மத்தியில் இரண்டாவது முறையாக அறுதிப்பெரும்பான்மையுடன் பி.ஜே.பி அரசு அமைந்தவுடன் மத்திய சட்டத்துறை அமைச்சராகப் பதவியேற்ற ரவிசங்கர் பிரசாத், மத்தியச் சட்ட அமைச்சகம் ஒரு ‘தபால் நிலையம்’ போல இருக்காது என்று குறிப்பிட்டார். இப்போது, உச்ச நீதிமன்றத்தின் ‘கொலீஜியம்’ அனுப்பிய முக்கியமான பரிந்துரையை நிறுத்திவைத்துள்ளார் ரவிசங்கர் பிரசாத். அப்போது அப்படி அவர் சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது என்கிறார்கள், நீதித்துறை வட்டாரத்தில்.

அமித் ஷாவைச் சிறைக்கு அனுப்பியவர்... - பழிவாங்கப்படும் நீதிபதி?

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே.சேத், ஜூன் 9-ம் தேதி பணி ஓய்வுபெற்றார். அவரையடுத்து, அந்த இடத்தில் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியான அகில் அப்துல்ஹமீது குரேஷியை நியமிக்குமாறு மத்தியச் சட்ட அமைச்சகத்துக்குப் பரிந்துரை அளித்திருந்தது, உச்ச நீதிமன்றத்தின் ‘கொலீஜியம்’. ஆனால், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் அளித்தப் பரிந்துரையை, மத்திய சட்ட அமைச்சகம் நிறுத்திவைத்துவிட்டது.

2010-ம் ஆண்டு குஜராத் உள்துறை அமைச்சராக அமித் ஷா இருந்தபோது, சொராபுதீன் மரணம் தொடர்பான வழக்கு, குஜராத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில், நீதிபதி அகில் அப்துல்ஹமீது குரேஷி பிறப்பித்த உத்தரவால், அமித் ஷா இரண்டு நாள்கள் சிறையில் அடைக்கப் பட்டார். அதேபோல, அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் நீதிபதி குரேஷி, தீர்ப்புகள் வழங்கியிருக்கிறார். அதனால்தான் இப்போது அவரை மத்திய பி.ஜே.பி அரசு பழி வாங்குகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த விவகாரத்தையொட்டி, ஜூன் 24-ம் தேதி குஜராத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூடியது. அதில், ‘குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கும் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கும் எதிராக நீதிபதி குரேஷி தீர்ப்புகள் வழங்கியதனாலேயே, தற்போது அவரது பதவி உயர்வை மத்திய அரசு நிறுத்தியுள்ளது’ என்று  பகிரங்கமாகக் குற்றம்சாட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக குரேஷியை உடனடியாக நியமிக்கக் கோரும் தீர்மானமும் நிறைவேற்றப் பட்டது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஆகியோரைச் சந்தித்து முறையிடுவது என்றும் முடிவுசெய்யப்பட்டது.

அறுதிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ள பி.ஜே.பி அரசு, கொலீஜியத்துக்கு இனி இவ்வளவுதான் மதிப்பு என இதன் மூலம் உணர்த்தியிருக்கிறது.

- ஆ.பழனியப்பன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு