Published:Updated:

`சட்டையைக் கழற்றச் சொன்ன அதிகாரிகள்' - திருப்பூரில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஏற்பட்ட சோதனை

`சட்டையைக் கழற்றச் சொன்ன அதிகாரிகள்' - திருப்பூரில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஏற்பட்ட சோதனை
`சட்டையைக் கழற்றச் சொன்ன அதிகாரிகள்' - திருப்பூரில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஏற்பட்ட சோதனை

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட சட்டையை அணிந்து வந்ததால், அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி அந்தச் சட்டையைக் கழற்றிவிட்டு வேறு உடையில் வருமாறு கூறியது பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

`சட்டையைக் கழற்றச் சொன்ன அதிகாரிகள்' - திருப்பூரில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஏற்பட்ட சோதனை

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் சந்திரகுமார் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வந்திருந்தார். கம்பீரமான தோற்றத்துடன் மீடியாக்களுக்குப் போஸ் கொடுத்துக்கொண்டே ஆட்சியராக வளாகத்தில் நுழைந்த அவரை, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அவரது சட்டையில் மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததால் அவரை உள்ளே அனுமதிக்க முடியாது என்றும், அந்தச் சட்டையை கழற்றிவிட்டு வேறு உடையை அணிந்து வந்தால் மட்டுமே வேட்புமனுவைத் தாக்கல் செய்ய அனுமதிப்போம் எனவும் அறிவுறுத்தினார்கள். இதனால் குழப்பமடைந்த வேட்பாளர் சந்திரகுமார், சட்டையில் இருந்த டார்ச் லைட் சின்னத்தைக் கையால் மறைத்தபடியே வெளியே சென்று, வேறு உடையை மாற்றிவிட்டுப் பின் மீண்டும் வந்தார். 

பின்னர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரகுமார், ``டெபாசிட் தொகையைக் கட்டி வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வரும் எங்களிடம் இத்தனை சோதனைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள், இந்த வளாகத்தில் அடிப்படைத் தேவையான குடிதண்ணீர் வசதியைக்கூட ஏற்பாடு செய்திருக்கவில்லை. திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் அனைத்தும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ, இன்னமும் அதே நிலைமையில்தான் இருக்கின்றன. திருப்பூரின் தொழிற்துறையும் ஜி.எஸ்.டி மற்றும் டிராபேக் ஆகியவற்றால் முடங்கிப்போய் கிடக்கிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, திருப்பூரின் தொழில் வளம் மற்றும் தொழிலாளர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்'' எனத் தெரிவித்துவிட்டுச் சென்றார்.