`சிவகங்கையில் ஹெச்.ராஜா, தூத்துக்குடியில் தமிழிசை!’ - பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பா.ஜ.க சார்பில், நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் ரேஸில் அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க கைகோத்துள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கோயம்புத்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி, தமிழகத்தைப் பொறுத்தவரை
கோயம்புத்தூர் தொகுதி - சி.பி.ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி - தமிழிசை சௌந்தரராஜன்
ராமநாதபுரம் - நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி - பொன்.இராதாகிருஷ்ணன்
சிவகங்கை - ஹெச்.ராஜா
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
லக்னோவில் - ராஜ்நாத் சிங்
காந்திநகர் - அமித்ஷா
வாரணாசி - மோடி
மதுரா - நடிகை ஹேமமாலினி
ரேபரேலி - சந்தோஷ்குமார் கங்குவார்
அருணாச்சல் கிழக்கு - கிரண் ரிஜிஜூ
ஸ்ரீநகர் - கலீத் ஜஹாங்கீர்
ஜம்மு-காஷ்மீர் - ஜூகல் கிஷோர்
உதம்பூர் - ஜிதேந்திர சிங்
அனந்த்நாக் - சோஃபி யூசப்
உன்னாவ் - சாக்ஷி மகாராஜ்
இந்தப் பட்டியலில் பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி பெயர் இல்லை.