Published:Updated:

கோவா மக்களும் அவர்களுக்குப் பிடித்த மாட்டிறைச்சியும் - மனோகர் பாரிக்கர் எடுத்த முடிவு என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோவா மக்களும் அவர்களுக்குப் பிடித்த மாட்டிறைச்சியும் -  மனோகர் பாரிக்கர் எடுத்த முடிவு என்ன?
கோவா மக்களும் அவர்களுக்குப் பிடித்த மாட்டிறைச்சியும் - மனோகர் பாரிக்கர் எடுத்த முடிவு என்ன?

கோவா மக்களும் அவர்களுக்குப் பிடித்த மாட்டிறைச்சியும் - மனோகர் பாரிக்கர் எடுத்த முடிவு என்ன?

ந்தியாவில் மெத்தப் படித்த அரசியல்வாதிகளில் மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரும் ஒருவர். மும்பை ஐ.ஐ.டியில் 1973- ம் ஆண்டு முதல் 1980- ம் ஆண்டு வரை மனோகர் பாரிக்கர் படித்தார். படிக்கும் காலத்திலேயே தலைமைப் பண்பு அவரிடத்தில் இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் வித்தியாசமாகச் சிந்திப்பார் அணுகுவார். மும்பை ஐ.ஐ.டி-யில் ஒரு முறை ஹாஸ்டல் சமையல்காரர்கள் எல்லோரும் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டனர். மனோக பாரிக்கர் ஹாஸ்டல் கிச்சன் கமிட்டியில் இருந்தார். ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டவர்களுடன் மனோகர் பாரிக்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து, ஹாஸ்டலில் அரைகுறை சமையல் தெரிந்த 40 மாணவர்களைத் தேர்வு செய்தார் பாரிக்கர். பின்னர், பாரிக்கர் தலைமையில் மாணவர்களுக்கு உணவு தயார் செய்யப்பட்டது. பாதி வெந்தும் வேகாத உணவைச் சாப்பிட்டாலும், `நான் என் வாழ்க்கையிலேயே சாப்பிட்ட சிறந்த சாப்பாடு இதுதான்' என்று சமையல் செய்த மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

முன்னாள் மாணவர் சந்திக்கும் நிகழ்விலும் மனோகர் பாரிக்கர் தவறாமல் கலந்துகொள்வார். கடந்த 2017- ம் ஆண்டு கடைசியாக மும்பை ஐ.ஐ.டிக்கு வருகை தந்தார். அப்போது, பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். நண்பர்களைக் கண்டு விட்டால் உடனடியாக அருகிலுள்ள பாதுகாவலர்களை விலகி நிற்குமாறு கூறி விடுவார். நிகழ்வின் போது உணவுக்காக கூப்பன் வழங்கப்படும். மனோகர் பாரிக்கரும் கூப்பனுடன் கியூவின் உணவுக்காக வரிசையில் காத்திருப்பார் என்று கூறி நெகிழ்கிறார் அவரின் ரூம் மேட் பாகுல் தேஷாய். மும்பை ஐ.ஐ.டியில் படித்த மாணவர்கள் பலரும் சமூகவலைதளங்களில் பாரிக்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். கணேஷ் நடராஜன் என்பவர், மனோகர் பாரிக்க முதல்வர் ஆன பிறகும் சொந்த வேலையாகச் சென்றால் ஆட்டோவில் செல்வதைக் கண்டிருப்பதாகப் பதிவிட்டுள்ளார். மனோகர் பாரிக்கருக்கு ஒரு கனவு இருந்தது. கோவாவில் ஐ.ஐ.டி தொடங்க வேண்டுமென்பதுதான் அந்தக் கனவு.. அதற்கான முனைப்பிலும் ஈடுபட்டிருந்தார். 

சிறந்த கல்வி அறிவு பெற்றிருந்த மனோகர் பாரிக்கர் எந்தப் பிரச்னையையும் மக்கள் நலன் சார்ந்தே அணுகுவார். பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சி வைத்திருப்பவர்கள் உண்பவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். கோவா மக்களுக்குப் பிடித்த உணவு மாட்டிறைச்சிதான். தினமும் 25 டன் கிலோ மாட்டிறைச்சி கோவா மாநிலத்துக்குத் தேவைப்படும். மனோகர் பாரிக்கர் முதல்வராக இருந்த போது மாட்டிறைச்சிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. சட்டசபையில் காங்கிரஸ் கட்சி குரல் எழுப்பியது. அப்போது பதிலளித்த பாரிக்கர், ``பெல்காமிலிருந்து தேவையான அளவு மாட்டிறைச்சி கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாட்டிறைச்சிக்கு எந்தத் தட்டுப்பாடும் வராது' என்று சட்டசபையில் உறுதியளித்தார். பாரதிய ஜனதா கட்சியிலிருந்து கொண்டே `மாட்டிறைச்சி தங்கு தடையில்லாமல் கிடைக்கும் மக்களே கவலை வேண்டாம்' என்று பேசும் `தில் ' அவரிடத்தில் இருந்தது. கோவா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தாலும் மாட்டிறைச்சிக்கு எந்தத் தடையும் இல்லை. 

எனினும், கோவா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் மாட்டிறைச்சி விற்பனைக்குச் சிலர் தொல்லை கொடுக்கவே செய்தனர்.  கர்நாடகத்தின் பெல்காமில் இருந்துதான் கோவா மாநிலத்துக்கு மாட்டிறைச்சி கொண்டு செல்லப்படுவது வழக்கம். மாட்டிறைச்சி கொண்டு செல்லப்படும் வாகனங்களின் ஓட்டுநர்கள் தாக்கப்பட்டனர். அப்போது, மனோகர் பாரிக்கர் கடும் நடவடிக்கை எடுத்து மாட்டிறைச்சி கோவா மக்களுக்குத் தங்கு தடையின்றி கிடைக்கச் செய்தார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு