Published:Updated:

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லோகோவிலிருந்து காங்கிரஸ் பெயர் நீக்கம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லோகோவிலிருந்து காங்கிரஸ் பெயர் நீக்கம்!
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லோகோவிலிருந்து காங்கிரஸ் பெயர் நீக்கம்!

ட்சிக் கொடி மற்றும் சின்னத்தில் சேர்ந்து இருந்த 'காங்கிரஸ்' என்ற பெயரை நீக்கியிருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. ஆனால், அக்கட்சியில் தலைவர் மம்தா பானர்ஜி இதுகுறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

1998-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்து, திரிணாமுல்  காங்கிரஸ் கட்சியைத்  துவங்கினார் மம்தா பானர்ஜி. கட்சியைப் பதிவு செய்ததும், அவருக்கு `இரு மலர்கள்' சின்னம் ஒதுக்கப்பட்டது. தற்போது இருபத்தோர் ஆண்டுகளுக்குப் பின், கட்சிக் கொடி மற்றும் சின்னத்தில் மாற்றம் செய்துள்ளார்.

இதற்கு முன், காங்கிரஸ் கட்சியின் கொடிமீது, இரு மலர்கள் வரையப்பட்டு, திரிணாமுல் காங்கிரஸ் என எழுதப்பட்டிருக்கும். தற்போது,  வண்ணங்கள் மாற்றப்பட்டு, ஊதா நிற பின்புலத்தில், இரு வெள்ளை மலர்கள் இருப்பதுபோல மாற்றப்பட்டுள்ளது.

மேலும், திரிணாமுல்  காங்கிரஸ் என்ற பெயரில், காங்கிரஸ் நீக்கப்பட்டு, பச்சை நிறத்தில், திரிணமுல் என மட்டுமே எழுதப்பட்டுள்ளது. ஆனால், கட்சியின் பெயரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 'திரிணாமுல்' என்ற பெயர் மட்டுமே இருக்க வேண்டும் என்று தலைமை உத்தரவிட்டிருக்கிறது. அதோடு, அக்கட்சியின் சமூக வலைதளங்கள் அனைத்திலும் புதிதாக மாற்றம் செய்யப்பட்ட சின்னம்தான் இடம்பெற்றுள்ளது. மேலும், பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 17 தொகுதிகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் 41 சதவிகிதம் பெண் வேட்பாளர்களுக்குச் சமீபத்தில் தொகுதி ஒதுக்கியிருந்ததார் மம்தா.