Published:Updated:

`ஜெயிக்கலனா பதவி நீடிக்காது பாத்துக்கோங்க!' - எடப்பாடி உத்தரவால் அதிர்ந்த மா.செக்கள்

`ஜெயிக்கலனா பதவி நீடிக்காது பாத்துக்கோங்க!' - எடப்பாடி உத்தரவால் அதிர்ந்த மா.செக்கள்
`ஜெயிக்கலனா பதவி நீடிக்காது பாத்துக்கோங்க!' - எடப்பாடி உத்தரவால் அதிர்ந்த மா.செக்கள்

`அம்மா இல்லாமல் நாம் சந்திக்கும் முதல் தேர்தல் இது. கட்சி சார்பாக யாரை வேட்பாளராக நிறுத்துகிறோமோ, அவரை வெற்றி பெற வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. கழக வேட்பாளரின் வெற்றிக்காக நீங்கள் பாடுபட வேண்டும். தேர்தல் பணியில் முழுவீச்சில் ஈடுபடவேண்டும்'  நேர்காணலின்போது அ.தி.மு.க-வினரிடையே எடப்பாடி பேசிய வார்த்தைகள் இவை.

வேட்பாளர் பட்டியல் தேர்வில், `புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது நல்ல விஷயம்தான். அம்மா இருக்கும்போது, சிறுபான்மையினர் ஒருவருக்காவது சீட் இருந்திருக்கும். ஆனால், இந்தத் தடவை அப்படியில்லை. ராமநாதபுரம் தொகுதியை அன்வர் ராஜா  கேட்டிருந்தார். அவருக்கு தர மறுத்து, பா.ஜ.க-வுக்கு ஒதுக்கியிருப்பது எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமான முடிவு. காரணம் இஸ்லாமியர்கள் வாக்கு அதிகம் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் பா.ஜ.கவை நிறுத்தியிருப்பது பொருத்தமில்லாதது'' என்று கடிந்து கொள்கின்றனர் அ.தி.மு.க-வினர்.

பா.ஜ.க-வின் அழுத்தம்தான் இத்தகைய சூழலுக்கு காரணம் என்பதால், நாடாளுமன்றத் தேர்தலில் 20-க்கும் அதிகமான தொகுதிகளை வென்றால்போதும், `ஸ்கெட்ச் சட்டசபை தேர்தலுக்குத்தான்' என்ற மனநிலையில் இருக்கிறார் எடப்பாடி. இந்த நிலையில்தான் நேற்று ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார். நேற்று காலை தொடங்கிய கூட்டம் மாலைவரை நீடித்தது. அனைத்து மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்க வேண்டும் என்ற உத்தரவால் யாரும் மிஸ் ஆகவில்லையாம். ``கருத்துக் கணிப்புகளில் நமக்கு சாதமாக இல்லை. இருந்தாலும், அதையெல்லாம் கண்டுக்கொள்ளவேண்டாம். எந்தக் கட்சி வேட்பாளராக இருந்தாலும் அவரை வெற்றிபெறச் செய்யவேண்டியது உங்கள் பொறுப்பு. அம்மா இல்லாமல் நாம் சந்திக்கும் முதல் தேர்தல் இது. அம்மா இல்லாததால் தான், அ.தி.மு.க தோற்றது என யாரும் கூறிவிடக்கூடாது. குறைந்தபட்சம் 20 தொகுதிகளுக்கு அதிகமாக வெற்றிபெற வேண்டும்'' என முடித்திருக்கிறார் ஓ.பி.எஸ். 

இதையடுத்து பேசிய எடப்பாடி, ``ஈ.பி.எஸ் ஆதரவு, ஓ.பி.எஸ் ஆதரவு, என தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு தேர்தலை கோட்டைவிட வேண்டாம். நாம் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். அதுபோல மாவட்ட, நகர, ஒன்றியச் செயலாளர்கள் அனைவரும் பிரிவுகளையும், பாகுபாடுகளையும் மறந்து சேர்ந்து உழைக்க வேண்டும். எதிர்கட்சிகளுக்கு நம் பலத்தை உணர்ந்த வேண்டிய நேரம் இது. கட்சியிலிருந்து தேர்தல் செலவுக்கு நிதி வழங்கப்படும். அது சரியாக போய்ச் சேரவேண்டும். இடையிலிருப்பவர்கள் முறைகேட்டில் ஈடுபடக்கூடாது. அப்படி எதுவும் நடப்பதாக தகவல் வந்தால் அப்றம் நீங்க மாவட்டச் செயலாளராக இருக்கமுடியாது. அம்மா இருக்கும்போது இருந்த கட்டுக்கோப்பு, தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். எதிர்கட்சிகளைக்காட்டிலும் கூட்டணியில் நாம் வலுவாகத்தான் இருக்கிறோம். உங்களுக்கு வேண்டியதை செய்து தர தயாராக இருக்கிறோம் அதையும் மீறி தோல்வி ஏற்பட்டால், அது அம்மா பெயருக்கு ஏற்பட்ட களங்கம். மேலும், தோல்வியடைந்த மாவட்டங்களில் தோல்விக்கான காரணங்கள் ஆராய்ந்து, களத்தில் உழைக்காத மாவட்டச் செயலாளர்கள் பதவி பறிக்கப்படும்'' என்று கூறிவிட்டாராம் கறாராக!