Published:Updated:

ஜூன் 8ல் அ.தி.மு.க செயற்குழு கூடுகிறது!

Vikatan Correspondent
ஜூன் 8ல் அ.தி.மு.க செயற்குழு கூடுகிறது!
ஜூன் 8ல் அ.தி.மு.க செயற்குழு கூடுகிறது!
ஜூன் 8ல் அ.தி.மு.க செயற்குழு கூடுகிறது!

அ.தி.மு.க செயற்குழு கூட்டம் சென்னையில் ஜூன் 8ஆம் தேதி நடைபெறுகிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம் வரும் 8ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறும். செயற்குழு கூட்டம் கழக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.

##~~##
இதில் பங்கேற்கும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். எனவே செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்" என்று ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.