Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

Published:Updated:
கழுகார் பதில்கள்

எஸ். வாசுதேவன், சென்னை-10.

கழுகார் பதில்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

  ராகுல் விரும்பினால் தீவிர அரசியலுக்கு வருவேன் என்று, பிரியங்கா பேச ஆரம்பித்துள்ளது எதன் அடையாளம்?

குடும்பத்துக்குள் குழப்பம் தொடங்கி விட்டது தெரிகிறது!

சோனியா கட்டளைப்படி ராகுல் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயல்​பாடுகளில் பங்கெடுக்கவும் இல்லை. பிரதமர் பதவியிலும் மனம் இல்லை. விட்டேத்தியாக ராகுல் சுற்றிக்கொண்டு இருக்​கிறார் என்று சோனியா நினைக்கிறார் என்கின்றன டெல்லித் தலைகள். எனவே, ராகுல் இடத்தை பிரியங்காவை வைத்து நிரப்பு​வதற்கான ஆரம்பக் கட்ட வேலைகள் தொடங்கி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

கழுகார் பதில்கள்

'என்னுடைய அம்மா அல்லது கணவர் அனுமதித்தால், தீவிர அரசியலுக்கு வருவேன்’ என்று பிரியங்கா சொல்லவில்லை. ராகுல் விரும்பினால் என்று சொல்கிறார்... சூட்சுமம் இதுதான்!

சுந்தர.மகாலிங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர்.

கழுகார் பதில்கள்

தேவிகுளம், பீர்மேட்டை மீட்போம் என்று கிளம்பி இருக்கிறாரே கருணாநிதி?

##~##

தேவிகுளமும் பீர்மேடும் பறிபோய் 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதற்குப் பிறகு 5 முறை இவர் முதல் அமைச்சராக இருந்திருக்கிறார். 12 தடவை சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்தும் இருக்கிறார். இப்போதுதான் அவருக்கு குளம், மேடு விஷயம் தெரிந்ததா? அல்லது ஞாபகத்துக்கு வந்ததா? ஒருவேளை,  வேறு பேரத்துக்காக காங்கிரஸை மிரட்டும் தந்திரமோ?

 பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

கழுகார் பதில்கள்

பி.ஜே.பி. பிரமுகர் சுகுமாரன் நம்பியார் சமீபத்​தில் மறைந்தார். அவர் அரசியலில் சோபிக்காமல் போனது ஏன்?

பாரதிய ஜனதாவின் அகில இந்தியத் தலைவர்கள் அத்தனை பேருக்கும் அவர் செல்லப்பிள்ளை. தேசிய செயற்குழு உறுப்பினர், பொருளாளர் எனக் கட்சிப் பதவிகளில் இருந்தார். ஆனால், தேர்தல் பொறுப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை. 'ரிசர்வ் டைப்’ மனிதர்களுக்கு உதாரணமாக அவரைச் சொல்லலாம். அந்த அளவுக்குச் சாந்தசொரூபி. அவரது வளர்ச்​சிக்கு அதுவே பெரும் தடையாக அமைந்தது!

 ஆனந்தம்.எஸ்.நடராஜன், காரைக்கால்.

கழுகார் பதில்கள்

  அ.தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணி அமையும் வாய்ப்புகள் உள்ளதா?

துக்ளக் விழாவுக்குப் பிறகு, இந்த வாய்ப்பு குறைவதாகத் தெரிகிறது. ஏற்கெனவே, யார் பிரதமர் வேட்பாளர் என்பதில் அத்வானிக்கும் மோடிக்கும் சிக்கல் இருக்கிறது. இதில் ஜெயலலிதாவும் பிரதமர் வேட்பாளராக இணைந்து விட்டார். அவஸ்தையை விலை கொடுத்து வாங்க வேண்டுமா என்று அவர்கள் யோசிக்க மாட்டார்களா என்ன?

 இரா.வளன், புனல்வாசல்.

கழுகார் பதில்கள்

  தங்களைச் சிந்திக்க வைத்தவர் யார்?

எப்போதுமே வாசகர்தான்!

 எம்.கல்யாணசுந்தரம், கோயமுத்தூர்.

கழுகார் பதில்கள்

  'தீர்ப்பை அமல்படுத்த மறுத்தால், உம்மன் சாண்டியை பதவிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சொல்லி இருக்கிறாரே?

காங்கிரஸுக்குள் இருக்கும் கலகக்குரல் இளங்கோவன். அவரது தாத்தாவும் அப்பாவும் தங்களது கட்சித் தலைமை, பொறுப்புகளைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் இப்படித்தான் கருத்துச் சொன்னார்கள். குடும்ப ரத்தம்!

ர.ஷண்முகப்ரியா, திருப்பூ-5.

கழுகார் பதில்கள்

அண்ணா ஹஜாரே தேசியக் கொடியைப் பயன்படுத்துவது நாட்டுக்காகத்தானே. இதில் என்ன தவறு?

 அரசியல் நோக்கங்​களுக்காகத் தேசியக்கொடி பயன்படுத்தப்​படக் கூடாது. ஊழல் எதிர்ப்பு என்பதைத் தாண்டி காங்கிரஸ் எதிர்ப்​பாக அவரது சில செயல்பாடுகள் அமைந்து​விட்டது துர்பாக்கியம்!

 வாசுகி, ரிஷிவந்தியம்.

கழுகார் பதில்கள்

'நிலஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக என் மீது குற்றப்பத்​திரிக்கை தாக்கல் செய்யப்பட்டால் சட்டசபை எதிர்க் கட்சித் தலைவர் பதவியை உடனே ராஜினாமா செய்துவிடுவேன்’ என்று கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் சொல்லி இருக்கிறாரே?

அச்சுதானந்தனின் இந்த அறிவிப்பு அனைத்து அரசியல் தலைவர்களும் பின்பற்ற வேண்டிய முன்னு​தாரணங்களில் ஒன்று. அவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், தன் மீது புகார் வந்ததும், தனது கட்சித் தலைமைக்குக் கடிதம் எழுதிப் பதவி விலக முயற்சித்தவர் அச்சுதானந்தன். பழிச்சொல்​லுக்கு பயப்படுபவரே நல்ல அரசியல்வாதிக்கு அடை​யாளம்!

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

  'புதிய அணை கட்டினால், கூடுதலாகவே தமிழகத்துக்கு தண்ணீர் தருவோம். இரு மாநிலங்களும் சேர்ந்து அணையை நிர்வகிக்கலாம்’ என்று உம்மன் சாண்டி சொல்கிறாரே?

சொல்வது உம்மன் சாண்டிதானே, அரிச்சந்திரன் இல்லையே!

தமிழ்நாட்டில் இருந்து சென்ற தமிழ்ப் பத்திரிகையாளர்​களுக்கு ஒரு மாதிரியாகவும் கேரள மொழி பேசுபவர்களுக்கு வேறு மாதிரியாகவும்

பேட்டிகள் கொடுத்த ஒருவரின் வாக்குறுதியை எப்படி நம்ப முடியும்?

 வண்ணை கணேசன், சென்னை-110.

கழுகார் பதில்கள்

  ஓர் அரசியல்வாதிக்குப் புகழ் எப்படி இருக்க வேண்டும்?

அவரிடம் பிரதிபலன் அடையாதவர்கள்கூடஅவர் நினைவாக வாழ வேண்டும். ஜனவரி 17-ம் தேதி சென்னையின் பல இடங்களில் எம்.ஜி.ஆரின் படத்தை வைத்து ஒரு ரோஜாப்பூ, இரண்டு வாழைப் பழம், மூன்று பத்திக்குச்சியைக் கொளுத்தி வைத்திருந்த காட்சி, உங்களது கேள்வியைப் படிக்கும்​போது நினைவுக்கு வருகிறது!

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்