Published:Updated:

`நேர்மையான வாக்குப்பதிவு’ - தஞ்சையில் மொய்விருந்து மூலம் நடத்தப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு

`நேர்மையான வாக்குப்பதிவு’ - தஞ்சையில் மொய்விருந்து மூலம் நடத்தப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு
`நேர்மையான வாக்குப்பதிவு’ - தஞ்சையில் மொய்விருந்து மூலம் நடத்தப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு

நூறு சதவீத வாக்கு பதிவை ஏற்படுத்தவும், மக்கள் நேர்மையாக முறையில் வாக்களிக்க வலியுறுத்தியும் பேராவூரணியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மொய் விருந்து நடத்தி  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாழும்மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, தொழில் தொடங்க மற்றும் வணிகத்தை மேம்படுத்த ஆடி மாதங்களில் பொய் விருந்து நடத்துவார்கள். இதில் வரும் மொய் பணத்தை வைத்து தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதோடு, பொருளாதார ரீதியாக வாழ்கையையும் மேம்படுத்தி கொள்வார்கள். இப்படி நடத்தபடும் மொய் விருந்து அந்தப்பகுதியில் ரொம்பவே பிரபலம் மேலும் இந்த மொய் விருந்தில் ஆயிரம் முதல் கோடி வரை பணம் புழக்கம் இருக்கும் என கூறுவார்கள் மக்கள்.

இந்த நிலையில் தேர்தல் அலுவலர் கலெக்டர் அண்ணாதுரை நேர்மையான மற்றும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில், "தேர்தல் விழிப்புணர்வு மொய்விருந்து விழா" நடத்துவதற்கு உத்தரவிட்டார். மேலும் இந்த மொய் விருந்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதோடு இதில் கலந்து கொள்ளும் மக்கள் யாருக்கு வாக்களித்தோம் என தெரிந்து கொள்ளும் வகையில் அறிமுகபடுத்தப்பட்டுள்ள புதிய முறையை அடையாளப்படுத்தபட்டது. விவிபேட் மாதிரி வாக்கு இயந்திரத்தில் இருந்த மாதிரி சின்னங்களில் மக்கள் வாக்களித்ததோடு யாருக்கு வாக்களித்தோம் என்பதையும் தெரிந்து கொண்டனர்.

இந்த விழாவில், மொய் விருந்திற்கு வருபவர்களுக்கு எப்படி வரவேற்பு கொடுக்கப்படுமோ அதே போல் சந்தனம், பூ கொடுத்து வரவேற்பு கொடுத்தனர்.மேலும் மொய் விருந்தில் எப்படி உணவு வழங்கப்படுமோ அதை போலவே பலமான விருந்தும் வந்திருந்த பொதுமக்களுக்கு கொடுத்தனர். இந்த மொய் விருந்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர். இதே போல் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடந்த மற்றுறொரு விழாவில் நூறு சதவீத வாக்கையும் நேர்மையாக வாக்களிப்பதை வலியுறுத்தியும் கலெக்டர் அண்ணாதுரையில் தலைமையில் உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் ஏராளமான கல்லுாரி மாணவ,மாணவிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துக்கொண்டு உறுதி எடுத்துக்கொண்டனர்.

இது குறித்து பேசிய அதிகாரி ஒருவர், ``தேர்தல் ஆணையம் மக்கள் நூறு சதவீதம் வாக்களிப்பதற்கும் நேர்மையாக வாக்களிப்பதற்கும் பல்வேறு விழிப்புணர்வு  நிகழ்ச்சிகளை செய்து வருகிறது. ஒரு ஏரியாவில் உள்ள பிரபலாமான நிகழ்ச்சி மற்றும் விழாக்களில் இது போன்று எடுத்து கூறுவதால் ஈஸியாக மக்களை சென்றடையும் அதற்காகத்தான் இந்த ஏற்பாடு.இந்த முறை நிச்சயம் வாக்கு பதிவு அதிகரிக்கும்” என்றார்.