Published:Updated:

‘தமிழகத்தில் தேர்தல் தேதி மாற்றம்: 72 % மக்கள் எதிர்பார்ப்பு!’

‘தமிழகத்தில் தேர்தல் தேதி மாற்றம்: 72 %  மக்கள் எதிர்பார்ப்பு!’
‘தமிழகத்தில் தேர்தல் தேதி மாற்றம்: 72 % மக்கள் எதிர்பார்ப்பு!’

``இந்தியாவில் தேர்தலே ஒரு திருவிழாதான். அதையும் சரியான நாள் குறித்துச் செய்வது சிறப்பு.’’

நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது முதலே நாடு முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி அன்று மதுரை உட்பட பல்வேறு இடங்களில் திருவிழாக்கள் நடைபெறுவதால், வாக்குப்பதிவு தேதியை மாற்றியமைக்கக் கோரி கோரிக்கைகள் எழுந்தன. இதுதொடர்பாக, விகடன் இணையத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ...

இந்தக் கேள்விகள் தவிர்த்து, வாசகர்கள் தங்களின் கருத்துகளைப் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொண்டிருந்தோம். `ஒண்ணும் சொல்றதுக்கில்ல’ என்பதில் தொடங்கி நூற்றுக்கணக்கான கருத்துகள் வந்துள்ளன. அவற்றில் குறிப்பிட்ட சிலவற்றை வாசகர்களின் வாசகங்களாகவே திருத்தம் ஏதும் செய்யாமல் வெளியிட்டுள்ளோம்...

``தேதியை மாற்றுவது என வந்துவிட்டால்...ஒவ்வொரு ஊரிலும் ஒரு பிரச்னை எனத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். எனவே, அறிவித்தபடி செல்வதே சிறந்தது...’’

``இந்தியாவில் தேர்தலே ஒரு திருவிழாதான். அதையும் சரியான நாள் குறித்துச் செய்வது சிறப்பு.’’

``தேர்தல் ஆணையம் ஆளும்கட்சிக்குச் சாதகமான தேதிகளை அறிவித்துள்ளது. தேர்தல்நாள் தள்ளிப்போகும் பட்சத்தில் மக்கள் இவர்கள் கொடுத்த 1000, 2000 ரூபாயை மறந்துவிடுவார்கள்.’’ 

``மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தேர்தல் தேதியை மாற்ற வேண்டும்.’’

``இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் பல்வேறு இனம், மொழி, மதம் சார்ந்த மக்களுக்கு ஆண்டுமுழுவதும் ஏதாவது பண்டிகைகள், விழாக்கள் வந்துகொண்டேதான் இருக்கும். அதற்காக, தேர்தல் தேதியை மாற்றிக்கொண்டு இருக்க இயலாது.’’ 

``ஏதோ சின்னத் திருவிழா என்றால் தள்ளி வைக்கத் தேவை இல்லை... மதுரை அழகர் ஆற்றில் இறங்குதல், திருவண்ணாமலை கிரிவலம் எல்லாம் பெரிய திருவிழாக்கள். வெளி ஊரில் இருந்து எல்லாம் போவாங்க. எல்லாராலயும் ஓட்டு போட்டுட்டு போய் திருவிழாவில் கலந்துகொள்ள முடியாது.’’ 

``தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை.’’

``மதுரை ஆட்சியரின் பொறுப்பற்றத் தன்மையே இந்தக் குளறுபடிக்குக் காரணம். ஊர் திருவிழாகூட தெரியாதவர் அந்த ஊரில் எதை அறிவார்? தேர்தல் தேதி குறித்த கலந்தாய்வில் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருந்திருப்பார் என நினைக்கிறேன்.’’

``தேர்தல் ஆணையம் ஆளும்கட்சிக்கு சாதகமாக நடக்கிறது. ஜனநாயக வழியில் இல்லை.’’ 

``சொல்றதுக்கு ஒண்ணுமில்லை. புடுங்குறது பூராவும் தேவை இல்லாத ஆணிதான் அரசியல்.’’

``வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும். பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் வாக்குச் சீட்டு முறைதான் சிறந்தது. மின்னணு வாக்குப்பதிவில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று பலமுறை நிரூபணம் ஆகியுள்ளது. மேலும், வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண்ணும் தேதிக்கும் நீண்ட இடைவெளி எதற்கு? பிரிட்டனில் வாக்குப் பதிவு நடந்த அன்றே இரவோடு இரவாக எண்ணப்படுகிறது.’’

``ஒட்டு மொத்தமாக மத்திய ஆளுங்கட்சி எங்கெல்லாம் செல்வாக்கு குறைவாக இருக்கிறதோ அங்கெல்லாம் தேர்தல் தேதியை கடேசியில் வைத்து, பிரசார நாள்களை அதிகப்படுத்தும் முயற்சி இது.’’

``சித்திரை மாத பெளர்ணமி 18.04.2019 மாலை ஆரம்பிப்பதாலும், மதுரையில் தேர்த்திருவிழா நடைபெற இருப்பதாலும் கிறிஸ்துவர்கள் பெரிய வியாழன் கொண்டாடுவதாலும் தேர்தல் தேதியை மாற்றி வைப்பது அனைவருக்கும் நல்லது.’’

``தமிழகத்தில் தேர்தலை 2 கட்டமாக நடத்தலாம்.’’

``மக்கள் இலவசத்துக்காகவும் பணத்துக்காகவும் வாக்குகளை விற்காமல் இருந்தால் சரி.’’

``தேர்தல் அன்று அனைவரும் வாக்களிக்க எந்த இடையூறும் இருக்கக் கூடாது. தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்படக் கூடாது. நூறு சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் எனக் கூறும் தேர்தல் ஆணையம் இதைக் கவனிக்க வேண்டாமா...’’

``எது எப்படி இருந்தாலும் தேர்தல் நியாயமாக நடைபெறப்போவதில்லை.’’

``என்ன சர்வே பண்ணி என்னங்க... தேர்தல் ஆணையம் ஒத்துவருமா?’’

``மக்கள் மனநிலை தெரியவரும்.’’

``மே 23 அன்றுதான் வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ள நிலையில், தமிழகம் முழுவதுமே தேர்தல் தேதியை மற்றொரு நாளுக்குத் தள்ளி வைக்கலாம்.’’

``தேர்தல் தேதி உள்நோக்கம் கொண்டது. வாக்குப் பதிவு நேரம் அதிகரிக்கப்பட்டாலும், வாக்குச் சாவடிகளில் பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.. மேலும், மற்ற ஊர், மாவட்டங்களிலிருந்து வரும் மக்கள் எப்படி ஒட்டுப் போடுவார்கள்? தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று தேர்தல் ஆணையம் சொல்லுவது, மத்திய அரசின் சொல்படி கேட்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி என்று சந்தேகம் வருகிறது. ஏனெனில், 45 நாள்கள் அல்லது 2 மாதங்களுக்கு முன்னர்தான் தலைமைத் தேர்தல் அதிகாரி மத்திய அரசால் நியமிக்கப் பட்டார்...’’

``ஓட்டு எந்திரங்களில் முறைகேடு இல்லை என்று வாக்காளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் எனது ஓட்டு மதிப்பு உடையது என்ற நம்பிக்கை வாக்காளர்களுக்கு வரும்.’’

``தேர்தல் நமது ஜனநாயகக் கடமை. அதை நாம் தவறாமல் நிறைவேற்றிட வேண்டும்.’’

``தேர்தல் ஆணையம், ஒரு பகுதிக்கு தேர்தலை அறிவிக்கும் முன்னர், அனைத்துக் காரணிகளையும் ஆராய்ந்து, அனைவருக்கும் ஏற்புடைய தேதியை அறிவிக்க வேண்டும் என்பதை யாரும் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டுமோ?’’

``ஊடகங்கள் தங்களின் கருத்துகளை ஒருதலைப்பட்சமாகப் போடாதீர்கள். கருத்துகளை திரித்தும் திணிப்பும் செய்யாதீர்கள்...’’

சர்வேயில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர், ``தேர்தல் ஆணையம் தன்னிச்சயாகச் செயல்பட வேண்டும். வாக்குச்சீட்டு முறை மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும்; பணத்துக்காக வாக்குகளை விற்காதீர்கள். திருவிழா நேரங்களில் தேர்தல் எதற்கு, மற்றொரு நாளுக்கு தேர்தலை மாற்றலாம்’’ போன்ற கருத்துகளையே அதிகளவில் பதிவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின் செல்ல