Published:Updated:

மியூசியத்துக்கு கண்ணகி போனது மறந்துடுச்சா..?

அதிரடி துரைமுருகன்... அடக்கிய கருணாநிதி

மியூசியத்துக்கு கண்ணகி போனது மறந்துடுச்சா..?

அதிரடி துரைமுருகன்... அடக்கிய கருணாநிதி

Published:Updated:
##~##

ளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க் கட்சியாக இருந்தாலும் கருணாநிதி  ஆர்வமாகக் கலந்துகொள்ளும் மேடை களில் ஒன்று... முத்தமிழ்ப் பேரவை விழா. சென்னை அடையாறு பகுதியில் இந்த அமைப்புக்கு அரசு நிலத்தை வழங்கி அதில் சர்ச்சை உருவாகி, நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டு இருக்கிறது. இந்நிலையில், கடந்த 17-ம் தேதி சென்னையில் நடந்த முத்தமிழ்ப் பேரவையின் 34-ம் ஆண்டு விழாவுக்கு கருணாநிதி வந்திருந்தார். கருணாநிதியின் மகள் செல்வி, அவரது மகள் எழிலரசி ஜோதிமணியோடு முதல் ஆளாக வந்தார். அவரைத் தொடர்ந்து ஸ்டாலின் மனைவி துர்கா வந்தார்.  தயாளு அம்மாள் அரங்கத்துக்குள் வந்த சில நிமிடங்களில், ஸ்டாலின், துரைமுருகன் சகிதமாக வந்தார் கருணாநிதி. இப்படி அது கருணாநிதியின் குடும்ப விழாவாகவே நடந்தது. 

மியூசியத்துக்கு கண்ணகி போனது மறந்துடுச்சா..?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிகழ்ச்சியின் தொடக்கமாக எழிலரசி ஜோதி மணியின் வீணைக் கச்சேரி நடந்தது. அடுத்து முத்தமிழ்ப் பேரவை சார்பாக கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கிய பிறகு, துரைமுருகனைப் பேச அழைத்தார்கள். ''இந்த விழா அரங்கத்துக்குள்ளே நான் வந்து உட்கார்ந்ததும், 'என்னை எதுக்கு இந்த விழாவுக்குக் கூப்பிட்டிருக்காங்க. எனக்கு இசையைப்பத்தி என்ன தெரியும்?’னு பக்கத்துல இருந்த முரசொலி செல்வத்துக்கிட்ட கேட்டேன். அதுக்கு அவர், 'ஒரு நாகஸ்வரக் கச்சேரியில் எல்லோருமா நாகஸ்வரம் வாசிக்கிறாங்க? ஒத்து ஊதுறதுக்கு ரெண்டு பேரு இருப்பாங்கள்ல..? அதுபோலதான் உன்னை வரச் சொல்லி இருக்காங்க. இங்கே தலைவர் மட்டும்தான் வித்வான். நீ எல்லாம் ஒத்து ஊதுற ஆள்தான். அதனால, ஏதாவது பேசிட்டு வா... கண்டுக்க மாட்டாங்க’ன்னு சொன்னார். அந்த தைரியத்தில்தான் நான் மேடைக்கு வந்திருக்கேன்.

மியூசியத்துக்கு கண்ணகி போனது மறந்துடுச்சா..?

முத்தமிழ்ப் பேரவைக்கு என்று தனியாக இடம் ஒதுக்கி, ஒரு கட்டடம் கட்டிக் கொடுத்தவர் நம் தலைவர்தான். இன்று திருவள்ளுவர் தினம். இதே நம் தலைவராக இருந்திருந்தால், இந்த நேரம் வள்ளுவர் கோட்டத்தில் எவ்வளவு கோலாகலமாக விழா நடத்தி இருப்பார். ஆனா, இன்று வள்ளுவர் கோட்டத்துல என்ன நடக்குதுன்னு தெரியலை. ஒரு வீரன்தான் இன்னொரு வீரனை எதிர்க்க முடியும். ஒரு கலைஞர்தான் இன்னொரு கலைஞரை மதிக்க முடியும். கண்ணகி சிலை மியூசியத்துக்குப் போனதை காலம் மறந்துவிடாது...'' என்று துரைமுருகன் சூடாக... அவரை சைகை காட்டிக் கூப்பிட்ட கருணாநிதி, தன் வாய் மீது கை வைத்து 'உஷ்ஷ்...’ என்று சொல்ல... ''நான் ஏதாவது இங்கே பேசினால், அது உங்களுக்குப் (முத்தமிழ் பேரவையினருக்கு) பிரச்னையாகிவிடும் என்று தலைவர் நினைக்கிறார். அதனால் என் உரையை இத்தோடு முடித்துக்கொள்கிறேன்'' என்றபடி அமர்ந்தார் துரைமுருகன்.

மியூசியத்துக்கு கண்ணகி போனது மறந்துடுச்சா..?

வீணை வாசித்த பேத்தியை மேடைக்கு அழைத்து சால்வை போர்த்திக் கௌரவித்துவிட்டு, ''சங்கீத வித்வான் துரைமுருகன் அவர்களே...'' என்று படுஉற்சாகத்தோடு பேச ஆரம்பித்தார் கருணாநிதி. ''இன்று நான் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன். தமிழ்நாட்டில் தமிழிசை பரவ, தமிழ்உணர்வு மலர, ஆட்சியாளர்கள் உதவிட வேண்டும். தாய்மொழியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. தமிழ், தமிழர்கள் என்ற உணர்வைக் கிள்ளி எறியவோ, அதைப் புதைக்கவோ ஆட்சியாளர்கள் நினைக்கக் கூடாது. நான் அதிக நேரம் பேச விரும்பவில்லை. அப்படிப் பேசினால், இந்த மன்றத்துக்கு புதிய ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது. அதனால்தான் துரைமுருகன் பேச்சை வேறு பக்கம் திருப்பிவிட்டேன். அதற்கான காரணம் உங்களுக்கும் புரிந்திருக்கும். எதிர்காலத்தில் விருது பெற இருக்கும் எழிலரசிக்கு முன்கூட்டியே எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று பேத்திக்கு வாகை சூடி பேச்சை நிறைவு செய்தார்.

'தொண்டர்கள் இல்லாத அரங்கம்... அடக்கி வாசித்த கருணாநிதி...’ - என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!

  - கே.ராஜாதிருவேங்கடம்

படங்கள்: என்.விவேக்