Published:Updated:

`பொள்ளாச்சி பாலியல் வன்முறைக்கு நீதி வேண்டும்' - தடையை மீறி மறியலில் ஈடுபட்ட த.மு.மு.க-வினர் கைது!

`பொள்ளாச்சி பாலியல் வன்முறைக்கு நீதி வேண்டும்' - தடையை மீறி மறியலில் ஈடுபட்ட த.மு.மு.க-வினர் கைது!
`பொள்ளாச்சி பாலியல் வன்முறைக்கு நீதி வேண்டும்' - தடையை மீறி மறியலில் ஈடுபட்ட த.மு.மு.க-வினர் கைது!

``10 நிமிடம் ஆர்ப்பாட்டம் செய்துகொள்ள அனுமதியுங்கள்" என்று, போலீஸாரிடம் அனுமதி கோரினர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர். ஆனால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படவே, அவர்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி சந்திப்பில் பொள்ளாச்சி வன்கொடுமையில் அநீதி இழைக்கப்பட்ட கல்லூரி மாணவிகளுக்கு நீதி கோரியும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், வழக்கை சி.பி.ஐ தாமதிக்காமல் விசாரிக்க கோரியும், சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க கோரியும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க கோரியும் த.மு.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறையைக் காட்டி காவல்துறை அனுமதி மறுத்தது. இந்த நிலையில், இன்று சுமார் 11.30 மணியளவில் ஊட்டி ஏ.டி.சி சந்திப்பில்  த.மு.மு.க-வினர் கூடினர். ஆர்ப்பாட்டம் செய்வதற்காக மைக், ஸ்பீக்கர் ஆகியவற்றை தயார் செய்ய முற்பட்டபாேது, அவற்றை பறிமுதல் செய்ய பாேலீஸார் முற்பட்டனர்.

பின்னர் காவல்துறையினர், `இங்கு ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதியில்லை' எனக் கூறியதால் இருதரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது த.மு.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி இல்லை என்று எங்களுக்குத் தெரியும். எனவே, ஆர்ப்பாட்டம் செய்து கைதாகிறோம் எங்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்ய 10 நிமிடம் அனுமதி தாருங்கள் எனக் கோரிக்கை விடுத்தனர். இதற்கு போலீஸார் எதிர்ப்பு தெரிவித்ததால், பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிறப்பு நீதிமன்றம் அமைத்து விரைந்து விசாரிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். தடையை மீறி சாலை மறியல் போராட்டம் நடத்திய த.மு.மு.க-வினரை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். பாெள்ளாச்சி பாலியல் வன்காெடுமைக்கு எதிராக இதுவரை ஊட்டியில் எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆர்ப்பாட்டம் செய்யாத நிலையில் த.மு.மு.க-வினர் முதன் முறையாக எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர்.