Published:Updated:

24 மணி நேரமும் ஜோதிமணிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும்! - டி.ஜி.பி-யிடம் மனு

24 மணி நேரமும் ஜோதிமணிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும்! - டி.ஜி.பி-யிடம் மனு
24 மணி நேரமும் ஜோதிமணிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும்! - டி.ஜி.பி-யிடம் மனு

ரூர் நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு துப்பாக்கித் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரூர் மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வேட்பு மனுத் தாக்கல் செய்யச் சென்றபோது போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவருக்கு கலெக்டர் கொடுத்த நேரத்தில், தம்பிதுரை வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் உடனடி அனுமதி கொடுத்து இவரைக் காக்க வைத்துள்ளனர். இதனால் அங்கே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சமூக வலைதளத்தில் ஜோதிமணியை அவதூறாகப் பேசி கருத்து தெரிவித்த பா.ஜ.க-வினர் பற்றியும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


 
இந்நிலையில், காங்கேயத்தைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனாதிபதி என்பவர் டி.ஜி.பி-க்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ``கடந்த மார்ச் 25-ம் தேதி, கரூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்துக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்த கரூர் வேட்பாளர் ஜோதிமணிக்கு நடந்த சம்பவங்கள் குறித்து மிகுந்த கவலைக்கு உள்ளாகியுள்ளோம். அவருடைய பாதுகாப்பு குறித்து அச்சமடைகிறோம். அதை உங்கள் கவனத்துக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். இவருக்கு எதிராகப் போட்டியிடும் வேட்பாளரின் அரசியல், செல்வாக்கு, பணம் மற்றும் ஆட்கள் பலத்தைக் கருத்தில் கொண்டு, ஜோதிமணிக்கு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.