Published:Updated:

மனோகர் பாரிக்கர் மறைவுக்குப் பிறகு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது பி.ஜே.பி!

மனோகர் பாரிக்கர் மறைவுக்குப் பிறகு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது பி.ஜே.பி!
மனோகர் பாரிக்கர் மறைவுக்குப் பிறகு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது பி.ஜே.பி!

பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சரும் கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர் கடந்த மார்ச் 17-ம் தேதி உயிரிழந்தார். அதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் கோவா பி.ஜே.பி-யின் முக்கியத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பிரான்சிஸ் டி சோசா உயிரிழந்தார். கோவாவில் நடைபெற்ற கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், பி.ஜே.பி-க்கு 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தனர். எந்தக் கட்சியும் போதுமான இடங்களில் வெற்றி பெறாத நிலையில் பி.ஜே.பி சுயேச்சைகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்தனர்.

ஏற்கெனவே, ஆட்சியில் உள்ள பி.ஜே.பி-க்கு சட்டமன்றத்தில் போதுமான பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் எனச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான சந்திரகாந்த் கவுலேக்கர் சார்பில் கோவா ஆளுநருக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. மனோகர் பாரிக்கரின் மறைவுக்குப் பிறகு, கோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவி ஏற்றார். இந்நிலையில் பி.ஜே.பி-யின் ஆட்சி மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 19 உறுப்பினர்களின் ஆதரவு தேவையான நிலையில், பிரமோத் சாவந்த் தலைமையிலான பி.ஜே.பி-க்கு 20 உறுப்பினர்களின் ஆதரவு பெற்று வெற்றி பெற்றனர். பி.ஜே.பி-க்கு எதிராக 15 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.