Published:Updated:

‘கட்சியின் பெயரை வெளியிட்ட ராஜேஷ்வரி பிரியா!’- தேர்தலிலும் போட்டி என அறிவிப்பு

‘கட்சியின் பெயரை வெளியிட்ட ராஜேஷ்வரி பிரியா!’- தேர்தலிலும் போட்டி என அறிவிப்பு
‘கட்சியின் பெயரை வெளியிட்ட ராஜேஷ்வரி பிரியா!’- தேர்தலிலும் போட்டி என அறிவிப்பு

தேர்தல் அறிவிப்புகளுக்கு முன்பு  கடுமையான விமர்சனங்களை முன்வைத்த கட்சிகள் எல்லாம், தேர்தல் குறித்தான அறிவிப்புகள் வெளியான பிறகு கூட்டணி வைத்து தேர்தலுக்குத் தயாராகிவருகின்றன. அ.தி.மு.க-வை கடுமையாக விமர்சித்துவந்த பா.ம.க, திடீரென கூட்டணி அமைத்துள்ளனர். இந்தக் கூட்டணியின் அதிருப்தியில், அக்கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளராக இருந்த ராஜேஷ்வரி பிரியா, பா.ம.க-விலிருந்து விலகி புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதேபோல, மாநில துணைத் தலைவராக இருந்த நடிகர் ரஞ்சித், அக்கட்சியில் இருந்து விலகி டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அ.ம.மு.க-வில் இணைந்தார்.

இந்நிலையில், ஏற்கெனவே புதிய கட்சி தொடங்குவதாக அறிவிப்பு விடுத்திருந்த ராஜேஷ்வரி பிரியா, இன்று காலை 10 மணிக்கு கூவத்தூரில் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார். இந்த புதியக் கட்சிக்கு, ‘அனைத்து மக்கள் அரசியல் கட்சி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ வடசென்னைத் தொகுதியில் நானும், மயிலாடுதுறையில் மற்றொரு இளைஞரும் போட்டியிட உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.