Published:Updated:

சேது திட்டத்தை முடக்குவதால் ஜெயலலிதா மக்களுக்கு துரோகம் செய்கிறார்; ஸ்டாலின் ஆவேசம்

சேது திட்டத்தை முடக்குவதால் ஜெயலலிதா மக்களுக்கு துரோகம் செய்கிறார்; ஸ்டாலின் ஆவேசம்
சேது திட்டத்தை முடக்குவதால் ஜெயலலிதா மக்களுக்கு துரோகம் செய்கிறார்; ஸ்டாலின் ஆவேசம்

தூத்துக்குடி: சேது சமுத்திர திட்டத்தை முடக்குவதன் மூலம் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு பெரிய துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார் என தூத்துக்குடியில் தேர்தல் நிதி பெற வந்த ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க. சார்பில் தேர்தல் நிதி வழங்கும் விழா தூத்துக்குடியில் நடந்தது. இந்த விழாவிற்கு தி.மு.க மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருச்செந்தூர் எம்.எல்.ஏ.வான அனிதாராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயதுரை, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகாசெல்வி, முன்னாள் அமைச்சர் கீதாஜீவின் உள்ளிட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

சேது திட்டத்தை முடக்குவதால் ஜெயலலிதா மக்களுக்கு துரோகம் செய்கிறார்; ஸ்டாலின் ஆவேசம்

இந்த கூட்டத்தில் ஸ்டாலினிடம் ஐந்து கோடியே இருபத்தி இரண்டு லட்சம் ரூபாய் தேர்தல் நிதியாக வழங்கப்பட்டது. நிதியை பெற்று கொண்ட ஸ்டாலின் பேசும்போது, ‘‘எத்தனையோ சோதனைகளுக்கு இடையே நிதியை வசூல் செய்து கட்சி வளர்க்கப்பட்டிருக்கிறது. ஒரு டீயை குடித்துக் கொண்டு கட்சியை வளர்த்த தொண்டர்கள் லட்சக்கணக்கானோர் இந்த இயக்கத்தில் இருக்கிறார்கள். அப்படிபட்ட இயக்கத்தை அழித்துவிடலாம் என சிலர் பகல் கனவு காண்கிறார்கள்.

இன்று கூட நாம்தான் ஆளும் கட்சி அந்தஸ்தில் இருக்கிறோம். ஆளும் கட்சியினரிடம் சொல்ல வேண்டிய கோரிக்கையை நம்மிடம்தான் மக்கள் சொல்கிறார்கள். ஆனால் இந்த ஆட்சியாளர்கள் நாம் கொண்டு வர நினைக்கின்ற திட்டத்தை நிறைவேறவிடாமல் தடுக்க பார்க்கிறார்கள். 150 ஆண்டு கால கனவு திட்டமான சேது சமுத்திர திட்டத்தை முடக்க பார்க்கிறார்கள். அந்த திட்டத்தை முடக்க இறங்கியுள்ள ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு பெரிய துரோகம் செய்துக் கொண்டிருக்கிறார்’’ என ஆவேசமாக பேசினார்.

##~~##
முன்னதாக திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது, தலைவர் கலைஞர், தளபதி ஸ்டாலின் ஆகியோர் என்ன நினைக்கிறார்களோ அதை அப்படியே நிறைவேற்றி தருபவர் அண்ணாச்சி பெரியசாமி என அவரை புகந்தார். இதை கேட்ட தொண்டர்கள், எதிரும் புதிருமாக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், பெரியசாமி வழிக்கு வந்துட்டா மாதிரி தெரியுது என முனுமுனுத்தனர்.
எஸ்.சரவணபெருமாள்

படங்கள்: ஏ.சிதம்பரம்