Published:Updated:

வைத்தியலிங்கம் ஆதரவாளர்கள் அட்ராசிட்டி - த.மா.கவுக்கு தஞ்சை வழங்கப்பட்டதன் பின்னணி!

கே.குணசீலன்
வைத்தியலிங்கம்  ஆதரவாளர்கள் அட்ராசிட்டி - த.மா.கவுக்கு தஞ்சை வழங்கப்பட்டதன் பின்னணி!
வைத்தியலிங்கம் ஆதரவாளர்கள் அட்ராசிட்டி - த.மா.கவுக்கு தஞ்சை வழங்கப்பட்டதன் பின்னணி!

அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தஞ்சாவூர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் தங்களுக்கே போட்டியிட சீட் கொடுக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்ததில் விழிபிதுங்கி போனார் வைத்திலிங்கம். இதனாலேயே தஞ்சாவூர் தொகுதியை கூட்டணி கட்சிக்கு தாரைவார்த்து விட்டார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரும் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் செல்வாக்குடன் வலம் வந்தவர். அதோடு ஜெயலலிதா அமைச்சரவையில் பலம் மிக்கவர்களாக பார்க்கப்பட்டு நால்வர் அணி என்று அழைக்கப்பட்ட அணியில் முக்கியம் இடம் பிடித்தவர். தன்னுடைய உழைப்பால் தி.மு.கவின் கோட்டையாக இருந்த தஞ்சாவூரை எம்.பி, சட்டமன்றம்,மேயர் என அனைத்தையும் பிடித்து அ.தி.மு.கவின் கோட்டையாக மாற்றினார்.

இந்தநிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி த.மா.கா விற்கு ஒதுக்கப்பட்டு விட்டது. வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் தங்களுக்குத்தான் போட்டியிட சீட் கொடுக்க வேண்டும் என அவரின் நெருங்கிய ஆதரவாளர்கள் பலர் அவருக்கு அழுத்தம் கொடுத்தனர். இதனால் விழி பிதுங்கி போன வைத்திலிங்கம் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியை கூட்டணி கட்சிக்கு தாரை வார்த்து விட்டார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்

.

இது குறித்து சிலரிடம் பேசினோம்,`` தி.மு.க வசம் இருந்த தஞ்சாவூரை அ.தி.மு.க வசம் கொண்டு வந்தார் வைத்திலிங்கம். இவருடைய உழைப்பால் ஜெயலலிதாவே இவரை சோழ மண்டல தளபதி என அழைப்பார். ஆனால் தனக்கு என ஒரு ஆதரவாளர்கள் கூட்டத்தை வைத்து கொண்டு அவர்கள் சொல்வதையே வேதவாக்காக எண்ணி செயல்பட்டதால் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் தோல்வி அடைந்தார். இப்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கி தர வேண்டும் என பலர் அவரிடம் அழுத்தம் கொடுத்து முறையிட்டனர்.

சிட்டிங் எம்.பி பரசுராமன், காந்தி, ஜெயபிரகாஷ் நாராயணன்,வினுபாலன் ஆகியோர் வைத்திலிங்கத்தின் தீவிரமான ஆதரவாளர்கள் இவர்கள் நால்வருக்கும் இடையே சீட்டு வாங்குவதற்கு கடுமையான போட்டி நிலவியது. த.மா.கா சார்பில் தஞ்சாவூர் அல்லது மயிலாடுதுறை என எதாவது ஒரு தொகுதியை கேட்டனர். இது ஒருபுறம் இருந்தாலும் தினகரனின் அ.ம.மு.க தஞ்சாவூரில் அ.தி.மு.கவிற்கு இணையான செல்வாக்கோடு இருக்கிறது. அவர்கள் வேறு ஓட்டை பிரிப்பார்கள். இதனால் வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் இதை எல்லாம் கவனத்தில் கொண்டே யாருக்கும் பொல்லாப்பு ஆகாமல் இருப்பதற்கு தொகுதியை த.மா.காவிற்கு ஒத்துக்குவதற்கு ஒத்து கொண்டார். அதன்படி ஒதுக்கியும் விட்டனர் என தெரிவித்தனர்.

வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்களோ, கூட்டணி கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என தலைமை விரும்பியது. அதன் படி கூட்டணி கட்சிக்கு தஞ்சாவூர் ஒதுக்கப்பட்டு விட்டது. தலைமை எடுக்கிற முடிவிற்கு அனைவரும் கட்டுப்பட்டவர்கள் தான். கூட்டணி கட்சியான த.மா.கா நின்றாலும் நாங்கள் நிற்பது போல் தான் நிச்சயமாக அவர்கள் வெற்றி பெற கடினமாக உழைப்போம்” என்றனர்.